புதன், 25 ஜூன், 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால்.....




நட்புறவுகளுக்கு வணக்கம்.

   நம் மதுரைத் தமிழன் இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? என்ற தலைப்பில் தொடர் பதிவிட என்னையும் அழைத்துள்ளார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. தொடர்ந்து சாமானியன் அவர்களும் அழைப்பு விடுத்துள்ளார். இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
    நம்மின் சுயத்தை நாமே மறந்துவிட்ட நிலையில் நம்மைப் பற்றி நாமே அறிந்துக்கொள்ள இந்தத் தொடர் பதிவின் கேள்விகள் உதவியாக இருக்கிறது என்பது உண்மை. நன்றி மதுரைத் தமிழன்.
   சீரியசாக எழுத வேண்டுமாம்.
   அதற்காக நான் பதில் எழுதும் முன் என் கணவரின் முகத்தை மனக்கண்ணில் நிறுத்தி வைத்தால் பதில் சீரியசாக வரும் என்று மதுரைத் தமிழன் சொன்னதால் உண்மையில் அதன் படியே எழுதியுள்ளேன்.

1.உங்களுடைய 100வது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

    என்னை மறக்காமல், என்னை நினைத்துப் பார்த்து, என் 100வது பிறந்த நாளில் என் பெயரைச் சொல்லி மற்றவர்கள் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன்.

2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

    நயவஞ்சகர்களின் சூழ்ச்சிகளை அறியும் ஆற்றலைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

3. கடைசியாக நீங்கள் சிரித்தது எப்போது? எதற்காக?

    இப்பொழுது தான்.
    காரணம்.... நமது மதுரைத் தமிழன் அடிவாங்கி அடிவாங்கியே சிரிப்பைத் தொலைத்து விட்டார் போலும். அதனால் தான் “கடைசியாக“ என்று எழுதியிருக்கிரார். பாவம் தான் அவர்“ என்று அவரை நினைத்துச் சிரித்தேன்.

4. 24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன?

    “பவர் கட்“ என்றால் கரெண்ட் கட்டாவதைத் தானே சொல்கிறீர்கள்....?))
    இங்கே குளிர்காலமாக இருந்தால் போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு எடிசனைத் திட்டிக்கொண்டே சோபாவில் சுருண்டு விடுவேன்.
    கோடைகாலமாக இருந்தால் என் கணவருடன் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சேன் நதியோரத்திற்கச் சென்று விடுவேன்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

    ஆண் பிள்ளையிடம் விட்டுக்கொடுத்து அன்பாய் வாழவேண்டும் என்றும்,
    பெண்பிள்ளையிடம் விட்டுக் கொடுக்கிறேன் என்று அடிமையாகி விடாதீர்கள் என்றும் சொல்வேன்.

6. உலகில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்சனையை நீங்கள் தீர்க்க விரும்புகிறீர்கள்?

    உலகில் என்றால் எவ்வளவோ பிரட்சனைகள் உள்ளது. அதில் ஒன்றே ஒன்றை மட்டும் உடனடியாக தீர்க்க முடியும் என்றால் இலங்கை பிரட்சனையை உடனடியாகத் தீர்ப்பேன்.

7. உங்களுக்கு ஒரு பிரட்சனை. அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள்?

    யாரிடம் கேட்டாலும் பிரட்சனை பெரியதாகுமே தவிர குறையாது. அதனால் எனக்கு நானே சுயஆய்வு செய்து பார்ப்பேன். இருப்பினும் முடிவு தெரியவில்லை என்றால் காலத்தின் கையில் விட்டுவிடுவேன்.

8. உங்களைப் பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார். அதைக்கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

    அவர் என்னைப் பற்றி ஏதும் “அறியாதவர்“ என்று மன்னித்து சும்மா விட்டுவிடுவேன்.

9. உங்களின் நண்பரின் மனைவி இறந்து விட்டால் என்ன சொல்வீர்கள்?

    ஆறுதல் சொல்ல வார்த்தை தெரியாததால் (இல்லாததால்) நானும் அவருடன் சேர்ந்து அழுதுவிட்டு வருவேன்.

10. உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

    தோழிகளுக்குப் போன் செய்து அரட்டை அடித்து (வெட்டியாக) பொழுதைப் போக்குவேன்.

    அனேகமாக நீங்கள் அனைவரும் எழுதிவிட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் நான் தொடர் பதிவிட யாரையும் அழைக்க முடியவில்லை. இருப்பினும் இன்னும் யார் யாரெல்லாம் எழுதவில்லையோ அவர்கள் அனைவரையும் என் சார்பாகத் தொடர் பதிவிட அழைக்கிறேன்.

அன்புடன்
அருணா செல்வம்.

25.06.2014

30 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹா ( லைட்டா சிரிச்சிட்டு எழுதுவோம்ல )

    அத்தனையும் இயல்பான விடைகள் அருமை வாழ்க வளமுடன்

    தா ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சீராளன் அவர்களே.

      பதிவிட்டதும் படித்துக் கருத்திட்டமைக்கு
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. பத்து கேள்விகளுக்கு நானும் பதில் சொல்லி விட்டேன் ,வேறு ஒருவரின் சாயலும் என் பதிலில் வந்து விடக்கூடாது என்பதற்காக இப்போதான் அனைவரின் பதில்களையும் படிக்கிறேன் ,உங்கள் பதில்கள் அருமை !
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான் ஜி்... எனக்கு அனைவரின் பதில்களையும் படிக்க மிக மிக ஆவல். வீட்டில் விருந்தினர் என்பதால் இதுவரையில் யாரின் பதிலையும் படிக்க வில்லை.
      இனிதான் படிக்க வேண்டும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  3. ஆக இதுக்கெல்லாம் காரணம் மதுரை தமிழனா ?!!!

    யதார்த்தமாய் அமைந்த மிக இயல்பான பதில்கள் ! முதல் மற்றும் ஏழாம் கேள்விக்கான பதில்கள் மிக அருமை !

    நாம் நினைத்ததை எழுதுவது வேறு, மற்றவருக்காக எழுதுவது வேறு ! உங்களின் பெயரையெல்லம் இனைத்து பதிவிட்ட பிறகுதான் இதன் மூலம் இக்கட்டினுள் மாட்டிவிடுகிறேனா என தோன்றியது... மதித்து பதில்கள் அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி.

    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை இக்கட்டு என்று நினைக்கிறீர்கள்?
      நம் வலையுலக நட்பின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளும் வாய்ப்பாக இதைக் கருதலாமே.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சாமானியன் ஐயா.

      நீக்கு
  4. #.....மற்றவர்கள் கொண்டாட வேண்டும்#

    மிகச் சிறந்த பதில் அருணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் நிச்சயமாக இருக்கமாட்டோம் என்று தெரிந்தே பதில் சொல்ல வேண்டி இருந்ததால்....
      இருந்தாலும் இது அதிகப்படியான ஆசை தான். அதற்காக காந்தி ஜெயந்தி போல் லீவு எல்லாம் விட சொல்ல மாட்டேன்...))

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காமக்கிழத்தன் ஐயா.

      நீக்கு
  5. அசத்தல்...

    /// எனக்கு நானே சுயஆய்வு செய்து பார்ப்பேன். ///

    பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  6. மனசில் உள்ளதை மளமளவென்று எழுதியதுபோல் தெரிகிறது. உண்மையாகவும் தெரிகிறது. பாராட்டுகள் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையைச் சொல்ல யோசிக்க வேண்டியது இல்லை தானே ஐயா. அதனால் மளமளவென்று எழுதிவிட்டேன்.
      அதிலும் கணவரை மனக்கணமுன் நிறுத்தி எழுதியதால் எல்லாமே அப்பட்டமான உண்மையாக வந்து விழந்துவிட்டது.

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி கவிஞர் ஐயா.

      நீக்கு
  7. பதில்கள் அனைத்தும் அருமை....
    வாழ்த்துக்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குமார் ஐயா.

      ஆமாம்... நிங்கள் எழுதவில்லையா...? இதோ வருகிறேன்.

      நீக்கு
  8. ///பாவம் தான் அவர்“ என்று அவரை நினைத்துச் சிரித்தேன்.///

    பொதுவாக பாவம் என்று நினைத்தால் வருத்தப்படதானே செய்வார்கள் ஆனால் நீங்கள் சிரித்து இருக்கிறீர்களே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எலேய் இதுக்குப் பெயர் தான் மக்கா நக்கல் சிரிப்பு என்கிறது நானும்
      சிரித்தேன் ஆனா அத அங்கின சொல்ல மறந்துட்டேன் என் தோழிக்கு ஞாபக சக்தி அதிகம் அதனால சொல்லிப் புட்டா அம்புட்டுதான் :))))))))வாழ்த்துக்கள் தோழி அருணா ரசிக்க வைக்கும் பதில்களை அள்ளி வழங்கியுள்ளீர்கள் .

      நீக்கு
    2. தோழி..... நல்ல பதில்.

      பாவம் தான் “அவர்“....)))

      நீக்கு
    3. இருவரின் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. நல்ல பதில்கள். 3ஐயும் 5ஐயும் மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கணேஷ் ஐயா.

      நீக்கு
  10. மூன்றாவது கேள்விக்கான பதில் அருமை அருணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. .....))

      ஏன்க்கா இப்படி..... “அவர்“ பாவம் இல்லையா...?

      வருகைக்கு மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  11. 7,-,9,வரை ரசித்தேன் பூதகரமகிவிடும் உண்மை உண்மை. ,பெரியமனது - மன்னிப்பது , ஆறுதல் சொல்வது - இளகியமனது. அருமையான பதில்கள்! நன்றாகவே ரசித்தேன்! .
    நானும் நன்கு மாட்டி கொண்டேன். முடிந்தால் பாருங்கள் வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் ரசிப்பிற்கும்
      மிக்க நன்றி இனியா.

      இதோ வருகிறேன்.

      நீக்கு
  12. அழகான, உண்மையான, ரசிக்கத்தக்க பதில்கள்! சகோதரி! ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்! மிகவும் ரசித்தோம்! அதுவும் மதுரைத் தமிழனைச் சொல்லியிருக்கின்றீகள் பாருங்கள்! அதை மிகவுமே ரசித்தோம்! ஹாஹஹா.....

    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  13. எல்லா விடையும் அருமை, அதிலும் ஐந்து அட்டகாசம்:)
    ஆறாம் விடையில் நாம் ஒத்துபோகிறோம்:)
    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  14. சிந்திக்க வைக்கும் நல்ல பதில்கள்

    பதிலளிநீக்கு
  15. கவிஞராயிற்றே கேள்வி கேட்கவும் பதிலளிக்கவும் சொல்லியா கொடுக்க வேண்டும்
    தெளிவான பதில்கள்

    பதிலளிநீக்கு