செவ்வாய், 15 ஜனவரி, 2013

ஐந்து வயது குழந்தை கைது..!! (நிகழ்வு)






   கடந்த ஜனவரி பத்தாம் தேதி, பிரான்சிலுள்ள பிரேனே அட்லாண்டிக் என்ற ஊரிலிருந்த ஒரு சிறுவர் பள்ளியில் கேன்டீனில் உணவு உண்டுக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி லியாவை அவ்வூர் போலிசார் கைது செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

   காரணம், அவள் 170 யுரோ கான்டீனுக்குக் கட்ட வேண்டுமாம். (என்ன கொடுமையிது...? குழந்தைக்கு யுரோவைப் பற்றி என்ன தெரியும்?) அவளின் பெற்றோர்கள் குடும்பப் பிரட்சனையின் காரணமாகப் பிரிந்திருப்பதால் இருவருமே கான்டீனுக்குப் பணம் கட்டாததால் வந்தப் பிரட்சனை இது.

    அவளுடன் இருந்த மற்ற குழந்தைகளும் இதனால் அதிர்ச்சிக் குள்ளாகிப் போனார்கள். ஏன் லியாவை போலிஸ் அழைத்துக் கொண்டு  போகிறது என்று தெரியாமல் கலங்கி பயந்தார்களாம்.

    அதற்கு பிரான்ஸ் கல்வி அமைச்சர் இதை “வன் முறை சட்டம்“ ("acte de violence".) என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இது பொறுப்பற்ற பெற்றோர்களின் செயலால் தான் விளைந்தது என்றும் கூறி அந்த நகர மேயர் இதற்காக “வருத்தம்“ தெரிவித்துள்ளார்.

    அந்தக் குழந்தையை மீட்ட தந்தை இந்த நிகழ்ச்சியால் லியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளாள் என்றும்... அது குறித்து தன் மகளிடம் பேசியபோது “போலிஸ் வந்து தன்னை அழைத்துச்சென்றதும் அம்மா அப்பாதான் இறந்து விட்டார்களோ.. என்று பயந்து போனேன்“ என்ற குழந்தை பயந்து போய் சொன்னாள் என்று பத்திரிகைக் காரர்களிடம் கூறியுள்ளார்.



(சட்டம் தன் கடமையைச் சரிவர உடனுக்குடன் செய்கிறதாம்)



மேலும் அறிய http://bigbrowser.blog.lemonde.fr/2013/01/10/ecole-une-eleve-de-maternelle-emmenee-au-poste-de-police-pour-impayes-de-cantine/

அருணா செல்வம்.
   

16 கருத்துகள்:

  1. அடடா... அக்குழந்தை மனது என்ன பாடு பட்டிருக்கும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க... அந்தக் குழந்தை கவலைப்பட்டு இருக்காது.
      ஏன் என்றால் அதற்கு கவலை என்பது என்னவென்று
      தெரியாத வயது.
      ஆனால் நிச்சயம் அதிகமாக பயந்து இருக்கும்.

      கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  2. என்னதான் சட்டம்னாலும் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டத்திற்கு மனிதாபிமானம் என்பது இல்லை என்றாலும்
      அந்தக்குழந்தையின் மேல் புகார் கொடுத்தவர்களை
      என்னவென்று சொல்வது.

      கருத்திற்கு
      மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

      நீக்கு
  3. நம்ம நாடுபோலவே எல்லா நாட்டிலும் சட்டம் லூசு தனமாதான் இருக்கும் போல ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம நாட்டுல சட்டம் லுாசா இருக்கிறதா....?
      இங்கே ரொம்ம்ம்ம்ப இறுக்கமாக இருக்கிறது
      என்று தான் நினைக்கிறேன்.

      தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி ராஜா.

      நீக்கு
  4. இந்தியாவில் 21 வயது ஆகும் வரை ஆண்கள் குழந்தைகள் தான்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... அதனால் தான் அதிக பாலியல் வன்முறைகள்
      நடக்கின்றதா...? பாவம் அவர்கள் ஏதும்
      அறியாத குழந்தைகள் இல்லையா...?

      கருத்திற்கு மிக்க நன்றி நம்பள்கி.

      நீக்கு
  5. petroorkal thirunthanum ....



    akkuzhanthai manam ayyo eppadi kaayapattirukkum...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னது உண்மை தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      நீக்கு
  6. மிக மிக மோசமான கண்டிக்கத்தக்க செயல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... நீங்கள் சொல்வது சரிதான்!
      ஆனால் யாரை கண்டிப்பது...?
      பெற்றோரையா...?
      புகார் கொடுத்தவர்களையா...?
      போலிசையா...?

      இதில் யாரை யார் கண்டிப்பது ஜெயசந்திரன்...?

      வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. இவர்களின் இதுபோன்ற அறிவற்ற செயலால், குழந்தையின் மனநிலை மிகவும் பாதிக்கும். குழந்தைக்கு தேவையில்லாத பயம் ஏற்படும். கண்டிக்கத்தக்க செயல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.

      நீக்கு
  8. குழந்தையின் மனநிலை மனதை நெகிழச் செய்கிறது !

    பதிலளிநீக்கு
  9. குழந்தை மீது ஏறி மிதிக்கும் சாமியார் இருக்கும் இந்த நாட்டில் சட்டம் சூப்பர் ஆ இருக்குதோ???

    பதிலளிநீக்கு