ஒவ்வொரு உயிரையோ
பொருளையோ அதனதன் குணத்தின் தன்மையை மாற்றாமல் பாடுவது குணத்தன்மை அணி எனப்படும்.
உ.ம்.
குயிலெல்லாம் கூவ, குரங்குகள் தாவ,
மயில்கள் அகவ
மகிழும்! – பயிரோ
வணங்க விளைந்திடும்!
வாழும் உயிரின்
குணத்தன்மை மாறாத
கூற்று!
பொருள் –
குயில்கள் கூவும், குரங்குகள் தாவும், மயில் அகவும், பயிர் மண்ணில் சாய்ந்தால் தான்
விளையும் என்று உலகில் வாழும் உயிர்களின் குணங்களின் தன்மை மாறாததாக
உள்ளது.
பாடலில் அதன் அதன் குணங்களின் தன்மை மாறாமல் கூறியதால் இது குணத்தன்மை அணி ஆகியது.
பாவலர் அருணா
செல்வம்
02.12.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக