ஒவ்வொரு பெண்ணும் அடுத்த ஜென்மத்திலாவது
ஆணாகப் பிறந்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள். உண்மையில் பெண்களுக்கு வரும்
உடல்ரீதியான பிரச்சனைகளால் நூற்றுக்குத் தொண்ணூறு சதம் பெண்கள் இப்படி நினைப்பது
உண்டு.
இப்படி இருக்க....
நேற்று நானும் என் கணவரும் ஒரு முக்கிய
விசயமாக பாரீஸ் சென்றோம். ஒரு சிக்னலில் கார் நின்ற போது ஒரு பிரென்சு இளைஞன்,
வயது இருபதிலிருந்து இருபத்தைந்துக்குள் தான் இருக்கும். அவன் எங்கள் வண்டியின்
அருகில் வந்து ”எனக்குப் பணமாவது சிகரெட்டாவது கொடுங்கள்” என்று கேட்டான். உடனே என் கணவர்
இரண்டு யுரோவை எடுத்துக் கொடுத்தார்.
அதைப் பார்த்ததும் எனக்குக் கோபம் வந்து
விட்டது. நான் தானம் பண்ணக்கூடாது என்று சொல்லும் கருமி கிடையாது. சென்னை பித்தன்
ஐயா சொன்னது போல் அட்சய திருதையை அன்று மட்டும் அல்லாமல் மற்ற நாட்களிலும் நம்மால்
முடிந்ததை யாருக்காவது கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் தான்.
ஆனால்.... இல்லாதவர்களுக்கும்,
இயலாதவர்களுக்கும் தான் நாம் உதவ வேண்டும் என்று நினைப்பவள். அந்த வெள்ளைக்கார இளைஞனைப்
பார்த்தால் நல்லா கடோர்கஜன் போன்று இருந்தான். அவன் பிச்சை எடுப்பதே அவனுக்கு
அவமானமாக இருக்க வேண்டும். அப்படி அவமானப்படாமல் அவன் பிச்சை எடுக்க, என் கணவரும்
பணத்தைக் கொடுத்ததும் நான் கோபமாக, “அவன் நல்லா தானே இருக்கிறான்? போயி வேலை
செய்து சாப்பிடுன்னு சொல்லாமல் காசு கொடுக்கிறீங்களே...“ என்றேன்.
அதற்கு என் கணவர், “பாவம் அவன். ஆண்பிள்ளையா
போறந்திட்டான். விடு அருணா“ என்றார்.
எனக்கோ ஆச்சர்யம்! “என்னங்க நீங்க? ஆம்பளையா
பொறந்ததுக்குப் போயி இப்படி சொல்லுறீங்களே....“ என்றேன்.
“பின்ன
என்ன? இந்த நாட்டுல இதுவே ஒரு பொண்ணா இருந்தால் உடம்பைக் காட்டியாவது
பொழைச்சிக்கினு போயிடும். பாவம் ஆம்பள, என்ன செய்வான்? வேலைன்னு கிடைக்கிற
வரைக்கும் இப்படி தான் பொழைக்கனும்“ என்றார்.
எனக்கு அதற்கு மேல் எதுவும் கேட்கத்
தோன்றவில்லை. பேசாமல் வாய் அடைத்தது போல் இருந்தாலும், ”அவன் ஆண்பிள்ளை எப்படியாவது
பொழைச்சிக்குவான்...” என்று நம் நாட்டவர் சொல்வது இந்நாட்டில் எப்படி தலைகீழாக மாறியுள்ளது என்பதை
நினைத்து வருந்தியபடி வீடு வந்து சேர்ந்தேன்.
“நாகரிகம் என்பது கீழிந்து மேலே வளருவதில்லை.
மேலிருந்து கீழே இறங்குவது தான்“ என்பதே இங்கே நான் கண்ட உண்மை.
