நெற்பையோ கொம்படைய நெஞ்சம் மயங்கிடும்!
நற்சொல்லோ கொம்படைய நற்பிரிவாம்! – பற்றுடைய
தேனமைதி கொம்படைய சேறுமினம்! கானகத்தின்
தானழகு கொம்படைய தா!
.
நெற்பை – சாக்கு
கொம்படைய சொக்கு
நற்சொல் – பதம் கொம்படைய பேதம்.
அமைதி – சாந்தம்
கொம்படைய சொந்தம்.
கானகம் – காடு
கொம்படைய கொடு.
.
பாவலர் அருணா செல்வம்
26.03.2020
(கொம்படைதல்
என்பது தமிழில் உள்ள கொம்பில்லாச் சொற்களில் கொம்பினைச் சேர்த்தல் என்பதாகும். உதாரணமாக “காடை“ என்ற சொல்லில்
கொம்பைச் சேர்த்தால் “கொடை“ அல்லது “கோடை“ என வரும். வெண்பாவில் கொம்பில்லாச்
சொல்லும் கொம்படைந்த சொல்லும் அதன் மாற்றுப் பெயர்களைக் கொண்டு பாடப்படுவது “கொம்படைந்த வெண்பா“ எனப்படும்.)
கொம்படைதல் பற்றிய விளக்கம் சிறப்பு...
பதிலளிநீக்கு