வியாழன், 31 ஜனவரி, 2013

உதடுகள் ஒட்டக் கூடாது !!



நட்புறவுகளுக்கு வணக்கம்.

   முதலில் நான் எழுதிய இந்த மூன்று குறட்பாக்களையும் படியுங்கள். இதில் ஒரு சிறப்பு இருக்கிறது. இந்தச் சாதாரண பாடலை இவ்வளவு பெரியதாய் ஏன் சொல்கிறேன் என்றால் இந்த குட்டிக் குட்டி  குறள் வெண்பாக்களை எழுத எனக்கு மூன்று நாட்கள் ஆகியது.
   இப்பாவின் இலக்கணத்தைப் படித்ததும் நாமும் எழுதிப் பார்க்கலாமே என்று எழுதினேன். நீங்களும் படித்துப் பாருங்கள். 

  
இதன் பெயர் “இதழ் அகல் குறட்பா !!“

1.
அகரத்தை நன்றே அளித்திட்ட நாளின்
நிகழ்ச்சியை நெஞ்சே நினை!

2.
சாத்திரங்கள் சாற்றிய சங்கதியை நெஞ்சத்தில்
நாத்திகர்கள் ஏற்றால் நகை!

3.
நாட்டில் நலக்கேடாய் ஆட்சி நடந்ததை
ஏட்டில் இயற்றி இணை!


இதன் இலக்கணம்

1.  உதடுகள் குவியக் கூடாது.
2. உதடுகள் ஒட்டக்கூடாது
3. உ, , , , இவ்வெழுத்தக்கள் வரக்கூடாது.
4. ப, , , வர்க்கங்கள் வரக்கூடாது.

அதாவது வரக்கூடாத எழுத்துக்கள்

உ, ஊ, ஒ, ஓ. ஔ

கு, கூ,கொ, கோ, கௌ
-          ஙொ ஙோ,ஙௌ
சு, சூ, சொ, சோ,சௌ
- - ஞொ ஞோ, ஞௌ
டு, டூ,டொ, டோ, டௌ
ணு, ணுர் ணொ ணோ, ணேள
து, துர், தொ, தோ, தௌ
நு, நுர், நொ, நோ, நேள
, பா, பி, பீ. பு, பு. பெ, பே, பை, பொ, போ, பௌ, ப்
, மா. மி. மீ மு. மூ. மெ. மே. மை. மொ. மோ. மௌ. ம்
வ. வா. வி. வீ. வு. வு. வெ. வே. வை. வொ. வோ வௌ வ்
யு. யு. யொ, யோ, யௌ
ரு, ரூ ரொ. ரோ, ரௌ
லு. லுர். லொ, லோ, லௌ
ழு. ழு. ழொ. ழோ. ழௌ
ளு. ளுர். ளொ, ளோ. ளௌ
று, றுர் றொ, றோ, றௌ
னு, னுர். னொ, னோ, னௌ.
  
வரவேண்டிய எழுத்துக்கள்.

, ஆ. இ, ஈ. எ, ஏ ஐ,

, கா, கி, கீ. கெ, கே கை க்
, ஙா, ஙி, ஙீ, ஙெ, ஙே, ஙை, ங்
, சா, சி, சீ. செ. சே, சை, ச்
, ஞா, ஞி, ஞீ, ஞெ, ஞே, ஞை, ஞ்
, டா, டி. டீ, டெ, டே, டை, ட்
, ணா, ணி, ணீ, ணெ, ணே, ணை, ண்
, தா, தி, தீ. தெ, தே, தை, த்
, நா, நி, நீ, நெ, நே, நை, ந்
, யா, யி, யீ, யெ, யே, யை, ய்
, ரா, ரி, ரீ, ரெ, ரே, ரை, ர்
, லா, லி, லீ, லெ, லே, லை, ல்
, ழா, ழி, ழீ, ழெ, ழே, ழை, ழ்
, ளா, ளி, ளீ, ளெ, ளே, ளை, ள்
, றா, றி, றீ, றெ, றே, றை, ற்
, னா, னி, னீ, னெ, னே, னை, ன்

முக்கியமாக “குறள் வெண்பாஇலக்கணத்தில் எழுத வேண்டும்.

அருணா செல்வம்.
01.02.2013

(முக்கியமா... நான் இதில் தவறேதும் செய்திருந்தால் அவசியம் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றி.)




35 கருத்துகள்:

  1. சட்டம், நாம்.... உதடுகள் ஒட்டுகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றி விட்டேன்.

