திங்கள், 17 டிசம்பர், 2012

பிடிக்காத எண் 13. (நாட்டு நடப்பு)




    

நட்புறவுகளுக்கு வணக்கம்.

      நான் பிரான்சு நாட்டிற்கு வந்தது முதல் நான் கண்டு ஆச்சர்யப்படும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று!!
     என்னவென்றால்...
     இங்கிருக்கும் வெள்ளையர்களுக்குப் பதிமூன்று என்ற எண்ணைப் பிடிக்காது. இந்த எண்ணை ஒரு அபசஎண்ணாக நினைக்கிறார்கள். உதாரணமாக பதின்மூன்றாம் தேதி அன்று எந்த நல்ல காரியங்களையும் தொடங்க விரும்புவதில்லை.
    பதின்மூன்றாம் தேதி நீண்ட பயணம் போவதைத் தவிர்க்கிறார்கள். வீடு வாங்குவதாக இருந்தாலும் பதின்மூன்று என்ற எண் கொண்ட வீட்டை வாங்க மாறுக்கிரார்கள். இங்கே பதின்மூன்றாம் என் கொண்ட வீடு மற்ற வீடுகளை விட விலை கொஞ்சம் குறைவாகத் தான் உள்ளது.
   மருத்துவ மனையில் நோயாளிகள் பதின்மூன்றாம் எண்ணுள்ள அறையில் தங்க பயப்படுகிறார்கள். சில மருத்துவ மனைகளில் பதிமூன்றாம் எண்ணுள்ள அறையே இருக்காது. பனிரெண்டிற்கு அடுத்த அறை கதவில் பனிரெண்ட ஏ (12A) என்றுதான் எழுதியிருக்கும். அடுத்தது பதிநான்கு வரும். பதிமூன்று இருக்காது.
   அதிலும் பதின்மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமைகளில் வந்தால் அந்த நாளை மிகமிக கெட்ட நாளாகத்தான் நினைக்கிறார்கள். ஒரு விருந்து என்றாலும் பதிமூன்று பேராக வராதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். மொத்தத்தில் அவர்களுக்கு பதிமூன்று என்ற எண் பிடிப்பதில்லை. வயதானவர்கள் இதற்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள்.
     ஆனால் இன்றையத் தலைமுறைகள் இந்த வெள்ளிக் கிழமைகளில் வரும் பதின்மூன்றாம் தேதியன்று வேண்டுமென்றே எதையாவது செய்ய முனைகிறார்கள். ஆனால் முடிவதில்லை என்றும் சொல்கிறார்கள். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.    
     வேறு நாடுகளில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் நம் நாட்டில் இப்படி நான் கேள்விபட்டது இல்லை.
     தவிர வரும் 21.12.2012 அன்று மயன் கணக்கு முடிவதால் ஏற்படும் என்று சொல்லும் புரளிகளைவிட வரப்போகும் 2013-ம் ஆண்டை நினைத்து இங்கிருக்கும் மக்கள் அதிக கவலை கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதாகத் தான் உள்ளது.
     இது இருபத்தொன்றாம் நுற்றாண்டு! முன்னேறிய நாட்டிலும் இப்படியான எண்ணங்கள் இருந்து கொண்டு இருப்பதை என்னவென்று சொல்வது?


அருணா செல்வம்.

16 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி!

    என்ன சொல்ல ....

    இப்படிதான் நாட்டுக்கு ஒரு-
    மூட பழக்கங்கள்....

    ஸ்ஸ்ஸ்ஸ்.....
    முடியல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      நீக்கு
  2. Hi hi.. payapaduravanga ethai kandaalum paya paduvaanga thaan..

    Nice post friend..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஃபிரெண்ட்.

      நீக்கு
  3. நாடு முன்னேறி இருந்தாலும் சில மக்கள் இன்னும் மூடநம்பிக்கை பின்பற்றி கொண்டுவருவதற்கு அவர்களின் அறிவின்மையே காரணமாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“.

      நீக்கு
  4. அது சரி - எப்படி எல்லாம் பீதியை கிளப்புறாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ரொம்ப காலமாக இருக்கிறதாம்.

      தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி முத்தரசு மனசாட்சி.

      நீக்கு
  5. எந்த நாட்டில் எப்படி இருந்தாலும் மூடநம்பிக்கைகள் இருக்கவே செய்கிறது என்ன செய்வது எத்தனை பெரியார் வேண்டுமோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியார் வந்தால் மட்டும்....?

      தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  6. முடை நாற்றமிகு மூடப்பழக்கங்கள் எல்லா பக்கமும்தான் இருக்கிறது என்ன ஒன்று இங்கு கொஞ்சம் அதிகமோ? அருணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே அதிகம் என்று சொல்லமுடியாது.
      இந்த ஒரு விசயம் தான் எனக்கு பெரியதாக தெரிந்தது.
      ஆனால் பல நல்ல விசயங்களையும் கண்டுள்ளளேன்.
      அடுத்தப் பதிவுகளில் எழுதுகிறேன்.

      தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  7. ஐயோ என்ன கொடும சார்....
    நான் பிறந்ததே 13 ஆம் திகதியில் தான் அப்போ நான் பிரான்சில் பிரந்திருந்தால் என்னை என்ன செய்திருப்பார்கள் ...

    அபிவிருத்தி அடைந்த நாட்டிலும் இந்த மூடக் கொள்கைகள் படித்தவர்கள் மத்தியிலும் இருக்கிரது என்பது கவலைக்குறியதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆத்மா... நல்லவேலை நீங்கள் இங்கே பிறக்கவில்லை.
      “சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?“

      தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஆத்மா.

      நீக்கு
  8. எல்லா நாட்டிலுமே இதுபோன்ற சில பழக்க வழக்கங்கள் உண்டு போலிருக்கு. அறியாத தகவல்களை அறிய வைத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா நாடுகளுமே ஒரு காலத்தில் வேறு ஒரு நாட்டிற்கு
      அடிமையாகி விடுதலைப்பெற்ற நாடுகள் தானே.

      அதனாலே என்னவோ எல்லா இடத்திலும் மூளையை அவர்களுக்குள்ளேயே அடிமை படுத்தி மூடநம்பிக்கையாக வைத்துள்ளார்கள்.
      தன்னம்பிக்கை வளர்ந்தால் சரியாகலாம்.

      தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.

      நீக்கு