செவ்வாய், 11 டிசம்பர், 2012

எழுதுவது பெண்ணா..? ஆணா...? (செய்தி)





நட்புறவுகளுக்கு வணக்கம்.

    நான் இப்படி ஒரு தலைப்பில் பதிவிட காரணம்...

    அருணா செல்வம் என்கிற நான்... ஆணா? பெண்ணா...? என்ற சந்தேகம் நிறையப்பேருக்கு வந்து குழப்புகிறது என்பதால் தான். முக்கியமாக தென்றலிடமிருந்து புயலாய் வந்த மடலும் ஒரு காரணம் தான்.

     இதற்கு முன் என் ஆசிரியர் கவிஞர் கி. பாரதி தாசன் அவர்களும் “அருணா... நம் குறளரங்கத்தில் வாசித்த அனைவரின் பாடல்களையும் படத்துடன் என் வலையில் போடுவதாக இருக்கிறேன். அதனால் உன் பாடலுடன் உன் படத்தையும் போடலாமா?“ என்று கேட்டு மின்மடல் அனுப்பினார்.

     நான், “வேண்டாம்... என் புறா படத்தையே போடுங்கள்“ என்று சொன்னால் நிச்சயம் “தைரியம் இல்லாதவகள் எதற்கு கவிதை படைக்க வேண்டும்.?“ என்று பாட்டாலேயே போட்டுத் தாக்குவார்.

    என்ன செய்வது...? என்று குழம்பிவிட்டேன்.

    இப்பொழுது வந்த இந்தக் குழப்பம் போலவே நான் வலையிடத் தொடங்கும் பொழுதும் வந்தது. துவக்கத்தில் எனக்குப் பின்னோட்டம் இட்ட அனைவரும் “ங்க“ என்று பின்னோட்டம் இட்டதால் சுமூகமாகத் தான் போய் கொண்டிருந்தது. ஆனால் ஒரு பதிவில் “நண்பரே“ என்று ஒருவரும் “தோழி“ என்று ஒருவரும் பதிவிட்ட போது குழம்பி விட்டேன்.

     எந்தக் குழப்பமானாலும் என் நெருங்கிய ஃபிரெண்ட்ஸ் மூன்று பேர் உள்ளார்கள். (அதில் ஒருவர் தான் எனக்கு வலைப்பூ திறந்து கொடுத்தார்.) அவர்களிடம் இதைப் பற்றியும் சொன்னேன்.

    உடனே அதில் ஒருவர்...“அருணா நீ பெண் என்றே சொல்லிக்கொள். ஏனென்றால் எழுத்துலகில் பெண் படைப்பாளிகளுக்கு நல்ல மதிப்பிருக்கிறது“ என்றார்.

    இரண்டாமவர்... “அருணா... நீ ஆண் என்றே சொல்லிக்கொள். ஏனென்றால் ஆண்கள் எந்த மாதிரியான பகிர்விற்கும் தைரியமாக பதில் அளிக்கலாம். நீயும் தயக்கம் இல்லாமல் எந்த இடுகையும் இடலாம்“ என்றார்.

    மற்றவர்.... “அருணா... நீ பெண் என்றோ... ஆண் என்றோ சொல்லாதே... அப்பொழுது தான் உன் எழுத்திற்கு கிடைக்கும் உண்மையான மதிப்பை அறிய முடியும்“ என்றார்.

     (நானும் குழம்பிப்போய் அன்றிரவு முழுவதும் முதலில் மல்லாக்கப் படுத்தும்.. பிறகு குப்புறப் படுத்தம்... அதன் பிறகு எழுந்து நின்றும் யோசித்தேன்.)

    எனக்கும் மூன்றாமவர் சொன்னதே சரியென்று பட்டது. அதிலிருந்து பின்னோட்டங்களில்  “நண்பா“ என்பவர்களுக்கு “நண்பா“ என்றும்... “தோழி“ என்பவர்களுக்குத் “தோழி“ என்றும் பதிலளித்து வந்துள்ளேன்.



     ஆனால் நேற்று “தென்றல்“ இடமிருந்து ஒரு மின்மடல்... “சகோ... நீங்கள் ஆணா? பெண்ணா?“ என்று கேட்டு எழுதியிருந்தார்.

     வலை துவங்கியதிலிருந்து நல்ல தோழி அவர். அவரையும் குழப்புகிறேனா... என்று நான் குழம்பி... என்ன செய்யலாம் என்று யோசித்து... யோசித்து...

    இப்பொழுது என் மூன்று ஃபிரெண்ஸ்சும் அருகில் இல்லாததால்... அடுத்தப் பதிவில் தெரிவித்து விட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.


   தவிர.... நட்புறவுகளே... நான் ஆணோ.. அல்லது பெண்ணோ... எந்தப் பாலினமாக இருந்தாலும் முன் போலவே என் ஆக்கங்களுக்கு உண்மையான கருத்திட்டுத் தொடர்ந்து என்னை ஊக்குவிக்க வேண்டுகிறேன்.

    அது மட்டுமல்லாமல்... நான் எப்பொழுதும் போல் தான் மற்றவர்களின் பதிவிற்கு பதிலிடுவேன். இதைத் தவறென்று கொள்ளாமல் உங்கள் வீட்டு சின்னப் பிள்ளையாக அல்லது.... மிக மிகச் சின்னப் பிள்ளையாக என்னை நினைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



நன்றியுடன்

அருணா செல்வம்.

37 கருத்துகள்:

  1. ஐயோ என்னங்க இது சின்னப்புள்ளைத்தனமா...
    இங்கே தரமான படைப்புக்களுக்கு என்றும் இடம் இருக்கிறது உங்கள் படைப்புக்களில் தரம் கண்டேன் அதனால்தான் உங்களைத் தொடர்ந்தேன்.

    இதில் ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஓரினம்தான் ஆனால் உங்கள் படைப்புக்களை தொடர்ந்து படித்தவர்களுக்கு நீங்கள் யாரென்று தெரியும். எனக்கும் எதுக்கும் அடுத்த பதிவு வரை காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் ஊக்கமளித்து எழுதிய
      பின்னோட்டத்திற்கும் மிக்க நன்றி ஆத்மா.

      நீக்கு
  2. அடடா என் மெயிலுக்கு பதில் இல்லையே என்று பார்த்திருந்தால். இங்கு ஒரு பதிவே வந்துவிட்டதே சகோ உங்க எழுத்து தான் எங்களுக்கு முதல் அறிமுகம் அதன் ரசிகையாகவும் இருக்கிறேன். அதனால் நீங்கள் எதையும் சொல்லவில்லை என்றாலும் சரியே. என்றும் எனக்கு நீங்க சகோ .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் ஊக்கமளித்து எழுதிய
      பின்னோட்டத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  3. பதிவுதான் முக்கியமே தவிர பதிவர் ஆணா பெண்ணா என்பது முக்கியமில்லை! அழைப்பதில்தான் குழப்பம் ஏற்படும்! அதை தவிர வேறொன்றும் இல்லை! நீங்கள் எப்போதும் போல பதிவிடுங்கள்! வந்து வாசிக்கிறோம்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் ஊக்கமளித்து எழுதிய
      பின்னோட்டத்திற்கும் மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  4. அருணா 75% பதிவுலகம் அனானிகளின் கோட்டை தான் கிட்ட தட்ட.. ஆண் பெண் தாண்டி பொதுப்பெயர் "பதிவர்" என்றே பார்க்க படுவார்கள்.. ஆனால் ஆண் பெண் என்று அடையாளப்படுத்துவதில் மைனஸ் இருப்பதாய் எனக்கு படவில்லை.. ஆனால் அதை தவிர்த்தாலும் பிழை இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் ஊக்கமளித்து எழுதிய
      பின்னோட்டத்திற்கும் மிக்க நன்றி ஹாரி.

      நீக்கு
  5. படைப்பா முக்கியம் படைப்புகள் தானே முக்கியம் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படைப்பா முக்கியம் படைப்புகள் தானே முக்கியம் ---

      அருமையான வாசகம்.
      தங்களின் வரவிற்கும் ஊக்கமளித்து எழுதிய
      பின்னோட்டத்திற்கும் மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  6. இப்போது கூட உண்மை வெளிவராமலே போய்விட்டதே :)
    அது சரி .பொதுவாக சகோ என்று போட்டால் இரு இனத்தவரையும்
    சாரும் என்பது என் கருத்து சகோ( தரி ) சகோ (தரன் ) .நன்றி சகோ
    பகிர்வுக்கு :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ.... அடுத்தப் பதிவில் சொல்கிறேன் என்று சொன்னேனே சகோ....

      தங்களின் வரவிற்கும் ஊக்கமளித்து எழுதிய
      பின்னோட்டத்திற்கும் மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  7. kuzhampiyavan naanumthaan....


    athai solvathil thavarillaiye ....
    sako....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் குழம்பினீர்களா சகோ.

