இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா!!
கன்னி ஒருத்தி
கடற்கரையில் நின்றிருக்க
மின்னி இடியிடித்து
மேற்றிசையில் காற்றடிக்க
என்றும் இலாதோர்
எதிராக வந்தஅலை
நின்றே இருந்தவளை
நேர்மையின்றிச்
சாய்த்துவிடப்
பின்னல் குழல்நனையப்
பின்னே விழுந்தாளே!
தென்னை இளங்காற்றாய்த்
தேவனாக வந்தவனோ
முன்னால் கரம்கொடுத்து
மூச்சடக்கித் தூக்கிவிடச்
சின்ன இளமனது
சீரிழந்து போனதம்மா!
(இதன் இலக்கணம்
1. நாற்சீரடிகள் எட்டும் ஒரே
எதுகையில் வரவேண்டும்.
2. 1.3 ஆம் சீர்களில் மோனையும்
வெண்டளையும் அமையும்.
3. அடி இறுதிக்கும் அடுத்த
அடி முதலுக்கும் வெண்டளை கட்டாயமில்லை.
4. ஆனால்..அவ்விடத்தில் மா
முன் நேர் மட்டும் வராது.)
அருணா செல்வம்
அருணா செல்வம்
அழகான கவிதை பாடி இலக்கணமும் சொல்லி விட்டீர்களே!கற்றுக் கொண்டேன். இப்படியே தொடர்க
பதிலளிநீக்குநீங்களும் இந்த இலக்கணப்படி எழுதிப் பாருங்கள்.
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி முரளிதரன் ஐயா.
அழகான ஒரு கவிதையையும் கொடுத்து
பதிலளிநீக்குஅதற்கான இலக்கண விளக்கமும்
கொடுத்திருப்பது மிகவும் அழகு.
என்னைப் போன்றவர்களுக்கு நன்கு உதவும்.
நன்றிகள் பல...
நீக்குஎன்னத்தான் இலக்கணம் என்றாலும்
உங்களின் தெம்மாங்கு பாட்டிசைக்கு
ஈடாகுமா...?
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நண்பரே.
படமும், படத்திற்கேற்ற கவிதையும், இலக்கணமும் அருமை...... இப்படி இலக்கணத்தோடு கவிதை எழுத எனக்கு தெரியாது - in fact, கவிதை எழுதவே வராது!
பதிலளிநீக்குநல்ல கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுகள்....
இலக்கணப்படி பாடலை எழுதிவிட்டேன்.
நீக்குஆனால் இந்த இலக்கணத்தில் தான் பாட்டு எழுதப்பட்டுள்ளது
என்பதை அறிய கொஞ்சம் சிரமமாக இருக்கும்.
அதனால் தான் இலக்கணத்தையும் எழுதினேன்.
தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஐயா.
இலக்கணத்தோடு இயற்றிய இலக்கியமா !? அருமை!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி புலவர் ஐயா.
அழகான ரசிக்க வைக்கும் கவிதையுடன் தமிழ் இலக்கணத்தையும் போதிக்கும் அருணாவின் சேவை தொடரட்டும். நன்று. (அந்தப் படம்... சான்ஸே இல்ல... சூப்பர்ப்)
பதிலளிநீக்குதமிழ் இலக்கணத்தைப் போதிக்கும் அளவிற்கு
நீக்குஎனக்கு தமிழ் அறிவு இல்லைங்க.
ஏதோ தெரிந்ததைச் சொன்னேன்.
படம் இணையத்தில் எடுத்தேன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.
ஆ..ஆ.. இலக்கணக்குறிப்புடனா! கன்னியும் தேவனும் அருமைதான். கன்னியின் இளமனது தேவன் கை பட்டவுடன் சீரழிந்துவிட்டதோ!
பதிலளிநீக்குஆமாங்க விச்சு... அதற்காகத்தான் கன்னி ஒருத் தீ என்று
நீக்குதலைப்பு வைத்தேன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நட்பே.
இந்த தேமா, தேங்கா, புளிமா, புளியம்மா, மாங்கா எல்லாம் எங்களுக்கு வாய்த்த வாத்தி ஒன்னும் சரியா கத்துத் தரலை; ஏதோ தமிழ் என்று ஒன்று படித்தோம்; அது தான் எல்லா சென்னைப் பள்ளிகளின் நிலைமை; தமிழுக்கு முன்னிரிமை ஏன் ஒரு உரிமையும் கிடையாது. வெட்கம்!
பதிலளிநீக்குஎங்கள் தமிழ் அறிவு----ஆ.வி கல்கி குமுதம் தமிழ் தான்!
வணக்கம் நம்பள்கி.
நீக்குநம் நாட்டில் எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் கற்றுத்தான் கொடுத்தார்கள். பிளஸ் 2 வரையில் அடிப்படைக் கல்விதான் கற்றோம்.
எனக்கும் ப்ளஸ் 2 வரையில் மா, தேமா, புளிமா.... என்று எதுவும் தெரியாது. ஆனால் அதன்பிறகு தமிழை எடுத்துப் படித்ததால் ஓரளவு கற்றுக்கொண்டேன்.
