நொண்டிச் சிந்து ! - 2
.
தமிழெனும்
மொழியினி லே – முழ்கித்
தண்ணொளி
வீசிடக் கண்டிருந் தேன்!
அமிழ்தெனும்
வார்த்தையி லே – நீந்தி
அழகெனும்
கவிதையில் பழகிவந் தேன்!
பெண்ணெனும்
பேதமை யால் – அதில்
பிணைந்திட்ட
வார்த்தையில் இணைந்திருந் தேன்!
விண்வெளி
பறப்பது போல் – இதயம்
விரித்திட்ட
சிறகென வரித்திருந் தேன்!
வளமிடும் கவிதைகண் டே – பூவை
வருடிடும் வண்டென உருகிநின் றேன்!
உளமெனும் கூட்டுக்குள்ளே – தேனை
ஒளித்திடும்
அழகினில் களித்துநின் றேன்!
இசையதன்
மயக்கத்தி லே – என்னுள்
இறங்கிய
உணர்வினில் மறந்திருந் தேன்!
திசையெனும்
எட்டினி லும் – அதன்
திருமுகம்
கண்டிட விரும்பிநின் றேன்!
மனமிடும் கலைகளி லே - இன்ப
மலரினுள் மணமென
வளரவிட் டேன்!
குணமதை அறியவில் லை – உண்மை
கொடுத்திடும் அடிதனில் ஒடுங்கிவிட் டேன்!
குழந்தையின்
உயர்வுகண் டே – அன்னை
கொடுமைகொ
டுமையெனத் தடுப்பது மேன்?
பழமையில்
சூழ்ந்துகொண் டே – குரு
பகைமையை
வளர்த்தியுள் திகைப்பது மேன்?
குறையெது
தேடிநின் றேன் – சினம்
கொண்டிடக் கருமையாய்க் கண்ணிசைக் கும்!
இறையிடம்
கொடுத்துவிட் டேன் – கரு
இன்னிசைக்
கொட்டிடப் பண்ணிசைக் கும்!
.
பாவலர்
அருணா செல்வம்
14.03.2020
ஆகா...! அருமை...
பதிலளிநீக்குஅருமையான பா இசையோடு பருகிட
பதிலளிநீக்கு