      சரி சொல்லிவிடுகிறேன்.
      தங்களின் வரவிற்கும் ஊக்கமளித்து எழுதிய
      பின்னோட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.

      நீக்கு

  8. வணக்கம்!

    காலத்தை வீணாக்கும் பதிவை எல்லாம்
    கண்டிப்பாய் நீக்கவேண்டும் அருணா செல்வம்!
    ஞாலத்தை உய்விக்கும் ஊக்கம் வேண்டும்!
    நற்றமிழே மணம்வீசும் ஆக்கம் வேண்டும்!
    பாலத்தை அமைப்பதுபோல் வன்மை மிக்க
    பார்வையினை பதிப்புலகில் படைக்க வேண்டும்
    ஆலத்தை வேலத்தை மனத்தில் கொள்க!
    அருந்தமிழின் பற்றேந்தி உரைத்தேன் நானே!

    கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலத்தைப் போற்றுகின்ற பதிவை எல்லாம்
      கடைசிவரைப் படிப்பதற்கு யாரும் இல்லை!
      ஞாலத்தை உய்விக்கும் அளவில் நன்றாய்
      நற்றமிழில் எழுதிடவும் ஆற்றல் உண்டே!
      சாலத்தை எழுதினாலே மனங்கள் ஏற்றுச்
      சலிப்பின்றிப் படிக்கின்ற கணக்கைக் கண்டேன்!
      பாலத்தை அமைக்கின்றேன்! அதிலே மென்மை
      பைந்தமிழே நடந்திடுவாள்! நீரும் காண்பீர்!

      கவிஞர் அவர்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. நல்ல கருத்துப்பதிவு!
      சற்றும் அசரா பதில் கருத்துப்பதிவு!
      நன்றாக இருக்கிறது...
      இது போன்ற கருத்துப்பரிமாற்றங்களை காணும்போதுதான் என்னுள் பெரும் ஏக்கம் உண்டாகிறது.
      நம் தமிழ் மொழியினை மேன்மையினை, சுவையினை, ..., அழித்துப்புதைத்துவிட்ட இக்காலத்திலும் இவ்வளவு சுவையான சொல் விளையாட்டு இருக்கும்போது, அன்றைக்கு எவ்வளவு இருந்திருக்கும். அதையெல்லாம் நான் சுவைக்க முடியாது போய்விட்டது.

      நீக்கு
    3. வணக்கம்.

      படிக்கும் ஏக்கம் கொண்டாலே
      படைக்கும் திறமை வந்துவிடும்!
      துடிக்கும் இதயம் கொண்டிருந்தும்
      துணிவை மனமோ அற்றிருந்தால்
      இடிக்கும் இடியும் பயங்கொடுக்கும்!
      எதிர்க்கும் குரலில் குரல்நடுங்கும்!
      முடிக்கும் செயலை எதிர்கொண்டால்
      “முடியா(து)“ எனுஞ்சொல் பொய்யன்றோ!

      நன்றி ஜெயசந்திரன்.

      நீக்கு
  9. எப்பாலினமாக இருந்தால் என்ன, வாசிப்புக்கு பாலினப் பாகுபாடு அவசியமில்லை. பாலினம் தெரிந்துக் கொண்டு மணமா முடிக்கப் போகின்றார்கள். எழுதவது நிச்சயம் மனிதன் தானே, என்பதை உணர்ந்தால் போதும். நீங்கள் விரும்பினால் உங்கள் பாலினத்தைக் கூறலாம், கூறாமலும் விடலாம். சுஜாதாவையே பெண் என நின்த்தவர்கள் தமிழர்கள். பெயர் மயக்கமும், பகுத்து ஒதுக்கலும் மனித இயல்பு. மாற்றுச் சிந்தனை பெருக, இப்படியான ஒதுக்கல் மனோபாவங்களை உடைத்தெறிய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே... நீங்களும் என் பதிவுகளைப் படிக்கின்றீர்கள் எனும் போதே மகிழ்கிறேன்.
      உங்களின் கருத்துக்களை முழுமையாக ஏற்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  10. எனக்கு எந்த குழப்பமும் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... நீங்கள் என்னை ஒரு பாடலில் “தம்பீ“ என்றீர்கள். ஞபாகம் இருக்கிறது புலவர் ஐயா.

      நீக்கு

  11. முன்பு ஒருமுறை உங்கள் profile -ல் பார்த்த நினைவு. மறுபடியும் confirm செய்ய நுழைந்தால் போச் ! ஒன்றுமே காணோமே. என் பதிவில் இந்தக் குழப்பம் பற்றி எழுதி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படீங்களா...? நீங்களும் குழம்பித்தான் போய் இருக்கிறீர்கள்.
      ஆனால் குழப்பங்கள் தான் நன்றாக யோசிக்கத் துாண்டும்.

