வியாழன், 15 மே, 2014

குட்டி!!




  
குட்டி என்றே தலைப்பிட்டுக்
    கொஞ்சும் தமிழில் பாடவந்தேன்!
மெட்டி போடும் பெண்நானோ
    மெல்ல எண்ணிப் பார்க்கின்றேன்!
புட்டி குட்டி ஆசைகளைப்
    போற்றி மகிழ்வர் ஆண்கள்தான்!
கொட்டி வளரும் கற்பனையில்
    குட்டி என்றே எதையெடுப்பேன்?
 
கட்டிப் போட்ட கன்றினையும்
    காலைச் சுற்றும் பூனையையும்
விட்டே அகலா நாயினையும்
    வெறுத்துத் துறத்தும் எலியினையும்
தொட்டால் சிலிர்க்கும் முயலினையும்
    துள்ளி ஓடும் மானினையும்
குட்டி என்றே அழகாகக்
    கொஞ்சும் கவியில் காட்டிடலாம்!

பிறந்து சிலநாள் ஆனவுடன்
    பெரிய உருவாய் இவைமாறும்!
கறந்த பாலாய் இருந்தகுணம்
    கரடு முரடாய் மாறிவிடும்!
சிறந்த சொல்தான் குட்டி!அது
    சீக்கி ரத்தில் வளர்கிறதே!
புறத்தைக் கண்டே சொல்கின்றோம்!
    பொதுவில் இவைதாம் குட்டியென்றே!

அருணா செல்வம்.
16.05.2014
      

24 கருத்துகள்:

  1. சோக்கா கீதும்மே...!
    // புட்டி குட்டி ஆசைகளைப்
    போற்றி மகிழ்வர் ஆண்கள்தான்!// இந்தச் சுட்டிக் கவிதைக்கு இந்த வரிகள் பொருத்தமாக இல்லை என்பது அடியேனின் தாழ்மையான கருத்து... மனதில் பட்டதைக் கூறினேன்... தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் டீச்சர்...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்து நல்லது தான் நைனா.
      ஆனால் நான் உண்மையை எழுதியதால் அப்படியே விட்டுவிடுகிறேன்.
      எந்த பெண்ணும் புட்டிக்கும் குட்டிக்கும் ஆசைப்பட மாட்டாள் என்பது என் தாழ்மையான கருத்து நைனா.

      ரொம்ப தாங்ஸ்ப்பா.

      ஆமா... அது என்ன மே மே.... என்று ஆடு மாதிரி எழுதுகிறீர்கள்? “அம்மா என்பதின் சுறுக்கத்தைச் சென்னை டமிலில் எழுதுகிறீர்களா...?
      அப்போ “அப்பா“வை எப்படி சொல்வது...?

      நீக்கு
  2. பிறந்து சிலநாள் ஆனவுடன்
    பெரிய உருவாய் இவைமாறும்!
    கறந்த பாலாய் இருந்தகுணம்
    கரடு முரடாய் மாறிவிடும்

    அழகாகச் சொன்னீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி முனைவர் ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  4. புட்டி குட்டி ஆசைகளைப்
    போற்றி மகிழ்வர் ஆண்கள்தான்!#
    என்னங்க இப்படி ஒரேயடியா காலை வாரீட்டீங்க?.
    கவிதை சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை சில நேரங்களில் கசக்கத் தான் செய்யும் அரசரே.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ராஜ் அவர்களே.

      நீக்கு

  5. குட்டி குறித்த கவிதை
    மிக மிக அருமை
    குறிப்பாக முடித்த விதம்...
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  6. உண்மை தான் தோழி இருப்பினும் குட்டி என்று அழைத்துக் கொஞ்சுகையிலும் இன்பம் மிஞ்சிவிடுதே எனவே சொல்லாமலும் இருக்க முடியாது :))) அருமையான இக் கவிதைக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  7. #புட்டி குட்டி ஆசைகளைப்
    போற்றி மகிழ்வர் ஆண்கள்தான்!#
    குட்டி பற்றி பாட வந்து ஆண்களை இப்படி குட்டிப் பார்க்கலாமோ ?
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் ஏன் புட்டியையும் குட்டியையும் தப்பானக் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்???

      ஒரு நாய் குட்டி, கன்றுக்குட்டி என்றும்,.... தேங்காள் எண்ணை புட்டி, நல்லெண்ணை புட்டி என்றும் ஏன் எடுத்தக் கொள்ளவே மாட்டேங்கிறீர்கள்....))))

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி
    குட்டிக்கு ஒரு கவிதை மிகவும் மனம் கவர்கிறது. குட்டிகளின் மென்மையும் அவைகளின் செயல்களையும் (சேட்டைகளும்) எவ்வளவு வேண்டுமானும் ரசித்துக் கொண்டே இருக்க முடியும். உங்கள் கவிதையும் அந்த ரகம் தான். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. புட்டி குட்டி ஆசைகளைப்
    போற்றி மகிழ்வர் ஆண்கள்தான்! "

    யதார்த்தம் ! நயமான நல்ல கவிதை !!

    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு

  10. வணக்கம்!

    குட்டிக் கவிதை இனிமைகளைத் தாம்கூட்டிக்
    கொட்டிக் கொடுக்கும் குழைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  11. குட்டிக்கவிதை கட்டி போட்டது! அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. பாவாலே ஆக்கிய 'குட்டி' தமிழ் விளக்கம் சிறப்பாகவுள்ளது.

    பதிலளிநீக்கு
  13. அருமையான ஒரு கவிதை.சகோதரி!...குட்டியைப் போன்றே இனிமையாய்!.....

    பதிலளிநீக்கு