பெண்தனையே வெறுக்கின்ற ஆண்தான் உண்டோ?
பேதமையைப் போற்றுகின்ற அறிஞர் உண்டோ?
மண்தனையே வெறுக்கின்ற மனிதன் உண்டோ?
மழலைக்கு ஈடாக மொழியும் உண்டோ?
பண்தனையே வெறுக்கின்ற புலவர் உண்டோ?
பாசத்தைப் பொழியாத தாயும் உண்டோ?
கண்தனையே வெறுக்கின்ற இமையும் உண்டோ?
கனித்தமிழை வெறுக்கின்ற தமிழன்
உண்டோ?
அருணா செல்வம்
//கனித்தமிழை வெறுக்கின்ற தமிழன் உண்டோ?//
பதிலளிநீக்குஅப்படி ஒரு நிலையைக் காண எனக்கும் ஆசைதான்.
கவிதை அழகு.
வணக்கம் முரளிதரன் ஐயா.
நீக்கு//கனித்தமிழை வெறுக்கின்ற தமிழன் உண்டோ?//
அப்படி ஒரு நிலையைக் காண எனக்கும் ஆசைதான்.
உங்களின் ஆசை நிறைவேறாது ஐயா.
உண்மைத் தமிழர்கள், தமிழைத் தெரியாதது போல் நடித்தாலும் தமிழை வெறுக்க மாட்டார்கள் என்பதை பதில் மூலம் உரைத்துவிட்டீர்கள்.
தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஐயா.
இன்னும் சில வரிகள்
பதிலளிநீக்குசொல்லி இருக்கலாமோ என
எதிர்பார்ப்பை ஏற்படுத்திப் போகும் கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
வணக்கம் இரமணி ஐயா.
நீக்குஏற்கனவே நான் கேட்ட கேள்விகளில் கருத்தப் பிழை உள்ளது என்று என் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். (கீழே காணுங்கள்)
ஆனால் இன்னும் நிறைய கேள்விகள் என் மனத்தில் உள்ளது தான் ஐயா. ஆனால் அவையெல்லாம் பொருள் மயக்கம் கொண்டு தான் உள்ளது என்பது எனக்கு தெரியும்.
ஆனால் இந்தக் கேள்விகளில் கருத்துப்பிழைகள் எங்கே உள்ளது என்று தெரியவில்லை. தேடுகிறேன்.
தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.
tha.ma 1
பதிலளிநீக்குஇல்லை அருணா இல்லை!
பதிலளிநீக்குவணக்கம் புலவர் ஐயா.
நீக்குநீங்கள் புலவர்க்குறிய வார்த்தை ஜாலத்திலேயே
பதில் எழுதி விடுகிறீர்கள்.
நன்றி ஐயா.
விண்தனையே வெறுக்கின்ற நிலவு உண்டோ?
பதிலளிநீக்குவிரல்சூப்பும் குழந்தைக்கு நிகர் உண்டோ?
சும்மா ஒரு டிரை, அவ்வளவுதான்...
நன்றி
ஸ்கூல் பையன்...
அழகாக கவிதை எழுதுகிறீர்கள் ஸ்கூல் பையன்.
நீக்குவாழ்த்துக்கள்.
(இன்னும் கொஞ்சம் யோசித்து, இரண்டு வரியில் உள்ள சிறிய பிழைகளை நீக்கினால் அழகிய விருத்த வரி கிடைக்கும்)
நன்றி.
அதெல்லாம் கிடக்கட்டும்.
பதிலளிநீக்குஇதுபோன்ற அழகான கவிதை உண்டோ?
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
VGK
தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.
கண்டிப்பா இல்லை, ஐயா, எல்லாவரிகளுக்கும் இல்லை என்ற பதில் சொல்லும் கேள்விகளாக கவிதை மிக மிக அற்ப்புதம். வாழ்த்துகள் ஐயா.
பதிலளிநீக்குநானும் அப்படி தான் நினைத்துக் கவிதை
நீக்குஎழுதினேன் ஆகாஷ் ஐயா.
தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.
//கனித்தமிழை வெறுக்கின்ற தமிழன் உண்டோ?//கவிதையில் அருணாவை போல் ஈரும் உண்டோ?
பதிலளிநீக்குவணக்கம் கவியாழி ஐயா.
நீக்குகவிதையில் அருணாவை போல் ஈரும் உண்டோ?
(என்ன...? நான் ஈரா...? ஙே..ஙே..ஙே..
பெண் என்று சொன்னதற்காக இப்படியா?
எழுத்தப்பிழை என்று நீங்கள் சொன்னால் தப்பிப்“பேன்“! சே... இங்கேயும் பேன் வருகிறது.)
ஆனால் எதுவாக இருந்தாலும்
மிக்க நன்றி ஐயா.
illai...
பதிலளிநீக்குillai...
nalla kavthai!
மிக்க நன்றி சீனி ஐயா.
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
கருத்துப் பிழையுடன் விருத்தம் அமைந்துள்ளது
மாற்றம் செய்க!
பெண்ணினை வெறுப்பார் உள்ளார்!
பெருமையை வெறுப்பார் உள்ளார்!
மண்ணினை வெறுப்பார் உள்ளார்!
மாண்பினை வெறுப்பார் உள்ளார்!
விண்ணினை வெறுப்பார் உள்ளார்!
விருந்தினை வெறுப்பார் உள்ளார்!
கண்ணினை நிகா்த்த பாட்டில்
கலந்துள பிழையை நீக்கு!
கவிஞர் அவர்களுக்கு வணக்கம்.
நீக்குவிண்ணிலே வளர்ந்தி ருந்தால்
விடையெலாம் அறிந்தி ருப்பேன்!
மண்ணிலே பிறந்த தாலே
மனத்தினில் பிறக்கும் கேள்வி!
கண்ணிலே தமிழை வைத்துக்
கருத்துடன் பதிலைக் கேட்டேன்!
பண்ணிலே படைத்த தெல்லாம்
பாவையென் கேள்வி யன்றோ!
“பெண்ணினை வெறுப்பார் உள்ளார்“
நீக்குகவிஞரே... நான் ஒரு பெண்ணை மட்டும் கருத்தில் கொண்டு சொல்லவில்லை. தாய், பாட்டி, அக்காள், தங்கை, தோழி, காதலி,மனைவி, மகள், பேத்தி இப்படி ஆண் தன் வாழ்வில் காணும் அனைத்துப் பெண்களையும் தான் சேர்த்துச் சொன்னேன்.
எந்த ஒர் ஆணும் (அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும்)ஏதாவது ஒரு வகையில் ஒரு பெண்ணை மனத்தில் கொண்டே வாழ்வார் என்பதே என் கருத்து. இதில் மாற்றுக் கருத்து எனக்கு இல்லை.
நன்றி.
நல்லா கேட்டீங்க நறுக்குன்னு.....கேள்வி, கேள்வி கேட்ட விதம் கவிதை பிடிச்சிருக்கு
பதிலளிநீக்குதங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி முத்தரசு மனசாட்சி.
கவிதை அழகு.....
பதிலளிநீக்குநன்றி தோழி.
நீக்கு// கனித்தமிழை வெறுக்கின்ற தமிழன் உண்டோ? //
பதிலளிநீக்குஇதைத்தவிர மற்ற யாவும் இருக்கிறது என்றே தோன்றுகிறது.. கவிதை அருமை..
“இதைத்தவிர மற்ற யாவும் இருக்கிறது என்றே தோன்றுகிறது..“
நீக்குகூடவே எடுத்துக் காட்டுகள் சொல்லியிருந்தால் பதில் சுவையாய் இருந்திருக்கும்.
ஒருவர் கேட்டார்... பாசத்தை எல்லா தாயும் பொழிகிறாளா..? என்று.
நல்ல கேள்வி தான். பாவம் பாசம் கிடைக்காதவர் என்று நினைக்கிறேன். ஆனால் இவர் நினைக்கலாம் நம் தாயிற்கு நம் மேல் பாசம் இல்லை என்று. ஆனால் தன் தாயின் மனத்தில் உள்ள பாசத்தை இவர் அளந்தா பார்க்க முடியும்...? (பெண் மனம் ஆழங்காண முடியாதது அல்லவா?)
தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி அகல்
ஆஹா...
பதிலளிநீக்குஅருமை
நன்றி ஆத்மா.
நீக்குபண்தனையே...அர்த்தம் என்ன?
பதிலளிநீக்குவணக்கம் நம்பள்கி.
நீக்குபண் என்பது இசைப்பாடல்.
வெறுக்கின்ற, மறுக்கின்ற, தாய்த் தமிழ் மொழியினில் பேசுவது இழிவெனக் கருதுபவர்கள் நிறைய உண்டு.
பதிலளிநீக்குஅனுதினமும் பார்த்து நொந்து வருகிறேன்.
இருக்கலாம் ஜெயசந்திரன்.
நீக்குஇங்கே என்னைச்சுற்றி இருப்பவர்கள் தமிழைக் கற்றதில்லை என்றாலும் அது செம்மொழி என்பதை அறிந்து தமிழைப் போற்றத்தான் செய்கிறார்கள்.
எப்பொழுதுமே தன்னிடம் இருக்கும் வைரக்கற்களைப் பெருமைப் படுத்தாமல் அடுத்தவரிடம் இருக்கும் கண்ணாடி கற்களைப் பார்த்து ஆசைப்படுபவர்கள் தானே நம்மவர்கள்.
என்றாவது ஒருநாள் தான் தமிழன் என்பதை உணர்ந்தால் அப்பொழுது அவர்களும் தமிழைப் போற்றுவார்கள்.
நன்றி ஜெயசந்திரன்.
விரும்புகின்ற அத்தனையுமே சொல்லிவிட்டு வெறுப்பார் உண்டோ என்று கேட்டால்.....!
பதிலளிநீக்கு