      தங்களின் வரவிற்கும் எழுதிய அனுபவ
      பின்னோட்டத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  12. ஆணோ, பெண்ணோ பதிவுகளின் கருத்துக்காக படிப்பவர்கள் என்றுமே மாறப்போவதில்லை. எழுத்தாற்றல்,கற்பனைத்திறன்,மொழியறிவு, உலக அறிவுதான் பதிவுலகிற்கு தேவை .எழுத்துலகமும் சமூக மாற்றத்திற்கான ஒரு இடம். பெயரோ, புகைப்படமோ வெளிக்காட்ட பயப்படும் நாம் எப்படி நம் சொந்த கருத்துக்களை முன் வைத்து சமூக மாற்றம் ஏற்பட காரணமாவோம். அச்சத்தில் இருப்பதைவிட ஆபத்தை ஒருமுறை சந்திப்பது நல்லது.இது என்னுடைய வலைப்பூ வாசகம் .அதுவே எந்தன் அறிவுரையும் கூட...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “அச்சத்தில் இருப்பதைவிட ஆபத்தை ஒருமுறை சந்திப்பது நல்லது.“

      அருமையான வாசகம்.

      தோழி... இதில் என் தவறு என்பது எதுவும் இல்லை. வலைப்பு அமைக்கும் பொழுதே அதை எழுதிவிட்டிருந்தால் இந்தக் குழப்பம் வந்திருக்காது. அப்படி எழுதாமல் விட்டதால் வந்த குழப்பத்தை எனக்குச் சாதகமாக்கிக் கொண்டேன்.
      தவிர நான் ஆண் என்றால் என்ன?
      பெண் என்றால் தான் மற்றவர்களுக்கு என்ன வந்துவிடப் போகிறது?

      இதைக்குறித்து பலபேர் பின்னொட்டத்தில் கேட்டதால் அவர்கள்
      அனைவருக்கும் என் வலை பதிவிலேயே பதில் கொடுத்துவிடலாம் என்று இந்த பதிவை இட்டேன்.
      ஆனால் இவ்வளவு கருத்துக்கள் குவியும் என்று நான் எதிர் பார்க்க வில்லை.

      ஆனால் இதுவும் நல்லதுக்குத் தான். நிறைய பதிவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
      தவிர உடன் பதிவிடுபவர்களுக்கு அவர்கள் கொடுக்கும்.. கொடுத்த ஊக்கம்... அப்பப்பா...
      நிச்சயம் உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்.

      நன்றி தோழி.

      நீக்கு
  13. பார்ரா...எப்பூடீ எல்லாம் பதிவை தேத்துறாங்க ஷ்...இப்பவே கண்ணை கட்டுதே சரி - சகோ, என்னையும் அப்படிதேன் ஆரம்பத்தில் நினைத்தார்கள்....நீங்கள் எப்படி வேணா இருங்கள் - பட் பதிவை அப்ப அப்ப பதிவு பண்ணுங்கள் - தொடருங்கள் தொடருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டுபிடிச்சிட்டீங்களா மனசாட்சி...?

      (நான் எனத்தான் செய்வது... இங்கே எல்லோருமே புத்திசாளிகளாக இருக்கிறார்களே...!!!)

      வருகைக்கும் கருத்திற்கும்
      ஊக்கமளிக்கும் பின்னோட்டத்திற்கும்
      மிக்க நன்றி முத்தரசு மனசாட்சி.

      நீக்கு
  14. அருணா...நான் உங்களை பெண் என்று நினைத்து தான் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறேன். எனக்கு முகம் காட்டும், பாலினம் காட்டும் தைரியம் பிடிக்கும். நான் முகமூடி இட்டு கொண்டதே இல்லை.
    உங்களையும் அப்படியே இருக்க விளைகிறேன்.
    பழைய காலம் மாதிரி புனை பெயர், பூனை பெயர் எல்லாம் இப்போது தேவையில்லை. எது சொல்வதாக இருந்தாலும் நம் முகம், பாலினம் வெளிகாட்டி சொல்லலாம். தவறு ஒன்றும் இல்லை.

    நீங்கள் ஆணாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்கிறது....அடுத்த பதிவில் எதிர்பார்க்கிறேன் உங்களை பற்றி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. (அகிலா மேடம்... நீங்கள் போலிஸ்காரர் மனைவி என்பதை நிறுபித்துவிட்டீர்கள்.
      என் முகத்தைக் காட்ட எனக்கு பயம் இல்லை.
      ஆனால்....
      நீங்களெல்லாம் பயந்துவிடுவீர்கள் என்று தான் என் முகத்தைக் காட்ட பயமாக இருக்கிறது.)

      சே.. சே... நீங்கள் எவ்வளவு சீரியஸாக எழுதி இருக்கிறீர்கள்... ஆனால் எனக்கு இவ்வளவு சீரியஸாக எல்லாம் எடுத்துக்கொள்ளவோ எழுதிடவோ வராதுங்க. நான் ஜாலி டைப்.
      ஈசியா எடுத்துக்கொள்ளுங்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      ஊக்கமளிக்கும் பின்னோட்டத்திற்கும்
      மிக்க நன்றி அகிலா மேடம்.

      நீக்கு
  15. சீண்டிப் பார்க்கும் விமர்சனங்களை எதிர்நோக்க போதிய திடமிருந்தால் பாலின பாகுபாடு பற்றிய கவலை இல்லாமல் எழுதலாம்.இதற்கு மல்லாக்க,குப்புற படுத்தோ, பின்பு எழுந்து நின்றோ யோசிக்காதீர்கள்."சாதாரண விசயங்கள்" தவிர்த்து "ரண விசயங்கள்" பற்றி எழுதும் போது பார்வையாளர்களின் எழுத்தை விட பாதிக்க பட்டோரிடம் இருந்து வரும் எழுத்து வீரியம் மிக்கதாகவே இருக்கும்.சரி நீங்கள் ஆணா பெண்ணா என்பது இருக்கட்டும். அருணா செல்வம் என்பதே உங்களின் உண்மையான பெயர்தானா? என்ற சந்தேகம் எனக்கு உள்ளது(படிக்கும் போதே யோசிப்போமுல்ல!) இதனை வைத்தும் ஒரு பதிவிடுங்கள் அருமை செல்லம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேக்காலி ஐயா... அருமையான ஊக்கமளிக்கும் பின்னோட்டமளித்ததர்க்கு மிக்க நன்றி.

      ஆனாலும் நீங்கள் ரொம்ம்ம்ம்ப யோசித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அருணா என்பதே என்னை அழைக்கும் பெயர்.

      மிக்க நன்றி சேக்காலி ஐயா.

      நீக்கு
    2. முக்காலி,நாற்காலி யோட என்னையும் சேக்காலி ஆக்கீட்டிங்களே.நான் (சேக்)காலி இல்ல (சேக்)காளிங்கோ

      நீக்கு
    3. வணக்கம் சேக்காளி ஐயா.

      நீங்கள் அருணா செல்வத்தை மாற்றி எழுதும் போது.... நானும் சற்று மாற்றி எழுதினேன்.(நாங்களும் படிக்கும் பொழுதே யோசிப்போமில்ல)

      தவிர முதலில் “சீக்காளி“ என்று தான் எழுதினேன். பிறகு முதன்முதலில் நம் வலைக்குள் வருகிறார் இப்படியா வரவேற்பது என்று சற்று மாற்றி... ஆனால் ஒன்றுங்க... முக்காலி, நாற்காலியை ஒரு வடிவ பொருளுக்கு ஒப்பிடலாம். ஆனால் சேக்காளி....?
      (சேக்காளி என்றால் தழும்பை உடைய மனிதர் என்று அர்த்தம் வருகிறது. நான் தேடி கண்டுபிடித்தது சரிங்களா...?)

      போகட்டும் விடுங்க.
      இந்த மாதிரியான "சாதாரண விசயங்கள்" தவிர்த்து "ரண விசயங்கள்" பற்றி பேச ஊக்கவிப்புக் கொடுத்ததற்கு மிக்க நன்றி சேக்காளி ஐயா.

      நீக்கு
  16. என்னுடைய முதல் வருகையிலேயே பெயர் குழப்பமான பதிவை படிக்க நேர்ந்திருக்கிறது.

    பின்னூட்டங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

    அடுத்த பதிவை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நீங்கள் ஆணா, பெண்ணா என்று அறிய அல்ல; எப்படி சமாளிக்கிறீர்கள் என்று பார்க்க - படிக்க!

    http://ranjaninarayanan.wordpress.com
    http://pullikkolam.wordpress.com
    http://thiruvarangaththilirunthu.blogspot.in/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரஞ்சனி அம்மா.

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு