அன்னை என்றதும்
அமிர்தமாய் இனிக்குதே
அழகிய நீரூற்று!
தன்னில் வைத்தெனைத்
தழுவிடும் உணர்வெலாம்
தருவதே உன்பாட்டு!
விண்ணில் வந்தவள்
விருப்பமாய் இருப்பவள்
விளைத்திடும் சீராட்டு!
மண்ணில் வாழ்ந்திடும்
மாபெரும் தெய்வமே
மகளெனைத் தாலாட்டு!
அருணா செல்வம்.
11.05.2014
(மா – கூவிளம்- விளம்-
விளம்- விளம்- காய் அமைந்த அறுசீர் விருத்தம்.)
சிறந்த பகிர்வு
பதிலளிநீக்குஇன்றைய நாளில் - எம்மை
ஈன்ற அன்னையைக் கொஞ்சம்
மீட்டுப் பார்ப்போம்!
அன்னையர் நாள் பற்றிப் பாப்புனைய வாருங்கள்!
http://paapunaya.blogspot.com/2014/05/blog-post_11.html
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.
அன்னையர் தின வாழ்த்துப்பா அருமை!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி புலவர் ஐயா.
அன்னைக்கு வாழ்த்து இனிமை !
பதிலளிநீக்குத ம +1
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி பகவான் ஜி.
அன்னையைப் போற்றும் அருமையான பா .உங்களுக்கும் என்
பதிலளிநீக்குஅன்னையர் தின வாழ்த்துக்கள் தோழி அருணா .
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
// மண்ணில் வாழ்ந்திடும் மாபெரும் தெய்வமே// வேறெங்கும் தேடவேண்டாம்...!
பதிலளிநீக்குஅன்னையர் தின வாழ்த்துக்கள்...!
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி நைனா.
அழகிய கவிதை படைத்து.....கடைசியில் (மா – கூவிளம்- விளம்- விளம்- விளம்- காய் அமைந்த அறுசீர் விருத்தம் என்று ஏதோ பதிவிட்டு இருக்கீங்க அது என்ன உங்க குழந்தை எழுதிய கவிதையா?
பதிலளிநீக்குஅது என் குழந்தை எழுதியது இல்லைங்க.
நீக்குநான் குழந்தையா இருந்தப்ப எழுதியது.
அதாவதுங்க.... என் ஆசிரியர் இந்த இலக்கணத்தைக் கொடுத்து இயைபுடன் கூடிய பாடலை எழுது என்றார்.
நானும் எழுதினேன். இந்த இலக்கணம் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. அதிலும் இயைபுடன் எனும் போது மிகவும் கடினமாக எனக்கு இருந்தது.
நேற்று இந்தியாவில் அன்னையர் தினம் என்று படித்தேன்.
உடனே இந்தப் பாட்டை எடுத்துப் பதிவிட்டுவிட்டேன்.
அறுசீர் விருத்த இலக்கணம் தெரிந்தவர்கள் இது என்ன வகை என்பதை அறியவே அதையும் சேர்த்து வெளியிட்டுவிட்டேன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் கேள்விக்கும்
மிக்க நன்றி “உண்மைகள்“
அருமை...
பதிலளிநீக்குஅன்னையர் தின வாழ்த்துக்கள்...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தனபாலன் அண்ணா.
அறுசீர் விருத்தத்தில் அழகிய வாழ்த்துப்பா அருமை அருணா.............
பதிலளிநீக்குஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி நாகராஜ் ஜி.
நீக்கு