நட்பறவுகளுக்கு வணக்கம்.
காளமேகப் புலவரின் சத்திரத்துச்
சாப்பாட்டு என்ற தலைப்பில் எழுதிய பாடலுக்கான இரண்டாம் விளக்கத்தை ஒரு பதிவாக
இட்டேன்.
அது தவறான பதில் என்று ஒருவர் (பெயரில்லாதவர்(?)
கருத்துத் தெரிவித்திருந்தார். நானும், நாம் சொன்ன விளக்கம் உண்மையில் தவறானதாக
இருந்தால் அதையே மற்றவர்கள் எடுத்துக் கொள்ள நேரிடுமே என்ற காரணத்தால் உடனே அந்தப்
பதிவை நீக்கிவிட்டேன்.
பிறகு காளமேகத்தின் தனிபாடல்கள்
தொகுதிகளை எடுத்துப் பார்த்தேன். அதிலும் “பாடலின் பொருளை மாற்றி உரைத்தார்“ என்றே
இருந்தது. அதனுடன் சேர்ந்தது போல வேறு பாடலும் இல்லை.
கடைசியில் பெயரில்லாத ஒருவரின்
கருத்திற்காக நாம் அதிகமாக சிந்தித்துத் தேட வேண்டிதில்லை என்று முடிவெடுத்து இந்த
இடுகையை வெளியிடுகிறேன்.
காளமேகம் ஒரு பாடலுக்கு இரண்டு
பொருள் வருமாறு சிலேடையாகப் பல பாடல்கள் பாடியுள்ளார். ஆனால் அப்பாடல்கள் ஆழ்ந்து
பொருள் கொள்ளவேண்டும். புரிந்து படித்தால் “ஆஹா... அருமை“ என்று எவராளும் சொல்லாமல்
இருக்க முடியாது. ஆனால் இந்தச் சத்திரத்துப் பாடலில் இரண்டாவது கருத்துச்
சிலேடையாக இல்லாமல் மிகவும் சாதாரணமாகப் பொருள் கொள்வது போல் தான் இருக்கிறது.
பாடல்
கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதி லரிசிவரும் – குத்தி
உலையிலிட வூரடங்கு மோரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.
இந்தப் பாடலின் முதல் விளக்கம்...
ஒலிக்குங் கடலின் ஆரவாரத்தினாலே சூழப்பெற்றிருக்கின்ற, இந்த நாகப்பட்டினத்துக்
காத்தான் என்பவனுடைய சத்திரத்திலே, பொழுது மலைவாயிற் சென்று மறைகின்ற
பொழுதினிலேதான் அரிசி வரும். அரிசியைத் தீட்டி உலையிலே இவர்கள் இடுவதற்குள்ளாக
ஊரெல்லாம் உறங்கி ஒலியடங்கிப் போகும். இவர்கள் இரவலர்க்கு ஓர் அகப்பை அன்னத்தை
இலையில் இடவும் வேண்டுமானால், அதற்குள் விடிவெள்ளியே வானத்தில் எழுந்துவிடும்.
என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன்.
இதனைக் கேட்ட சத்திரத்தினர்
காத்தானிடம் சென்று இந்தப் பாடலைச் சொன்னார்கள். அவன் செய்தியைப் புரிந்து
கொண்டான். திருத்தங்களை உடனே செய்தான். காளமேகத்திடம் வந்து, தன்னைப் பொறுத்தருளும்படி
வேண்டினான் அல்லவா?
அப்போது, கவி காளமேகம், அவனுடைய
மனமாற்றத்தைப் புரிந்து கொண்டு,
ஒலிக்குங் கடலின் ஆரவாரத்தினாலே
சூழப்பெற்றிருக்கின்ற, இந்த நாகப்பட்டினத்துக் காத்தான் என்பவனுடைய சத்திரத்திலே,
பொழுது மலைவாயிற் சென்று மறைகின்ற பொழுதினிலே அரிசி வரும். அந்த அரிசியை இரவெல்லாம்
தீட்டி, ஊரெல்லாம் உறங்கி ஒலியடங்கிய நேரத்திலேயே உலையிலே இடுவார்கள். காலையில்
விடிவெள்ளி வானத்தில் எழும்பொழுதே இரவலர்களின் அகம் இருக்கும் பையிக்கு அன்னம்
இடுவார்கள். என்று பொருளினை மாற்றி உரைத்து அவன் மனம் மகிழுமாறு செய்தார்.
அதாவது அந்தச் சத்திரத்தில்
இரவெல்லாம் உழைத்து விடிகாலையிலேயே உணவு இடுகிறார்கள்.
இது தான் அந்தப் பாடலின் இரண்டாவது
பொருள்.
இதைவிட அவரின் “பாம்புக்கும் எள்ளுக்கும்“
உள்ள ஒற்றுமை “தென்னைமரத்திற்கும் வேசிக்கும்“ உள்ள ஒற்றுமை போன்ற பாடல்களில் உள்ள
கருத்துக்கள் மிகவும் சுவையாக இருக்கும். பின்னாளில் அதையும் எழுதுகிறேன்.
மற்றபடி ஏற்கனவே படித்த, படிக்க வந்து ஏமார்ந்தவர்கள் அனைவரிடமும் மன்னிக்க
வேண்டுகிறேன்.
நன்றி.
அருணா செல்வம்.
பாடலக்கான வேறு விளக்கம் யாருக்காவது தெரிந்து இருந்தால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
அல்லது அதற்கான வேறு பாடல் இருந்தாலும் தெரிவியுங்கள். நானும் தெரிந்து கொள்ள
விரும்புகிறேன்
பாடலுக்கு விளக்கம் எல்லாம் எனக்கு வேண்டாம் ஆனால் அந்த வாழை இலையில் நீங்கள் அளித்த சாப்பாடுதான் வேணும்.....
பதிலளிநீக்குஒரு டிக்கெட் எடுத்து அனுப்பினால் உங்களையும் பார்த்த மாதிரி இருக்கும் உங்க ஊரையும் பார்த்த மாதிரி இருக்கும் உங்க சாப்பாட்டையும் சாப்பிட்ட மாதிரி இருக்கும்..
ஹலோ ஹலோ நில்லுங்க என்னாச்சு இப்படி தலை தெறிக்க ஓடுறீங்க
நல்ல சரியான விளக்கம்
பதிலளிநீக்குபகிர்வுக்கும் மற்ற பாடல்கள் குறித்து
தொடர்ந்து எழுதவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
சுவாரஸ்யம். இவரின் வேறு சில பாடல்களும் இதே போல சுவாரஸ்யம் காட்டும். இதயம் பேத்துகிறது ஜவர்லால் கூட ஓரிரு பாடல்கள அவர் பதிவில் பகிர்ந்திருந்தார்.
பதிலளிநீக்குஇன்னும் சத்திரத்துச் சாப்பாட்டு மயக்கத்திலேயே இருக்கிறீர்கள் போலிருக்கிறது. உங்களுடைய இதற்கு முந்தைய நீக்கப்பட்ட பதிவை படிக்கவில்லை. நீங்கள் எழுதிய முதற் கருத்து, இரண்டாம் கருத்து எல்லாமே சரிதான். வீராசாமி செட்டியார் எழுதிய ” விநோதரச மஞ்சரி” என்ற பழைய நூல் கிடைத்தால் வாசித்துப் பார்க்கவும். உங்கள் இலக்கிய ரசனைக்கு உதவும்.
பதிலளிநீக்குத.ம.4
கால மேகப் புலவரின் பாடலும் விளக்கமும் அருமை சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி
தம 6
பதிலளிநீக்குஇரண்டாவது பொருள் விளக்கமும் அருமை சகோதரி...
பதிலளிநீக்குகூகிள் தேடலில், பாடலின் முதல் வரியைத் தட்டச்சு செய்தால்,
பதிலளிநீக்குபாடலுக்கான இரு பொருள்களையும் சில வலைப்பூக்கள் தந்துள்ளன.
அவற்றில் ஒன்றை மட்டும் கீழே தந்துள்ளேன்.
அங்கே இடம்பெற்றுள்ள இரண்டாவது பொருள்.....
//நீண்ட அலையோசை உடைய கடலால் சூழப்பட்ட நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தானின் சத்திரத்தில் நாட்டில் பஞ்சம் பட்டினி(அத்தமிக்கும்) உள்ள பொழுது அரிசி மூட்டைகள் கணக்கிலடங்காது வந்து இறங்கும். அதை சமைத்து (உலையில் இட்டு) ஊர் மக்களுக்குக் கொடுக்க அனைவரின் பசியும் அடங்கும். அவ்வாறு சமைக்கப்பட்ட அன்னத்தை(சோறு) இலையில் போடும் பொழுது அது நட்சத்திரத்தைப் போல் பிரகாசிக்கும் என்று வசையாகப் பாடியப் பாடலை வசைமீட்சிப் பாடலாகப் பாடியுள்ளார் நமது புலவர். இவ்வாறெல்லாம் பாடும் நுட்பம் காளமேகப்புலவருக்கே உரியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை//
[23-c.blogspot.com/2009/09/blog-post.html]
படியுங்கள் அருணா[ஏற்கனவே படித்திருக்கவும்கூடும்].
இரண்டாம் பொருள் ஏற்புடையதுதானா என்பதையும் ஆராய்ந்திட வேண்டுகிறேன்.
நீங்கள் தெரிவிக்கச் சொன்னதால் கூகிளில் தேடினேன்.
நன்றி அருணா.
நன்று! வகுப்பறையில் பாடம் நடத்திய நினைவு!
பதிலளிநீக்குஇதுதான் சரியான விளக்கம்! பகிர்வுக்கு மிக்க நன்றி!
பதிலளிநீக்குகத்து கடல் சூழ் பாடலின் இரண்டாவது பாடல் உங்கள் மூலமே அறிந்தேன். நன்றி. காளமேகம் பாடல்களை மகிழ்ச்சியுடன் படிப்பேன். அதில் பகுத்தறிவும் ஒழிந்திருக்கும்
பதிலளிநீக்குhttp://www.gowsy.com/2013/10/blog-post_11.html
இரண்டாவது விளக்கம்.... காளமேகப் புலவரின் சில பாடல்கள் உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறேன்....
பதிலளிநீக்குபொறுப்புணர்ச்சியுடன் பதிந்துள்ள இந்த பதிவுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கள் பெயரை ஒரு சுழற்சி முறை பதிவில் குறிப்பிட்டுளேன். விபரத்துக்கு என் வலைப்பூவிற்க்கு வாருங்களேன் ! நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
பொறுப்புணர்ச்சியுடன் பதிந்துள்ள இந்த பதிவுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கள் பெயரை ஒரு சுழற்சி முறை பதிவில் குறிப்பிட்டுளேன். விபரத்துக்கு என் வலைப்பூவிற்க்கு வாருங்களேன் ! நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
தங்கள் இரண்டாவது விளக்கம் பதிவு ஹ்டாங்கள் நீக்கியதைப் பார்க்க முடியவில்லை! இந்த இடுகையைத்தான் வாசிக்கின்றோம்! இரண்டாவது விளக்கப் பகிர்வுக்கு மிக்க நன்றி! நல்ல விளக்கம், நல்ல பகிர்வு, தங்கள் தமிழ் பற்றிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி!
பதிலளிநீக்குசிறந்த இலக்கிய விளக்கம்
பதிலளிநீக்கு