திங்கள், 19 மே, 2014

அழகானப் பெண்ணை ஏன் “குட்டி“ என்கிறார்கள்?





நட்புறவுகளுக்கு வணக்கம்.

   போன வாரத்தில் ஒரு நாள் நான் வலையில் ஏதாவது பதிக்கலாம் என்று எழுத அமர்ந்தேன். எதுவும் தோன்றவில்லை. ஏதாவது தலைப்பு இருந்தால் கவிதையாய் எழுதிவிடலாம் என்று தோன்றியது.
   உடனே, “ஏதாவது தலைப்பு கொடுங்கள். அந்தத் தலைப்பில் கவிதை எழுதி விடுகிறேன். ஆனால் மிகவும் பெரிய தலைப்பாக கொடுக்காதீர்கள். நேரமில்லை. அதனால் குட்டியாக ஏதாவது தலைப்பு கொடுங்கள்“ என்று எழுதி கவிஞர் கி. பாரதிதாசனுக்கு மெயில் அனுப்பினேன்.
   அவர் உடனே, “குட்டி“ என்றே தலைப்பிட்டு கவிதை எழுதுங்கள்“ என்று பதில் அனுப்பினார்.
   நானும் “குட்டி“ என்று தலைப்பிட்டு கவிதை எழுதி பதித்துவிட்டேன்.
   மறுநாள் “சில பெண்களைக் “குட்டி“ என்கிறார்களே... அதைக்குறித்து உங்கள் கவிதையில் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்“ என்று மெயில் அனுப்பினார்.
   நான், “அந்தக் காரணம் பெண்ணை இழிவாகச் சொல்வது போல் இருக்கிறது என்பதால் எழுதவில்லை“ என்று பதில் எழுதி அனுப்பிவிட்டு, சனி ஞாயிறு இரண்டு நாட்களும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டேன்.

   அதன் பிறகு இன்று காலையில் ஒரு தோழி தொலைபேசியில் அழைத்தாள். பொதுவாகப் பேசிவிட்டு “குட்டி“யைப்பற்றி பேச்செடுத்தாள்.
   அவள் சொன்னதின் சுறுக்கம் என்னவென்றால்.... அவளும் வேறு சில தோழ தோழியரும் என் “குட்டி“ பாட்டைப் படித்தார்களாம். அப்பொழுது பேச்சுவாக்கில் “குட்டி“ என்று சில பெண்களைச் சொல்வதன் காரணத்தைப் பற்றி அலசி இருக்கிறார்கள். அதாவது “குட்டி“ என்ற தலைப்பில் குட்டி பட்டிமன்றமே நடந்திருக்கிறது.
   அவர்கள் சொன்ன காரணங்கள...
-          பெண்கள் தங்களை எப்பொழுதும் சின்ன பிள்ளையாகவே நினைத்துக் கொண்டு இருப்பதால் தான் இந்தப் பெயர் வந்ததாம்.
-          மற்ற மிருக குட்டிகளைப் போல மனித குழந்தைகளும் அழகாக இருந்ததால் தான் இந்தப் பெயர் வந்ததாம்.
-          பெரிய பெண்ணாக இருந்தாலும் வயதைக் குறைவாகக் காட்ட நினைத்துச் சின்ன பெண்போல அலங்காரம் செய்து கொள்வதால் தான் இந்தப் பெயர் வந்ததாம்
-          பூனை நாயைகளின் குட்டிகள் எங்கும் தனியாகச் செல்லாமல் தன் தாயின் அருகிலேயே இருப்பது போல தன் துணையின் அருகில் எப்பொழுதுமே இருக்க நினைப்பதால் தான் இந்தப் பெயர் வந்ததாம்....

