“திருட்டு
மாங்காய்ன்னா இனிக்கும் தானே.... இது ஏன் இப்புடி புளிக்குது....?“ என்று நிவேதா
மாலினியிடம் கேட்டபடிக் கையில் இருந்த புளிப்பு மாங்காயை உடல் சிலிர்க்க
சுவைத்தபடி பேசி சிரித்துக்கொண்டு வந்தார்கள்.
எதிரில்
ரகு வந்தான். இவர்கள் மாங்காய் தின்பதைப் பார்த்தான். பார்த்துக்கொண்டே இருந்தான்.
“ரகு.....
ஒனக்கும் மாங்கா வேணுமா....? செம புளிப்பா இருக்குதுடா“ என்றாள் நிவேதா கண்களை
மூடி உடலைச் சிலிர்த்து. அவன் பதில் சொல்வதற்குள் மாங்காயின் மீது தன் பாவாடையைப்
போர்த்தி ஒரு கடி கடித்தாள். ஒரு துண்டு மாங்காய் துணிக்குள் வந்தது. அதை எடுத்து
ரகுவிடம் நீட்டினாள்.
அவன்
வாங்கிக் கொண்டான். இவர்கள் நடையைத் தொடர்ந்தார்கள்.
“நிவேதா....
நீ ஏன் ரகுவுக்கு மாங்கா கொடுத்த? அன்னைக்கி ஒரு நாள் அவன் கமரகட் சாட்டப்போ நீ
கேட்டும் அவன் தர்ல இல்ல. அவனுக்கு எதுக்கு நீ தர்ணும்?“ கோபமாகக் கேட்டாள்
மாலினி.
“எல்லாம்
காரணமாத்தான்“ என்றபடி வீட்டிற்குள் நுழைந்தாள் நிவேதா.
“தோபாரு
புள்ள. இனிமே எங்க தோட்டத்து மரத்துல மாங்கா அடிக்காத. எங்கப்பன் கிட்ட
சொல்லிப்புடுவேன்.“ கையில் கல்லை வைத்துக்கொண்டு சரியாக மாங்காயைக் குறிபார்த்துக்
கொண்டு இருந்த நிவேதாவிடம் சொன்னான் ரகு.
“சொல்லேன்.
எனக்கொன்னும் பயமில்லை. அன்னைக்கி நீ கூட எங்கூட சேர்ந்து அந்த மாங்காவைச்
சாப்டேன்னு நானும் உங்கப்பன் கிட்ட சோல்லிபிடுவேனே....“ என்றாள் நையாண்டியாய்.
அவன்
பாலகணேஷ் ஐயா போல் “ஙே“ என்று விழிக்க மாலினி
இப்பொழுது தைரியமாகப் பெரிய கல்லாக எடுத்தாள்.
அருணா செல்வம்.
11.05.2014
#பாலகணேஷ் ஐயா போல் “ஙே“ என்று#
பதிலளிநீக்குஇது செம கடியா இருக்கே !
த ம 1
ஐயோ.... நான் அவரைக் “கடிக்க“வில்லை. அவர் தான் பதிவுலகத்திலேயே இந்த “ஙே“ என்ற எழுத்தைப் பயன்படுத்தவார். உங்களுக்குத் தெரியாதா பாகவான் ஜி.
நீக்குஇதோ இப்போது வருவார்....!
பதிலளிநீக்குநான் சொன்னது உண்மை என்றதால் அவர் வர மாட்டார்.
நீக்குபுன்னகைக்க வைத்த பொடிகதை ! " கூட்டுகளவாணிகள் " இப்படிதான் உருவாகிவிடுகிறார்கள் !
பதிலளிநீக்குசாமானியன்
saamaaniyan.blogspot.fr
" கூட்டுகளவாணிகள் " இப்படிதான் உருவாகிவிடுகிறார்கள் ! “
நீக்குஎன் கதையை முழுமை அடைய வைத்தீர்கள். நன்றி சாமான்யன்.
ஹா..ஹா...
பதிலளிநீக்குநன்றி சீனி அண்ணா.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குநிமிடக்கதையை படித்து படித்து நிமிடக்கணக்கில் சிரித்தேன்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அப்படியா உங்களுக்கு இந்தக்கதை சிரிப்பை வரவழித்தது....!!!!!!!
நீக்குநன்றி ரூபன்.
அடடா எப்படியெல்லாம் யோசிக்கறாங்க?
