பாடலில் இடையிலிருக்கும் (நேரிசை
வெண்பாவில் தனிச்சொல்லாக நிற்கும் சொல். மற்றப்பாடல்களின் நடுவில்
வரும் ஒரு சொல்) ஒரு சொல்லானது பண்பைக் குறிப்பது போல் வந்து,
அந்தச் சொல்லே பாடலின் எல்லா இடங்களுக்கும் சென்று
இயைந்து பொருள் உணர்த்துவது “இடைநிலைக் குணத் தீவகம்“
ஆகும்.
.
உ. ம்
நவமொழிப் பேச்சினால் நங்கைமுகம் நாண
அவன்தொட உள்ளம் அழகாய் – சிவந்தனவே!
கன்னமும் கைகளும் கண்ணும் தலைவனின்
இன்பமெனும் மார்பில் இணைந்து!
பொருள் – தலைவனின் பல்சுவைப்
பேச்சினால் அந்த மங்கையின் முகம் நாணத்தால் சிவந்தன. அவன் அவளைத் தொட உள்ளமும் சிவந்தன. அவன் மார்பில் தலையைச்
சாய்வதால் அவளின் கன்னமும் கைகளும் கண்களும் வெட்கத்தால் சிவந்து போனது.
இப்பாடலின்
நடுவில் இருக்கும் “சிவந்தன“ என்ற பண்பைக்
குறிக்கும் சொல்லானது முகம், உள்ளம், கன்னம்.
கைகள், கண்கள் ஆகிய சொற்களோடு இயைந்து பொருள்படுவதால்
இது “இடைநிலைக் குணத்தீவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
08.05.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக