கண்மூடிக் கனவு கண்டேன் – அதில்
காதலன் உன்வரவு கண்டேன்!
விண்ணாடும் நினைவுகளை – அதில்
விளைகின்ற நிறைவு கொண்டேன்!
தன்னந் தனிமையில் நானிருந்தேன்
தவித்திடும் ஏக்கமாய்ப் பார்த்திருந்தான்!
கன்னம் சிவந்திட நான்குனிந்தேன்
களித்திடும் ஆசையில் நெருங்கிவந்தான்! (கண்மூடி)
மாலையில் விரிந்திட்ட ரோஜாப்பூ
மயக்கத்தைத் தந்ததே தேன்கலந்து!
சோலையில் சிரித்திட்ட ஊதாப்பூ
சுயத்தினை மறந்ததே எனைப்பார்த்து! (கண்மூடி)
தழுவிடும் தென்றலின் தொடுசுகங்கள்
தயக்கமாய் நகருமா குலம்பார்த்து!
நழுவிடும் போதினில் படும்கரங்கள்
நயத்தினைப் பகரவா நிலம்பார்த்து! (கண்மூடி)
அருணா செல்வம்
26.05.2014
அருமை.
பதிலளிநீக்குஇளமைக் காணும் இன்ப கனா போலிருக்கே !
பதிலளிநீக்குத ம +1
எனக்கு இன்னும் முதுமை வரவில்லையே ஐயா....
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பகவான் ஜி.
அருமையான கவிதை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி நாகராஜ் ஜி.
சிறப்பான வரிகள் மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் தோழி !
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
சிறந்த இசைப்பாடல் பகிர்வு
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.
பருவம் படுத்தும் பாட்டை அழகான கவிதை ஆக்கியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு‘விண்ணாடும் நினைவுகள்’... விண்ணில் ஆடும் நினைவுகளா, இல்லை, விண்ணையே ஆட்டங்காணச் செய்கிற நினைவுகளா? நல்ல கற்பனை.
வாழ்த்துகள்.
நீங்களே சொல்லிவிட்டீர்கள்.... “பருவம் படுத்தும் பாடு“ என்று.
நீக்குவிண்ணில் ஆடுகின்ற நினைவுகள் என்ற கருத்தில் தான் எழுதினேன். கனவு தானே..... விண்ணையே ஆட்டங்கான செய்தாலும் தப்பில்லை என்றும் நினைக்கிறேன்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி காமக்கிழத்தன் ஐயா.
அருமை சகோதரியாரே
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி தளிர்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
பதிலளிநீக்குமிக்க நன்றி தனபாலன் அண்ணா.
நல்ல கவித்துவம் வாய்க்கப் பெற்றுள்ளீர்கள்.
பதிலளிநீக்குஎழுத்துலகம் ஏக்கமுற இன்னும் எழுதுங்கள்!