      தங்களின் வருகைக்கும் தவற்றைச் சுட்டிக் காட்டியமைக்கும் மிக்க நன்றி “ஸ்கூல் பையன்”

      நீக்கு
  2. அருமை அருமை
    மீண்டும் மீண்டும் படித்து பூரிப்படைந்தேன்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  3. எனக்கு இந்த தலைப்பு பிடிக்கவில்லை. உதடும் உதடும் ஒட்டாமல் அப்படி என்ன தான் இருக்கிறது இதில்?

    இலக்கணத்தை பார்க்கிறேன் என்று கவிதையில் சுவையை கோட்டைவிட்டுவிட்டீர்களே !

    அட நான் தாங்க. . .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட நான் தாங்க அவர்களே....

      இதில் ஒரு சிறப்பு இருப்பது தெரியவில்லையா...?
      ஆதாவது உதடே இல்லாதவர்கள் கூட இந்தக் கவிதைகளைச் சத்தம் போட்டு சிறப்பாகப் படிக்கலாம்.

      இது உதடு இல்லாதவர்களுக்காக எழுதியக் கவிதை!

      ஆனால் நீங்கள் சொன்ன “இலக்கணத்தை பார்க்கிறேன் என்று கவிதையில் சுவையைக் கோட்டை விட்டு விட்டீர்களே !“ என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. (கருத்துள்ள கவிதை தான்ப்பா... (தாம்ம்ம்மா)

      பரவாயில்லை... எனக்கு வேறு ரசிகர் மன்றம் திறக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறீர்கள். அதனால் நிச்சயம் உங்களுக்காக ஒட்டும் கவிதை ஒன்றை ஒருநாள் எழுதிவிடுகிறேன்.

      வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு

  4. தவறு இல்லாமல் தமிழ் எழுதுவதே கடினமாக இருக்கும்போது இம்மாதிரி புதிய முயற்சிகள் எனக்கு அகலக்கால் வைப்பது போல் இருக்கும். உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  5. நமக்கு ரொம்ப இலக்கணம் தெரியாது! குறள்கள் ரசிக்க வைத்தன! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  6. குருவுக்கு தகுந்த சிஷ்யன் என்பதை நிருபிக்கும் முறை இது. என்னைப் பொருத்த வரை பாலசுப்பு ஐயா சொன்னதை தான் நானும் வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருவைப்போல் குற்றமின்றிப் பாபுனைய ஆசை!
      அருந்தமிழே நல்லறிவைத் தா!

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா

      நீக்கு
  7. //இதில் ஒரு ஸ்பெஷல் (தமிழில் தெரியவில்லை) //
    சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் “சிறப்பை“ச் சுட்டிக் காட்டியமைக்கும்
      மிக்க நன்றி சேக்காளி ஐயா.

      நீக்கு

  8. வணக்கம்!

    நல்ல நெறிகளை நல்கினை! நற்றிறனில்
    இல்லை இணையே இனி!






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் அவர்களுக்கு வணக்கம்.

      இனியிணையே இன்றி இசைத்தக் கலைஞர்
      கனிக்கிணையாய்க் காத்தீர் எனை!

      நீக்கு
  9. அன்புத்தோழி அருணா!
    அருமையாக இருக்கிறது உங்கள் முயற்சி. இப்பொழுதுதான் பார்த்தேன் உங்களின் இப் பதிவை. பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! இதுபோல் வித்தியாசமாக இன்னும் தாருங்கள். நாமும் கொஞ்சம் எம்மை மெருகேற்றலாம்...:)

    தரவுகளைத் தந்துதவியதால் நானும் ஏதோ முயற்சித்துள்ளேன். பாருங்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள் தோழி.ஐயா பாரதிதாசனும் பார்த்தால் என்ன சொல்வாரோ என தயங்குகின்றேன்...:)
    ------------------------------------------

    அலைகடல் ஆழியிலே ஆழ்ந்திட்ட சங்கினிலே
    நிறைந்திட்ட இசைதனைக் கேள்!

    ஐயிரண்டே திங்கள் தன்னகத்தே எனைத்தாங்கித்
    தரணியிலே தந்திட்ட அன்னை!

    எனைக் காத்திடத் தன்னிலையைத் தான்நினையாக்
    காதலனைக் காண்கையிலே கண்கள்கலங்கியதே...

    பதிலளிநீக்கு
  10. அன்புத் தோழி இளமதிக்கு வணக்கம்.

    தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
    மிக்க நன்றி.

    உண்மையில் நான் உங்களை பாராட்டியே தான் ஆக வேண்டும்.
    அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
    முயற்சி திருவினையாக்கி இருக்கிறது.

