உயர்ச்சி வேற்றுமை – (கூற்று
வேற்றுமை)
பாடலில் கூறப்பட்ட இரண்டு பொருட்களும் ஒப்பாக இருப்பினும், அதில் ஒரு பொருளை மட்டும் மற்றதைவிட இதனால் உயர்ந்தது இது என்று
உயர்த்திப் பாடுவது “உயர்ச்சி வேற்றுமை“ எனப்படும். (கூற்று வேற்றுமை – வெளிப்படையாக வேற்றுமை கூறுவது)
.
உ. ம்
தென்னையும் வாழையும் தீங்கின்றி
நாம்வாழத்
தன்னுடலை ஒப்பாகத் தந்துதவும்! – இன்பமுடன்
நன்குண்ண ஓரிலை நல்கிடும் வாழைபோல்
தென்னைக்கோ இல்லை தெரிவு!
.
பொருள் – தென்னை
மரமும் வாழை மரமும் எவ்வித தீங்குகளும் இன்றி உலக மாந்தர் வாழ்வதற்கு தன் உடலை
தந்து உதவுவதில் ஒப்பாக உள்ளது. ஆயினும், இன்பமுடன் அமர்ந்து உணவு உண்ண வாழையின் இலை உதவிடும். ஆனால் தென்னை இலைக்கு அந்த அகன்ற தோற்றம் கிடையாது.
….. பாடலில் கூறப்பட்ட இரண்டு பொருட்கள்
ஒன்று வாழை. மற்றொன்று தென்னை. இரண்டும்
தன் உடல் முழுவதையும் உலகிற்கு கொடுப்பதில் ஒப்பானது தான். ஆயினும்
அகன்ற இலை கொண்ட வாழையிலையில் உணவு பரிமாறி உண்ண முடியும். தென்னை
இலையில் அவ்வாறு செய்ய இயலாது என்று ஒன்றுக்கு மட்டும் உயர்வு கூறி இருப்பதால் இது
“உயர்ச்சி வேற்றுமை“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
18.05.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக