புதன், 26 டிசம்பர், 2012

அன்னை கிடைப்பாளா?





ஆசை கொண்டு  அணைத்திடுவாள்!
     அன்பை என்றும் பொழிந்திடுவாள்!
பூசை செய்யும் தெய்வமவள்!
     பொன்னைப் போன்று உயர்ந்தவளே!
ஓசை கொண்ட இராகமவள்!
     ஒளிரும் வண்ண ஓவியமே!
காசைக் கொட்டிக் கொடுத்தாலும்
     கடையில் அன்னை கிடைப்பாளா?

அருணா செல்வம்.

36 கருத்துகள்:

  1. //வாடகைத்தாய் கிடைக்கும் அளவுக்கு காலம் மாறிவிட்டது//
    சும்மா சொன்னேன். கவிதை அழகு அன்னைக்கு ஈடு இணை இல்லை,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாடகைத் தாயிடம் பணம் கொடுத்தால் தான் பாசம் கிடைக்கும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

      நீக்கு
  2. கிடைக்காது?
    http://kaviyazhi.blogspot.com/2012/10/blog-post_13.html
    படித்து பாருங்கள்

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. நானும் அப்படி தான் நினைக்கிறேன் குட்டன் ஐயா.
      நன்றி.

      நீக்கு
  4. காசைக் கொட்டிக் கொடுத்தாலும்
    கடையில் அன்னை கிடைப்பாளா?

    அன்னையைத்தவிர எல்லாம் கிடைக்கும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஏன் சிலருக்குப் புரிவதில்லை...?

      நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  5. கோடிக் கோடியாய்க் கொட்டிக்கொடுத்தாலும்
    தாய்க்கு ஈடாகுமா ?
    அருமையான கவிதை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  6. அன்னையை போல் இன்னொரு அன்னைதான் இருக்க முடியும் :)

    பதிலளிநீக்கு
  7. //காசைக் கொட்டிக் கொடுத்தாலும்
    கடையில் அன்னை கிடைப்பாளா?//

    அன்னையைத்தவிர அனைத்தையும் வாங்கிடலாம்.
    நல்ல கவிதைக்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருட்டினன் ஐயா.

      நீக்கு
  8. இன்றைய திகதியில் ’விற்பனைக்கு அல்ல’ என்று சொல்லப்படுவது அன்னையின் அன்பு மட்டுமே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை அழகாக உரைத்தீர்கள் என் இனிய தோழி ஹேமா.
      மிக்க நன்றி.

      நீக்கு
  9. அன்னையையும் தாண்டியவள் காதல் மனைவி...ஒரு வேளை நீங்கள் பெண் என்பதால் அதை உணர முடியாமல் போய்விட்டது போலும்.

    அட நான்தாங்க. . .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட நான் தாங்க... (நீங்கள் யாராக இரந்தாலும் )

      வாழ்த்துக்கள்.
      அன்னையின் அன்பினை விட உயர்வான காதல் மனைவி
      அமைந்த வாழ்க்கை உலகத்திலே ஒரு சிலருக்குத் தான் கிடைக்கும்
      உங்களுக்குக் கிடைத்ததற்காக மீண்டும் வாழ்த்துகிறேன்.
      நன்றி.

      நீக்கு
  10. உண்மை. எந்த உணர்வுகளையுமே விலைக்கு வாங்க முடியுமா என்ன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  11. அன்னையின் அன்பு கடல் போன்றது! அது, காவிரியையும் ஏற்கும் கூவத்தையும் ஏற்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையாகச் சொன்னீர்கள் புலவர் ஐயா.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  12. அன்னையை போற்றும் கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு

  13. அன்னையின் அன்பு தெரியாதவன் நான். என் பதிவு “ யாதுமாகி நின்றாய் “ படித்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா... நீங்கள் கொடுத்தச் சுட்டியில் பதிவு
      இல்லை ஐயா.
      உங்களின் பதிவைப் படிக்க முடியாதது
      என் துர்ரதுஷ்டம்!
      திரும்பவும் தேடுகிறேன்.

      நீக்கு

  14. “ யாதுமாகி நின்றாய் “ சுட்டி தராவிட்டால் எப்படி படிப்பது. இதோ சுட்டி
    gmbat1649.blogspot.com/2011/06/blog-post_18.html.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பாலசுப்பரமணியன் ஐயா.

      நிச்சயம் படித்துப் பார்க்கிறேன்.

      நீக்கு
  15. 5 பேர் கொண்ட குடும்பத்தில் 4 துண்டு கேக் இருந்தால்,எனக்கு கேக் பிடிக்காது என்று சொல்லும் ஒரே ஜீவன் தாய் தான், தாயை போல வருமா??????? அப்துல் தயுப், Lacourneuve,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் அன்னையின் மனம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நட்பே.

      நீக்கு
  16. மேகத்தில் மின்னும் நட்சத்திரம் – என்
    தேகத்தை ஆக்கிய உயிர்ச்சித்திரம் -என்
    தாகத்தில் பாலீந்த தாய்ச் சித்திரம்.
    ஈகத்தில் நீயொரு உயர் சித்திரம்.

    அருணாவின் வரிகள் நன்று
    இனிய வாழ்த்து.

    பதிலளிநீக்கு