ஞாயிறு, 30 டிசம்பர், 2012

தாகம்!!





நாக்கு வரண்டு வாய்உலர்ந்து
    நனைக்கக் கொஞ்சம் நீர்வேண்டித்
தேக்கி வைத்த குடத்தினுள்ளே
    தெளிந்த நீரை எடுக்கும்முன்
பாக்கள் நிறைந்த நூல்ஒன்று
    பக்கம் கிடக்க! படித்தவுடன்
நாக்கின் தாகம் நளித்தேனால்
    நனைத்த உணர்வை நான்பெற்றேன்!!


அருணா செல்வம்.

16 கருத்துகள்:

  1. அப்படியே அந்நூலிலிருந்து இரெண்டு பாக்களை படித்துக்க்காட்டக் கூடாதா? எங்களுக்கும் தாகம் தீருமில்ல ? ரொம்ப மோசம் நீங்க !

    அட நாந்தாங்க ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் “நாந்தாங்க“

      அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பாடலை எழுதுகிறேன்.
      எப்படி இனிக்கிறதென்று பாருங்கள்.

      எத்தனையோ மொழியுண்டாம்! இருந்தாலும் உளமினிக்கும்
      எந்தாய் உன்போல்
      முத்தனவே நின்றொளிரும் மொழியுண்டோ? முச்சங்கம்
      முறையாய் உண்டோ?
      இத்தரையில் நெறியுட்டும் இலக்கிமும் இலக்கணமும்
      எழிலாய்ப் பெற்ற
      தித்திக்கும் செந்தமிழே! திகட்டாத தெள்ளமுதே
      சிறந்து வாழ்வே!

      நன்றி.

      நீக்கு
  2. அடடா அற்புதமான நிகழ்வு காட்சியாய் விரிகிறது.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சசிகலா.

      உங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் தோழி.

      நீக்கு
  3. யாருடைய நூல் அது.....:)

    உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதாயினி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள் எழுதிய நுால் அது.

      மிக்க நன்றி சிட்டு.

      நீக்கு

  4. வணக்கம்!

    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கலையில் கவியில் கமழ்மணம் காண்க!
    வலையில் வளா்புகழ் வாய்க்க! - நிலையாய்ப்
    பெரு..நா புலவா் பெறும்தமிழ் மாண்பை
    அருணா அடைக அணிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன். பிரான்சு
    01.01.2013

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் அவர்களுக்கு

      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு

  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    பதிலளிநீக்கு