இப்படி இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே சென்றாள். நானும் கடைசியில், “முடிவு என்னவென்று முடித்தீர்கள்?“ என்று கேட்டேன்.
    “அது தான் சரியாகத் தெரியவில்லை. நீதான் முடிவை சொல்லனும். உனக்காக இரண்டு நாட்களாக காத்துக்கொண்டு இருக்கிறோம்“ என்றாள்.
   அப்படியென்றால் சில பெண்களைக் “குட்டி“ என்று சொல்வதற்கானப் பொருளை யாரும் சரியாக அறிந்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று எனக்குப் புரிந்து போனது.
   அதனால் அவளிடம் சொன்ன பதிலை இங்கே உங்களுக்கும் பதிக்கிறேன். இங்கே வலையில் பதில் தெரிந்தவர்கள் இருக்கலாம். அப்படி இருப்பவர்கள் நான் சொல்லும் பதில் சரியில்லை என்று நினைத்தால் தயவுசெய்து தாங்கள் கண்டுபிடித்த பதிலை எங்களும் தெரிவிக்கலாம்.

சில பெண்களை ஏன் “குட்டி“ என்று சொல்கிறார்கள் என்றால்.....

    பொதுவாக குட்டிகள் அனைத்துமே மிகவும் அழகாக தான் இருக்கும். “கழுதை கூடக் குட்டியில் அழகுதான்“ என்றொரு வழக்கு இருக்கிறது.
   அப்படி இருக்க....
   சாத்தான்களும் பிசாசுகளும் மனிதர்களை மயக்கும் சக்தி வாய்ந்தவைகள். ஆனால் கோரமானவைகள். ஆனால் அதனுடையக் குட்டிகளும் மற்ற குட்டிகளைப் போல் அழகாக தானே இருக்கும்...?
    (பல) ஆண்கள் பெண்களின் அழகில் மயங்குவார்கள்.
    ஆண்களை மயக்கும் சக்தி பெண்களிடம் இருக்கிறது...!!!
    ஆண்களை மயக்கும் சக்தி வாய்ந்த பெண்கள் அழகானவர்கள். அந்த அழகானப் பெண்களுக்குக் கோரமான சாத்தான் பிசாசு என்ற பெயரை நேரிடையாக வைக்காமல் அதனின் குட்டிகள் எல்லா குட்டிகளைப் போல அழகாக இருக்கும் என்ற கற்பனையில் குட்டிச் சாத்தான், குட்டி பிசாசு என்று சொன்னார்கள்.
   இப்படிச் சொல்லும் பொழுது சாத்தான் பிசாச என்னும் சொற்கள் சற்று பயங்கரமாக இருப்பதால் அழகானப் பெண்களுக்குப் பொருந்தாது என்றெண்ணி அவைகளைத் தவிர்த்து வெறும் “குட்டி“ என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டார்கள்.

   அதனால் ஆண்களை மயக்கம் (சில) பெண்களைக் “குட்டி“ என்று செல்லமாகச் சொல்லும் வழக்கு வந்தது.

அருணா செல்வம்
19.05.2014
  

32 கருத்துகள்:

  1. இப்படியும் சில அர்த்தங்கள் இருகின்றனவா? பொதுவாக மலையாளத்தில் குட்டி என்றால் குழந்தை என்று அர்த்தம். குழந்தை என்றால் அழகு தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.... அப்படியா...?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  2. என்ர செல்லக் குட்டி ,என்ர ராசாத்திக் குட்டி ,குட்டி ,குட்டி ,குட்டி இப்படி ஆயிரம் முறை குட்டி போட்டுக் கூப்பிடும் பொழுது உறவு இன்னும் நெருக்கமாகத் தெரிகிறதே அதனால ஒண்ணும் தப்பில்ல :))))))எங்கள் அன்புக்கு நெருக்கமானவர்களை இப்படியே கூப்பிடும் பொழுது வீட்டிலொரு செல்லப் பிராணி இல்லாத குறையே தெரியாமல் போய்விடும் தோழி :)))))))வாழ்த்துக்கள் சிறப்பான பகிர்வுக்கு .த.ம .3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதும் உண்மைதாங்க தோழி.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. ///குட்டிகள் அனைத்துமே மிகவும் அழகாக தான் இருக்கும். “கழுதை கூடக் குட்டியில் அழகுதான்“//
    எப்படியோ பெண்கள் கழுதைகள் என்பதை ஒத்துக் கொண்டீர்கள்... ஹாஹஹா

    உடனே ஆமாம் நாங்கள் கழுதைகள்தாம் அதனால் தான் குடும்பசுமையை கழுதைகள் பொதிசுமப்பது போல சுமக்கிறோம் என்று சொல்லாதீர்கள். அப்படி சுமந்தால் பரவாயில்லை. ஆனால் நடப்பதென்னவோ கழுதை மாதிரி கத்துவதுதானே நடக்கிறது..

    என்ன கருத்து சொல்வது மாதிரி நடக்கும் உண்மையை சொல்லிவிட்டேனோ சரிம்ம்ம இதற்காக என் மனைவியிடம் போட்டு கொடுத்து வீடாதீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கழுதைக்குப் பொதிசுமப்பது மட்டுமல்ல நன்றாக எட்டி உதைக்கவும் தெரியும். அதை ஏன் எழுதவில்லை...?



      நீக்கு
  4. ///சாத்தான்களும் பிசாசுகளும் மனிதர்களை மயக்கும் சக்தி வாய்ந்தவைகள்.//

    ஆமாம் மிக உண்மை இங்கே ஒரு சாத்தான் அப்படிதான் கவிதை கட்டுரை பேச்சு என்று எல்லோரையும் மயக்கி கொண்டிருக்கிறது.. அந்த சாத்தான் பிரான்ஸில் நடந்த பட்டிமன்றத்தில் கலௌந்து கொண்டதாக தகவல் கசிந்து இருக்கிறது... உங்க வூட்டுகாரரிடம் சொல்லி வையுங்கள் பாவம் அவர் பிரான்ஸில்தான் வசிப்பதால் இதை சொன்னேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் சொல்கிறேன்.
      ஆமாம்.... யார் அந்தச் சாத்தான்?

      நீக்கு
  5. //பெண்கள் தங்களை எப்பொழுதும் சின்ன பிள்ளையாகவே நினைத்துக் கொண்டு இருப்பதால் தான் இந்தப் பெயர் வந்ததாம்.///

    ஆமாம் கல்யாணம் ஆகும் வரைதான் அதன் பின் அப்படி அல்ல அதன் பின் அவர்கள் தங்களை கூகுலாகா அதாவது எல்லாம் தெரிந்த பெரிசுகளாக ஆகிவிடுகிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா....?
      எனக்கும் தான் கல்யாணம் ஆகிவிட்டது. எனக்கு ஏன் ஒன்றுமே தெரியவில்லை...?

      நீக்கு
  6. /இதோட கருத்து சொல்வதை நிறுத்தி கொள்கிறேன். எங்க வீட்டு குட்டி இப்போ என்னை நோக்கி பயங்கர ஸ்பீடாக வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் கருத்தா....? என்ற கோபம் அதற்கு வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  7. நான் எங்க வீட்டு குட்டி என்று சொன்னது என் செல்லக் கழுதை (மனைவி)குட்டியை அல்ல... என் வீட்டில் வளரும் நாய்க் குட்டியை சொன்னேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.....
      உங்களின் செல்ல கழுதை குட்டியே வந்திருக்கலாம். கழுதை என்ன செய்யும் என்பதை என் பதிவில் படித்தாவது தெரிந்து கொண்டிருப்பார்கள்.

      தங்களின் வருகைக்கும் நசைச்சுவையானக் கருத்துகளுக்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  8. பதில்கள்
    1. ஆமாங்க சீனி அண்ணா.

      தங்களின் வருகைக்கு
      மிக்க நன்றி.

      நீக்கு
  9. வணக்கம்
    ஆகா.. ஆகா விளக்கம் இப்படி போகுதா.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பத்தான் உங்களுக்குத் தெரியுமா....?
      இல்லையென்றால் வேற விளக்கம் ஏதாவது இருக்கிறதா...?
      சொல்லிவிடுங்கள் ரூபன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு

  10. வணக்கம்!

    என்றும் இளமையாய் எண்ணி இருந்திடுவாள்!
    அன்பில் நனைந்தே அகமகிழ்வாள்! - இன்பத்தைக்
    கொட்டிக் குவித்திடுவாள்! கொஞ்சும் குழந்தையவள்!
    குட்டி எனும்பெயா் கொண்டு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  11. அப்பா.... என்னவொரு ஆராய்ச்சி..... :))


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆராய்ச்சி எல்லாம் ஒன்றும் இல்லைங்க.
      சின்ன வயதில் பெரியவர்கள் சொன்னது தான்.

      நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  12. Dear Admin,
    You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

    To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல...
    நம் குரல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி “நம் குரல்“

      நீக்கு
  13. சிறந்த பதிவு
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  14. உங்களின் " குட்டி " பதிவை படித்த பிறகு குட்டி என்ற வார்த்தை என் யோசனையிலும் ஒட்டிகொண்டது !

    உங்களின் பட்டிமன்றம் சரிதான் !

    குட்டி என்பது அழகை குறிக்கும் வார்த்தைதான். என் கன்னுக்குட்டி, செல்லக்குட்டி என குழந்தைகளை சிலர் கொஞ்சுவதும் இந்த பொருளில்தான். சைத்தான், பிசாசு என தங்களின் குழந்தைகளை கோபத்தில் திட்டும் அதே பெற்றோர்கள் அவர்களின் சில்மிசங்களை ரசிக்கும்போது " குட்டிபிசாசு " என்ன வேலை பண்ணியிருக்கா பாருங்க ! என சிலாகிக்கிறார்கள் ! ஆக, குழந்தைகளும் ( குட்டிகளும் ! ) அவர்களின் செயல்களும் என்றுமே அழகுதான் எனவும் கொள்ளலாம் ! மேலும் இந்த " குட்டி " தமிழகத்தின் சில வட்டார வழக்குகளில் மனைவியை பாசமாக அழைக்கவும் உபயோகிக்கபடுகிறது ! ( ஏ...குட்டி ! )

    அதே போல சென்னை தமிழிலும் ஒரு வகையில் அழகினை குறிக்கவே பயன்படுகிறது ! ( குட்டி ஷோக்காகீது மாமே ! ) ( நான் சொலவது சரிதானா என்பதை முட்டா நைனாதான் விளக்க வேண்டும் ! )

    இப்படி அப்பழுக்கற்ற குழந்தை அழகினை குறிக்கும் குட்டி என்ற சொல்லை சற்றே நெளிய வைக்கும் சொல்லாக மாற்றியதில் தமிழ் சினிமாவுக்கு முக்கியபங்குண்டு ! மேலும் எதுகை மோனை வசதிக்காக புட்டியுன் குட்டியும் சேர்ந்து அர்த்தமே மாறிவிட்டது ! பெண்களின் நிறத்தையும் புற அழகினையுமே " அழகியலாக " முன்னிறுத்தும் தமிழ் நினிமாவின் அபத்தங்களில் இதுவும் ஒன்று !
    ( சாமானியன்னு ஒருத்தர் கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலருங்கற கட்டுரையில இந்த சினிமா அபத்ததைபத்தி எழுதியிருக்கார் ! முடிஞ்சா படியுங்களேன் !!! )
    கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு !
    http://saamaaniyan.blogspot.fr/2013/12/blog-post.html

    " ...இப்படிச் சொல்லும் பொழுது சாத்தான் பிசாச என்னும் சொற்கள் சற்று பயங்கரமாக இருப்பதால் அழகானப் பெண்களுக்குப் பொருந்தாது என்றெண்ணி அவைகளைத் தவிர்த்து வெறும் “குட்டி“ என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டார்கள்.... "

    ஆனால் சாத்தான், பிசாசுகளை சந்திக்கும் நேரங்களில்தான் நம் தேவதைகளின் அருமை பெருமைகளும் புரிகின்றன !

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் விரிவான பின்னொட்டத்திற்கும்
      மிக்க நன்றி சாமான்யன்.

      உங்களின் பதிவைப் படிக்கிறேன். நன்றி.

      நீக்கு
  15. nalla pathivu.... nanri akka....

    http://www.pudhiyavideo.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கீர்த்தனா.

      நீக்கு
  16. மலையாளத்தில் ஆண், பெண் குழந்தைகள் முதல் திருமண வயது வரை அனைவருமே "குட்டி" கள் தான்!! சமீபத்தில் "திரிஷ்யம்" படம் பார்த்து இதை தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.... அப்படிங்களா....?

      தங்களின் வருகைக்கும் தகவலுக்கு
      மிக்க நன்றி ஜெயதேவ் ஐயா.

      நீக்கு