வெள்ளி, 13 ஜூன், 2014

பேதையால் “பேக்கு“ ஆனேன்!!



பேதைப்பெண் என்றுன்னை நான்அ ழைத்தால்
    பேக்கென்று எனைச்சொல்வார்! என்னில் வாழும்
மேதைப்பெண் நீயடி!தேன் விழியால் பேசிப்
    போதைக்கண் தள்ளுகிறாய்! சூடித் தந்த
கோதைப்பெண் கொஞ்சுதமிழ் தீட்டி, மாய
    கோகுலனைக் குடிகொண்டாள்! மிதிலைச் செல்வி
சீதைப்பெண் பார்வையாலே இராமன் சிக்கி
    வாதைக்கண் பட்டதுபோல் வாடு கின்றேன்!


அருணா செல்வம்

12 கருத்துகள்:

  1. வணக்கம்
    காதலும் ஒரு போதைதான்... மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  4. அருமை.
    முதல் வரியில் ஒரு சந்தேகம்.
    பேதைப்பெண் என்றுன்னை நான்அ ழைத்தால் என்று வரும் வரியில் நான்அ என்று ஒட்டாமல் வருகிறதாகத் தோன்றுகிறதே.. நான ழைத்தால் என்று வரக்கூடாதா? :)))

    பதிலளிநீக்கு
  5. இனிய கவிதை! திளைத்தோம்!

    திரு. ஸ்ரீராம் சொல்லியிருப்பது எங்களுக்கும் தோன்றியது! ஒரு வேளை அடிக்கும் போது அப்படி ஆகிவிட்டதா? இல்லை நான ழைத்தால் என்றோ? "விளை யாட்டிதே" என்று வருவது போல?! சதோதரி தாங்கள் விளக்கினால் எங்களுக்கும் யாப்பிலக்கணம் கற்றுக் கொண்டது போல ஆகும்! தாங்கள் அருமையாக எழுதுவதால்!

    பதிலளிநீக்கு
  6. காதல் ரசம் சொட்டும் கவிதை வரிகளுக்கு வாழ்த்துக்கள் தோழி அருணா !

    பதிலளிநீக்கு

  7. வணக்கம்!

    பாதை தடுதாறிப் பாவலன் குழம்புகிறேன்!
    போதைக் கவியில் புரண்டு!

    தமிழ்மணம் 5

    பதிலளிநீக்கு
  8. வார்த்தைகள் விளையாடும் அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. ஒரு மேதைப் பெண்ணின் தேன்விழி தந்த போதையில், மனம் வாடிய ஒருவன் பாடிய கவிதை இது.

    ஆளை மயக்கும் அற்புதக் கவிதை! ஐந்தாறு முறை படித்தேன்!!

    பதிலளிநீக்கு
  10. மனம் கவர்ந்த மேதைபெண் எனும்போது அவளின் விழித்தேனில்கூட பழம்மதுவின் போதை வந்திவிடுவது உண்மைதான் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது முதல் கதை : முற்பகல் செய்யின்...
    http://saamaaniyan.blogspot.fr/2014/06/blog-post.html

    மூத்த எழுத்தாளராய் உங்களின் கருத்தினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி

    பதிலளிநீக்கு