ஞாயிறு, 1 ஜூன், 2014

போதை!!





பீர்அடித்த போதையினை உன்றன் கண்கள்
    பீறிட்டுக் கொடுக்குதடி! களத்து மேட்டில்
போரடித்து உழைக்கின்ற மறவன் நெஞ்சுள்
    பொங்குதடி அமுதமெனக் காதல் வெள்ளம்!
தேரெடுத்து வருகின்ற காம தேவன்
    தேன்மழையைப் பொழிகின்றான்! தேவி உன்னைச்
சீரெடுத்து நான்படிக்க நீயும் சொக்கச்
    சித்திரமாய்த் தீட்டிடுவோம்! கவிதை மெல்ல!

அருணா செல்வம்.

42 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  2. ///பீர்அடித்த போதையினை உன்றன் கண்கள் பீறிட்டுக் கொடுக்குதடி! //

    அப்படிபட்ட கண்கள் இருந்தால் பீர் வாங்கும் செலவு மிச்சம் உடல் நலத்திற்கும் கெடுதல் இல்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடல் நலத்திற்கு கெடுதலா!!!
      சொன்னது தமிழன் தானா?
      கொஞ்சம் என் கையை கிள்ளுங்க அருணா.

      நீக்கு
    2. சொன்னது மதுரைத்தமிழந்தான் ஆனா சொன்னது தமிழக தமிழர்களுக்காக.... நான் எல்லாம் பீர் குடிக்கும் ஆள் இல்லை. அது பொம்பளை புள்ள குடுக்கும் டிரிங்க்...... எனக்கு பிடித்தது ரம்மியமான ரம்

      நீக்கு
    3. மதுரைத் தமிழரே..... முதலில் மாமியின் கண்களை உற்றுப் பாருங்கள். அப்பொழுது தெரியும் அதில் உள்ள போதை...

      நீக்கு
  3. போதையும் பேதையும் ஒன்றே இரண்டும் மயக்குவதில் ஒன்றுகொன்று சளைத்து அல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா....?!!!
      நீங்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் “உண்மைகள்“

      நீக்கு
  4. போதை இப்போது கவி படித்த எங்களுக்குள்
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்தால் கூடப் போதை வருமா....!!!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி முனைவர் ஐயா.

      நீக்கு
  6. முதல் வரியே என்னை உறுத்துகிறது ,பீர் அடித்திராத என்னைப் போன்றவர்களை குடிகாரன் ஆக்கி விடுவீர்கள் போலிருக்கே !
    த ம +5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறாகப் புரிந்து கொண்டீர்களா பகவான்ஜி?

      “யாரும் குடிக்காதீர்கள்” என்ற கருத்தைத் தான் என் பாட்டில் வைத்துள்ளேன். திரும்பவும் படித்துப் பாருங்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசி ராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. பேர்மறக்கச் செய்யுமொரு காதல்பித்தைப்
    பீர்’எங்குங் கொடுத்திடுமோ? கவிதைச் செவ்வான்
    தேரோட்டப் பாதையிலே தருக்க ளாகித்
    தண்ணிழலைத் தீட்டும்மும் பாட்டின் ஆழ
    வேரோட்டம் அறிந்ததனால் சொல்லு கி்ன்றேன்!
    விடியலினை உருவாக்கக் கவிதை வாளைக்
    கூராக்கித் தமிழ்மரபைக் காக்கும் வீரக்
    கொள்கையினைப் பரப்புதற்கு வாரீர் இன்றே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாராகத் தமிழ்மரபு நைந்து போனால்
      நம்முயிராய்க் காக்கின்ற தமிழுக் குள்ளே
      கூராகச் சொல்லெடுத்துக் கவிதை பாடிக்
      கொள்கைதனைப் பரப்பகின்ற நெஞ்சம் உண்டு!
      சீராக வளர்கின்ற காதல் முற்றச்
      செழுதமிழில் கவிதொடுத்தல் மரபே ஐயா!
      வேராகி விட்டதனால் தாழ்மை இல்லை!
      விளைகின்ற பயிருக்கோ அதுதான் தேவை!

      தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
      மிக்க நன்றி ஜோசப் ஐயா.

      நீக்கு
  9. இதுக்குதான் அதிகம் மதுரை தமிழனோடு பழக்கம் வச்சுக்காதீங்கன்னு சொன்னேன். கேட்டீங்களா அருணா!? இப்ப பாரு பீரு, மோருன்னு பதிவு போட்டுக்கிட்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா மதுரைத்தமிழனை சிரிக்க வைக்க சகோ ராஜியை தவிர ஆள் இல்லை...

      நீக்கு
    2. நீங்க பெரியவங்க.
      நீங்க சொன்னால் நான் நிச்சயம் கேட்டுக்கவேன்.... ஆமா... யாரு அது மதுரைத் தமிழன்....?

      நீக்கு
  10. பீர் அடித்த போதை தரும் கண்கள்! புதிய உவமை! சிறப்பான கவிதை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  11. பெக் அளவு கவிதையில் இவ்ளோ கிக் !!
    அருமை அருணா மேடம் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..... பெக் அளவு என்பது இந்த அளவு தானா....
      புரிந்தது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மைதிலி கஸ்துர்ரி ரங்கன் அவர்களே.

      நீக்கு
  12. பீர் அடிச்சா கிக் வரும் என்று இந்த பதிவு ஆசிரியருக்கு எப்படி தெரிந்தது அனுபவ உண்மையா? விளக்கம் தேவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரைத் தமிழனுக்கு நேரமே சரியில்லைப் போல :))) வாழ்த்துக்கள் தோழி அருணா அழகிய கிக்கான கவிதைப் பகிர்வுக்கு .

      நீக்கு
    2. பீர் அடிச்சா போதை வராதாம்.
      தொப்பை தான் வருமாம். அதனால் நான் பீரைத் தொடுவதில்லை.

      இங்கே எழுதிய பீர்.... “சீரு“க்காகத் தான்.

      நீக்கு
    3. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  13. பீர் அடிச்சா கிக் வரும் ஆண்களுக்கு. ஆனால் அந்த ஆண்களை கண்டால் சில பெண்களுக்கு அந்த ஆணை கிக்( உதை) பண்ண மனது வரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பீர் அடிச்சா கிக் வரும் ஆண்களுக்கு. - அப்படியா?

      ஆனால் அந்த ஆண்களை கண்டால் சில பெண்களுக்கு அந்த ஆணை கிக்( உதை) பண்ண மனது வரும்““
      இது என்னவோ உண்மையாகத் தான் இருக்கிறது “உண்மைகள்“

      நகைச்சுவையானக் கருத்துக்களுக்கு மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  14. வணக்கம் சகோதரி
    காதலின் தா(க்)கத்தை முதல் வரியே பறைசாற்றுகிறது. சிறிய கவிதையானாலும் அந்த தந்த கிக்கில் சிக்கிக் கொண்டது மனம். சிறப்பான சிந்தனை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பாண்டியன் ஐயா.

      நீக்கு
  15. ஆச்சர்யமாக இருக்கிறதா அண்ணா.......?

    தங்களின் வருகைக்கும் ஆச்சர்யக் கருத்திற்கும்
    மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  16. பீருக்கோர் கவி
    நல்லாத்தான் இருக்கு
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தப்பு தப்பு.

      பிகருக்குத் தான் பீர் கவிதை எழுதினேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கில்லர் ஜி.

      நீக்கு
  17. மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பதற்கிணங்க சிறு கவிதை வரிகள் பல அர்த்தங்களுடன் மனதை அள்ளுகின்றது! சகோதரி!

    பதிலளிநீக்கு
  18. தில்லியில் அடிக்கும் வெயிலுக்கு பீர் அடித்தால் நல்லது என்று பலர் சொல்கிறார்கள்....

    நீங்கள் இந்தப் பெண்ணின் கண்களைப் பார்த்தாலே பீர் அடித்த போதை வரும் என்று சொல்ல.... எனக்கு இப்போது ஒரே குழப்பம் -
    இந்தக் கண்களைப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதை வருதோ இல்லை உதை வரும்!

    பதிலளிநீக்கு