பதிலளிநீக்குஅந்த மாலினிதான் சின்ன வயசு அருணாவா?
அருணாவிற்கு இப்பவும் சின்ன வயசுதாங்க.
நீக்குநன்றி மூங்கில் காற்று.
அருமையான காக்கா கடி! சிறுவ்யது ஃப்ளாஷ் பாக்! வந்து போனது! இறுதி வரியை...அதாங்க வாத்தியார சொன்னத ரசித்தோம்! வாத்தியார் செல்லமாகக் குட்ட போகின்றார் பாருங்கள்!
பதிலளிநீக்குஉண்மையைச் சொன்னால் யாராவது குட்டுவார்களா....?
நீக்குநன்றி துளசிதரன் ஐயா.
குறும்பட வேலைகள் காரண்மாக வலைத்தளத்திற்கு வர இயலாமல் போனது! மன்னிக்கவும்! சகோதரி!
பதிலளிநீக்குதனபாலன் அண்ணா வெளியிட்டு இருந்தார். நான் இன்னும் பார்க்கவில்லை. அவசியம் பார்ப்பேன்.
நீக்குஉங்களின் முன்னேற்றங்கள் தொடர அன்புடன் வாழ்த்துகிறேன்.
நன்றி ஐயா.
கடுகுக் கதையானாலும்
பதிலளிநீக்குகாரம் செறிந்த
கதையாச்சே!
எனக்கு உன்னு தான் புரியவில்லை.
நீக்குஉண்மையில் கடுகு காருமா....?
மிளகு என்றால் ஒத்துக்கொள்வேன்.
நன்றி காசிராஜலிங்கம் ஐயா.
சிறப்பான கதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்.
நீக்கு( ஆனால் சிறப்பான கதை என்றெல்லாம் கதை விடாதீர்கள். )))))
பொடிவைத்து எழுதிய கடிக்கதை
பதிலளிநீக்குமனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
இரமணி ஐயா.... நான் உண்மையில் பொடியெல்லாம் வைக்கவில்லை.
நீக்குகதையெழுதிய அன்று தான் காக்கா கடி என்றால் என்னவென்று அறிந்தேன். காக்கா கடி என்றால் காக்காவிற்கு சாதம் வைத்தால் அது தன் இனத்தை அழைத்து உண்ணும். அதனால் அதற்கு கொஞ்சம் தான் உணவு கிடைக்கும். அதனால் தான் காக்கா கடி என்கிறார்கள் என்பதை அறிந்தேன்.
காக்கா திருடி கொண்டு போயும் உண்ணுவதைப் பார்த்திருக்கிறேன். அதனால் ஒரு கற்பனையில் இப்படி எழுதினேன்.
நன்றி இரமணி ஐயா.
tha.ma 5
பதிலளிநீக்குநன்றி இரமணி ஐயா.
நீக்குPlan பண்ணி தான் எதையும் பண்ணுவாங்க போல! :)))
பதிலளிநீக்குநம்ம வாத்யார் பெயரும் இங்கே!
நாம செய்யறதே திருட்டு.
நீக்குபிளேன் பண்ணலன்னா மாட்டிக்குவோம் இல்ல....
நம்ம வாத்தியாரைச் சும்மா ஞாபகப் படுத்தினேன். அவ்வளவு தான். நன்றி நாகராஜ் ஜி.
http://sivamindmoulders.blogspot.in/2014/05/blog-post_12.html
பதிலளிநீக்குinge paarunga
பார்த்தேன் தோழி.....
நீக்குஎனது இந்தக்கதையை அப்படியே எடுத்து அவர் வலையில் ஒட்டி இருக்கிறார். இது கூட பரவாயில்லை. கதையின் கீழே எனது பெயரை எடுத்து விட்டு அவர் பெயர் “சிவா“ என்று எழுதி இருக்கிறார்.
என்னமோ போகட்டும்.
ஆனால் தோழி....... உங்களின் ஞாபக சக்தியை வியக்கிறேன்.
வேறு இடத்தில் இந்தக்கதையைப் பார்த்ததும் உங்களுக்கு என் ஞாபகம் வந்ததே..... இது பெரிய விசயமாக எனக்குத் தெரிகிறது.
இப்படிப்பட்ட இரசியரையும் பெற்றிருக்கிறேன் என்பதை அடையாளம் காட்டிய அந்த (காக்காய் கடி கடித்த) “சிவா“ அவர்களுக்கு நன்றி.