    ஆனால் என்ன.... நீங்கள் குறட்பா இலக்கணத்தில் எழுதி இருந்தால்
    இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் மேலும் எழுத
      ஊக்குவித்தமைக்கும் மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  12. இலக்கணம் படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள்.தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருமே கற்றுக்கொண்டால்
      தமிழில் மரபுக்கவிதைகள் அதிகம் வரும்
      என்ற சின்ன முயற்சிதான் கவியாழி ஐயா.
      நன்றி.

      நீக்கு
  13. நல்ல முயற்சி குறட்பாவின் இந்த வகையை நான் அறிந்ததில்லை.

    இரண்டாவது குறளில் "சொ" என்ற எழுத்து வந்து விட்டதே! கவனிக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சுட்டிக்காட்டிய தவற்றைத் திருத்தி விட்டேன்.

      நானும் இந்த வகையை முதன் முதலில் முயற்சித்தேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  14. தமிழ் டீச்சர்:

    ஒண்ணுமே பிரியலை..பா! இந்த இடுகையைப் படிச்சா ஒரே கேரா இருக்கு..பா!

    எனக்கு நீங்க தான் தமிழ் டீச்சர்; இனிமேல், நீங்க தான் எனக்கு தமிழ் சொல்லித்தரனும்...!

    நீங்கள், ஒன்னும் இலவசமா சொல்லித் தரவேண்டாம்; பர்த்திக்கு, நான் மெட்ராஸ் பாஷையை உங்களுக்கு இலவசமாக சொல்லிதரேன்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பள்கி.... முதலில் என்னை “தமிழ் டீச்சர்“ என்று சொன்னதை வாப்பஸ் வாங்கிக் கொள்ளுங்கள். ஏன் என்றால் நான் இன்னும் மாணவி தான்.
      நம்பள்கி... இந்த மூன்று பாடலில் இருந்த தவற்றை இரண்டு பேர் சுட்டிக்காட்டித் திருத்தி இருக்கிறார்கள். இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள் நான் மிகவும் சின்ன மாணவி என்று!


      (அட... இன்னாப்பா ஒங்கிட்ட படா பேஜாரா பூட்சி....
      கவுதையைப் பச்சா பிரியல சரி... எதுக்கு கேரா ஆவனும்..?
      அந்த கவிதைகளோட எலக்கணம் ரொம்ப சாதாரணம் தான் நைனா..
      மொதோ அர்த்தம் என்னன்னா...
      நாம படிக்கிறப்போ நடந்த இல்லாட்டி சொல்லிக்கொடுத்த
      நிகழ்ச்சிகளை மனசுல நன்றாகப் பதிய வைச்சிக்கோ.
      அடுத்தாப்புல...
      சாமியெல்லாம் சும்மான்னு வெளியில பேசி பேர் வாங்கிபுட்டு
      ஊட்டுல உழுந்து உழுந்து சாமி கும்புட்டு நடிக்கிறவனப் பாத்தாக்கா கைகொட்டி சிரி.
      அதுக்கப்பால... மூனாவது...
      பண்பாட்ட காப்பாத்துனும் என்று நாட்டுல நடக்கிற
      அக்கரமங்களை மறைக்காம அப்டியே எழுதி வெளியிடு.

      இத்தாம்பா இதுக்கெல்லாம் பொருளு.

      பிரிஞ்சிதாப்...பா?)


      நீக்கு
    2. நிறைய சொற்குற்றங்கள் உள்ளாது--உங்கள் மெட்ராஸ் பாஷையில்...ஒன்று இரண்டு சொல்கிறேன்...

      இன்னாப்பா தவறு. இன்னா..பா சரி; ப் சந்தி இங்கு வராது; அதான் சென்னைத் தமிழ்..

      இல்லாட்டி தவறு; இல்லாங்காட்டி சரி;

      அடுத்தாப்புல தவறு. அப்பால சரி.

      நீக்கு
  15. அருமையான முயற்சி ..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  16. சிறந்த முயற்சி. இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கோவைக்கவி.

      நீக்கு
  17. இதழ் அகல் குறட்பா அப்படின்னு ஓண்ணு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேங்க . முயற்சிக்கு வாழ்த்துக்கள் அருணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் நாளஞ்சி நாளுக்கு முன்னாடி தான் தெரிஞ்சிக்கிட்டேன்.
      சரி எழுதி பார்க்கலாமேன்னு எழுதினேன்.

      தங்களின் வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு