இன்னைக்குப்
போயிடும், நாளைக்குப் போயிடும் என்று ஒவ்வொரு நாளாய் நினைத்தே இதோ.. இரண்டு வாரம்
ஓடிவிட்டது. அவசரமாக ஓடிவந்த உறவினர்களும், “உயிர்விட்டதும் சொல்லிவிடு காமாட்சி...“
என்று சொல்லிவிட்டு கிளம்பிப் போயினர்.
டவுனிலிருந்து குடும்பத்துடன் வந்த இரண்டு மகன்கள் அருகே இருந்தாலும் வந்த
இரண்டே நாட்களில் தம் மனைவி பிள்ளைகளைத் திரும்பவும் ஊருக்கே அனுப்பி விட்டார்கள்.
காமாட்சியின் கடைசி மகள், தந்தையின் மேல் உள்ள பாசத்தால் கணவரையும் பிள்ளைகளையும்
அனுப்பிவிட்டு தலைமாட்டிலேயே அமர்ந்திருந்தாள்.
சுந்தரலிங்கத்திற்கு
லேசாக விழிப்பு வந்ததும் அனைவரையும் கூப்பிடுவாள். வந்த பிள்ளைகள் இப்படித் துடிக்கும்
உயிர் சட்டென்று போய்விடாதா என்று நினைத்துத் தங்களின் பெயரைச் சொல்லி விட்டு
தந்தையின் வாயில் பாலை ஊற்றுவார்கள். ஆனால், அவரின் பார்வை யார் வரவிற்கோ
காத்திருப்பது போல் பார்த்துவிட்டு மூடிக்கொள்ளும்.
“காமாச்சி...
புள்ளைங்க தான் வந்துட்டாங்களே... இன்னும் உம்புருஷனுக்கு என்ன குறைன்னு உனக்காவது
தெரியுதா...?“ உறவுக்கார கிழவி, கவலையுடன் கேட்டாள்.
“பெரியவள்
சுந்தரி, வெளிநாட்டுலேர்ந்து வர முடியலைன்னு சொல்லிட்டா. அவளோட நெனப்பு தான் இப்போ
அவருக்கு இருக்குதுன்னு நினைக்கிறேன். ஆனா.. அவ வரமுடியாத சூழ்நிலையில நான் என்ன செய்ய
முடியும்...?“ என்றாள் காமாட்சி மூக்கைச் சிந்தியபடி.
“இவ்வளவு
தான் விசயமா...?“ என்று கேட்ட கிழவி, “இந்தா புள்ள இங்க வா...“ என்று அங்கிருந்த ஒரு பெண்ணை
அழைத்து “அவர்கிட்ட போயி ”நான் தான் சுந்தரி வந்திருக்கிறேன்” சொல்லிட்டு இந்தப் பாலை
அவர் வாயில் ஊற்று...“ என்றாள் கிழவி.
“ஆயா... இது
தப்பில்லையா...?“ கவலையுடன் கேட்டாள் காமாட்சி.
“தப்பில்லையடி.
கன்று இல்லாத பசுகிட்ட பால் கறக்கிறதுக்கு முன்னாடி வைக்கோல் கன்றை வைப்போம்
இல்லையா...? அது தன் குட்டி இல்லைன்னு பசுவுக்குத் தெரியும். இருந்தாலும் அந்த
வைக்கோல் கன்றைப் பார்த்ததும் தன் குட்டியை நினைத்து அமைதியாகி பால் கறக்க
வழிவிடும். அது போல தான் இதுவும். கவலைப்படாதடி
காமாட்சி...“ என்றாள் கிழவி.
அந்தப்
பெண் பால் டம்ளரை எடுத்துக்கொண்டு, “பெற்றவர்களின் இறுதி நாட்களுக்குக்கூட
வரமுடியாத பிள்ளைகள் எல்லாம் சொந்த நாட்டில் வைக்கோல் கன்றுகள் மாதிரி தான்“ என்று
எண்ணியபடி சுந்தரலிங்கத்திடம் சென்றாள்.
அருணா செல்வம்
11.07.2013
பதிலளிநீக்குவணக்கம்!
கன்றென எண்ணிக் கறக்கும் பசுபோன்று
நின்றேன் கதையில் நிலைத்து!
தமிழ்மணம் 1
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
நீக்குமிக்க நன்றி கவிஞர்.
பதிலளிநீக்குமனதை தொட்ட அதே சமயத்தில் சுட்ட கதை.... நான் கதைகள் இப்பொழுது அதிகம் படிப்பதில்லை ஆனாலும் இது போன்ற சிறிய நறுகென்று இருக்கும் கதைகள் என் மனதை கவருகின்றன
நானும் ஒரு வைக்கோல் கன்றுதான்
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி “உண்மைகள்“
வைக்கோல் கன்று....
பதிலளிநீக்குநல்ல கதை.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி நாகராஜ் ஜி.
அருமையான கதை...
பதிலளிநீக்குநிமிடக் கதையாக இருந்தாலும் இதயத்தை தொட்ட கதை...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி.
அருமை... உண்மையான கதையும் கூட..
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குகருத்திற்கும் மிக்க நன்றி.
உலகம் சுருங்கிவிட்டதைப் போலவே மனித மனங்களும் சுருங்கிவிட்டன..
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி.
மனதை வருந்த வைத்த கதை
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
அருமையான கதை! நன்றி!
பதிலளிநீக்குமனதை தொட்ட கதை.
பதிலளிநீக்குபாராட்டுகள்.
நான் ஸ்கைப்ல, இல்ல ஃபேஸ்புக்குல வீடியோ சாட்டிங்க பண்ண வைப்பீங்களோன்னு நினைச்சேன் :-(
பதிலளிநீக்குமன்னிக்கனும். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
நீக்குநன்றி ராஜி மேடம்.
ராஜி மேடம்... இப்பத்தான் புரிஞ்சுது.
நீக்குநீங்கள் சொல்வதும் நல்ல வழிதான்!! ஆனால் பாலெல்லாம் ஊத்த முடியாதே...)
ராஜி சொல்றது மாடர்ன் டே'ஸ் ரெமடி.
பதிலளிநீக்குஉண்மைக்கதைதான். இப்படி நம்ம வீட்டிலும் ஒரு சமயம் நடந்துருக்கு.
போற உயிர் அமைதியாகப் போகணுமேன்னுதான்.
வெளிநாட்டில் இருக்கும் நிறைய பேர்கள்
நீக்கு“வைக்கோல் கன்று“களாகத்தான் உறவினர்களிடம்
வாழுகிறார்கள் துளசி அம்மா.
நன்றி.
கடைசியில் சொன்ன ஒப்பீடு அசத்தல்.வித்தியசமான சிந்தனை.
பதிலளிநீக்குஉங்கள் ப்ரோபைலை பிளாக்கர் PROFILE க்கு மாற்றி விடுங்கள். கூகிள் +டேஷ் போர்டில் தவற விட்டால் கூகிள் + க்கு போய் விட்டு வரவேண்டி இருக்கிறது.