நீங்கள் மருத்துவத்திற்குச் சென்றுவிட்டீர்கள். உங்களுக்குத் தெரிந்த மருத்துவ வார்த்தைகள் எங்களுக்குத் தெரியாதே...
நீங்கள் சொன்ன “தமிழுக்கு முன்னிரிமை ஏன் ஒரு உரிமையும் கிடையாது. வெட்கம்!“ என்பது உண்மைதான்.
இந்தியா வெள்ளையிடமிருந்து சுதந்திரம் வாங்கிவிட்டாலும்
அவர்களின் மொழிக்கும் நாகரீகத்திற்கும் இன்னும் நாம் அடிமையாகத் தான் இருக்கிறோம்.
நம் தாய் மொழியிலேயே நாம் அனைத்துத் தொழில் முறை கல்வியையும் கற்றிருந்தால் இப்பிரட்சனை வந்திருக்காது.
(“எங்கள் தமிழ் அறிவு----ஆ.வி கல்கி குமுதம் தமிழ் தான்!“ -- ஒரு மருத்துவராக இருந்துக்கொண்டு வலையில் இப்படி கலக்குறீங்களே... இது போதாதா....? உங்கள் வலையில் வந்து படித்துவிட்டு என்ன பின்னோட்டம் இடுவது என்று தெரியாமல் விழிப்பது நான் மட்டுமே அறிந்த உண்மை. நம் கருத்துகளுக்கு அலங்காரம் எதற்கு? அறிவுறுத்தும் கருத்துப் புரிந்தாலே போதுமே)
நன்றி நம்பள்கி.
கன்னி ஒருத்(தீ) !!
பதிலளிநீக்குஇலக்கணமும் இலக்கியமும் அருமை ..!
தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.
இலக்கணத்தோடு.. கலக்குங்க தோழி..
பதிலளிநீக்குதங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி நண்பரே.
(என்னை “அருணா“ என்றே அழைத்தால் மகிழ்வேன். நன்றி.)
தலைப்பும் படமும் அருமை.
பதிலளிநீக்குஇலக்கணத்தோட கவிதை... சான்சே இல்லை. நான் சின்ன வயதில் கணக்கும் இயற்பியலும்தான் ஒழுங்காகப் படிக்கவில்லை! இலக்கணமாவது படித்திருக்கலாம் என்று தோன்றுகிறது!
அட... நீங்களும் என்னைப் போலத்தானா....?
நீக்குநானும் எதையும் சரியாகப் படிக்கவில்லை.
இலக்கணத்தைக் கூட...
இப்பொழுது தமிழில் பிழையாக எழுதிவிட்டால் வந்து கண்டு பிடித்து சொல்கிறார்களே என்று வெட்கப்பட்டு சரியாக எழுத முயற்சிக்கிறேன்.
அப்படியும் பிழைகள் வந்து விடுகிறது. அது என் அலட்சியம் இல்லை. அறியாமை தான்.
இன்னும் நான் சரியாக படிக்கனும்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
அனுபவ கருத்தை உரைத்ததற்கும்
மிக்க நன்றி நட்பே.
அழகான வரிகளுடன் அருமையான இலக்கண விளக்கம் எனக்கு உதவும் வகையில் சிறப்பு தொடருங்கள் சகோ.
பதிலளிநீக்குசசிகலா.... நெஜமாலுமே இந்த இலக்கணம் உங்களுக்குப் புரிந்து விட்டதா....
நீக்குஅப்படியென்றால் எனக்குத் தெரிந்த அனைத்து யாப்பு இலக்கணத்தையும் சொல்லித் தந்து விடுகிறேன்.
தெரியப்படுத்துங்கள்.
தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சசிகலா.
த.ம.6
பதிலளிநீக்குஅழகா சொல்லித் தந்திருக்கிறீங்கள்.முயற்சித்துப் பாக்கிறேன்.வருமெண்டு நினைக்கிறீங்க ?!
பதிலளிநீக்குமுயற்சித்தால் நிச்சயம் வரும்.
நீக்குஇப்பொழுதே என் வாழ்த்துக்கள் ஹேமா.
மிக்க நன்றி.
நல்லா இருக்கு..
பதிலளிநீக்குநன்றி ஹாரி.
நீக்குஅடுத்து உங்க கதை எழுதும் பிளாக்கில் விட்ஜெட் சேருங்க.. தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை..
பதிலளிநீக்குஅதை எப்படிச் சேர்ப்பது என்று சொல்லித் தாருங்கள்.
நீக்குநான் தானாகவே ஏதாவது செய்யப்போய்
என் கணிணியில் பல மாற்றங்கள்
வந்துவிடுகிறது ஃபிரெண்ட்.
நன்றி ஹாரி.
இலக்கண விளக்கத்துடன் கவிதை அழகு.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
இலக்கணத்துடன் கவிதை! நல்லதொரு முயற்சி! என்னைப்போன்றவர்கள் கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்! மிக்க நன்றி! கவிதை மிக அருமை! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html
பதிலளிநீக்குஅருமையான தலைப்பு வைத்திருக்கிறீர்கள்.
நீக்குஉடனே வந்து படிக்கிறேன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ் ஐயா.
விளக்கத்துடன் கூடிய கவிதை அருமை
பதிலளிநீக்கு