அருணா செல்வம்
09.05.2014
இப்படியும் ஒரு மாறுபட்ட சிந்தனை
பதிலளிநீக்குஉள்ளது என்பதை தங்கள் படைப்பின்
மூலமே அறிந்தேன்.முடித்த விதம் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
இங்கே நிறைய மாறுபட்ட கருத்துக்களும் நிகழ்வுகளும் தான் நடக்கின்றன.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.
தன்னை உணராதவர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் பாவம் தான். உடல் திறன் குறைபாடு என்று சொல்வதைக்கூட இப்போதெல்லாம் மாற்றுதிறன் என்று சொல்கிறோம். கண்தெரியாதவர்களை நான் அகவிழியர் என்றுதான் அழைப்பதுண்டு. உடல் திறனோடு பிச்சையெடுப்பவர்களைக் கண்டால் எனக்கும் கோபம் வருவதுண்டு..
பதிலளிநீக்குதங்கள் இடுகையோடு தொடர்புடைய இந்த காணொளியைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
http://www.gunathamizh.com/2014/04/blog-post_24.html
உங்களின் காணொளியைக் கண்டேன் நன்றி.
நீக்குஆணோ பெண்ணோ.... இங்கே பதினெட்டு வயதிற்குப் பிறகு வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார்கள்.
இங்கேயும் நல்ல பெற்றோர் ஓரளவு பிள்ளைகளைக் கண்கானிக்கிறார்கள். அப்படி கவனிக்கப்படாத பிள்ளைகளின் நிலைதான் மோசமாக இருக்கிறது.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி முனைவர் ஐயா.
மாறுபட்ட கோணத்தில்
பதிலளிநீக்குவெளிநாட்டவரின் வாழ்க்கைநிலை
நன்றி சகோதரியாரே
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
உங்கள் கணவர் செய்தது தவறு ஆனால் சொன்னது மிக சரி
பதிலளிநீக்கு//”எனக்குப் பணமாவது சிகரெட்டாவது கொடுங்கள்” என்று கேட்டான். உடனே என் கணவர் இரண்டு யுரோவை எடுத்துக் கொடுத்தார்.///
அவன் எனக்கு பணம் தாருங்கள் அல்லது எனக்கு பசியாக இருக்கிறது உணவாவது தாருங்கள் என்று சொல்லி இருந்து உங்கள் கணவர் பணம் தந்திருந்தால் அது தவறு இல்லை ஆனால் சிகரெட்டாவது தாருங்கள் என்று கேட்கும் போது கொடுத்தது தவறு
// இந்த நாட்டுல இதுவே ஒரு பொண்ணா இருந்தால் உடம்பைக் காட்டியாவது பொழைச்சிக்கினு போயிடும். பாவம் ஆம்பள, என்ன செய்வான்? வேலைன்னு கிடைக்கிற வரைக்கும் இப்படி தான் பொழைக்கனும்“ என்றார்///
இது மிக மிக சரி
இங்கே யாரு உணவைப் பிச்சையாகக் கேட்கிறார்கள்?
நீக்குஅதிலும் ஒரு சிலரால் உணவு இல்லையென்றாலும் வாழ்ந்து விடமுடியும். சிகரெட் இல்லாமல் வாழ முடியாது என்கிறார்களே....
இருந்தாலும் உங்களின் கருத்தும் சரி தான்.
பிரான்சிலும் பிச்சையா ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குஆமாம். இது கௌரவமாக எடுக்கும் பிச்சை!!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.
////மற்ற நாட்களிலும் நம்மால் முடிந்ததை யாருக்காவது கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் தான்.///
பதிலளிநீக்குஅம்மா தாயே இந்த மதுரைத்தமிழனுக்கு கொஞ்சம் கொடுத்து உதவுங்களேன் அடி உதை மட்டும் வேண்டாம் தாயே....டாலராகவோ யூரோவாகவோ கேஸ் அல்லது செக் , கிரெடிட் கார்டுமூலமாகவோ தரலாம்
நீங்கள் என்ன இல்லாதவர்?
நீக்குஎதைச் செய்ய இயலாதவர்?
சொன்னால் அதற்கேற்றவாறு உதவுவேன்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி “உண்மைகள்“
கொடுமையான நிலை...
பதிலளிநீக்குமுடிவில் அப்பட்டமான உண்மை...
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி தனபாலன் அண்ணா.
“நாகரிகம் என்பது கீழிந்து மேலே வளருவதில்லை. மேலிருந்து கீழே இறங்குவது தான்“ என்பதே இங்கே நான் கண்ட உண்மை.
பதிலளிநீக்குஅருணா ! என் ஐரோப்பிய சுற்றுப் பயணத்தின் போது, கண்ட, நடந்த, சில நிகழ்ச்சிகள், இதே எண்ணத்தைத்தான் என்னுள் ஏற்படுத்தியது! என்றால், மிகையல்ல!
அனுபவங்கள் தான் உண்மையை எதிரொளிக்கும்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.
மாறுபட்ட சிந்தனை.....
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி நாகராஜ் ஜி.
பதிவில் என் பெயரும்!நாடுகள் மாறினால நாகரிகமும் மாறுகிறதே!
பதிலளிநீக்குஎன் பெயரை வேறு யாருடைய பதிவிலாவது பார்த்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கும். அதே சந்தோஷத்தை மற்றவர்களும் அடைவார்கள் என்ற நம்பிக்கையில் தேவையான இடங்களில் மற்றவர்களின் பெயர்கள் வருமாறு எழுத முயற்சித்தேன் ஐயா.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பித்தன் ஐயா.
மன்னிக்கவும், எனது கருத்து உங்களை புண்படுத்தலாம் !
பதிலளிநீக்கு“பின்ன என்ன? இந்த நாட்டுல இதுவே ஒரு பொண்ணா இருந்தால் உடம்பைக் காட்டியாவது பொழைச்சிக்கினு போயிடும். பாவம் ஆம்பள, என்ன செய்வான்? வேலைன்னு கிடைக்கிற வரைக்கும் இப்படி தான் பொழைக்கனும்“
பெண் என்பவளுக்கு உடம்பை காட்டியவது பிழைத்துகொள்ள முடியும் என்ற, பக்குவமற்ற, பொதுவான, தவறான கருத்தே இந்த வரிகளில் தென்படுகிறது.
" இந்த நாட்டுல ", உடம்பை காட்ட முடிவெடுத்தவர்களுக்கு எந்த தேசம் என்பதெல்லாம் வரைமுறைகிடையாது. மேற்கத்திய நாடுகளை பற்றிய நமது " préjugé " சிந்தனைகளின் விளைவே இது ! பிழைக்க வழியில்லை என்றால் அனைத்து மேற்கத்திய பெண்களும் உடம்பை காட்டுவதும் கிடையாது அதே போல அந்த முடிவை எடுக்கும் பெண்கள் நம் நாட்டிலும் உண்டு
நன்றி
சாமானியன்
சாமானியன் அவர்களுக்கு வணக்கம்.
நீக்குஉண்மை சில நேரங்களில் கசக்கத் தான் செய்கிறது.
-பெண் என்பவளுக்கு உடம்பை காட்டியவது பிழைத்துகொள்ள முடியும் என்ற, பக்குவமற்ற, பொதுவான, தவறான கருத்தே இந்த வரிகளில் தென்படுகிறது.-
இந் நாட்டின் நிலை அப்படி. தவிர இந்தப் பதிவில் நான் யாருக்கும் அட்வைஸ் பண்ண முன்வரவில்லை. நடந்ததை எழுதினேன்.
தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சாமானியன் அவர்களே!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா.
ஐ.... ஓட்டெல்லாம் போடுகிறீர்களா....?
பதிலளிநீக்கு