பாடலில் முதலில் உவமையைக் கூறிவிட்டு,
பின்பு அதை மறுத்து உண்மைப் பொருளினையே கூறி முடிப்பது “உண்மை உவமை அணி“ எனப்படும்.
கார்மேகம் அன்று கருங்குழலே! செம்மையெனும்
நேர்வழி அன்றவள் நீள்வகிடு! – சேர்த்திருக்கும்
முத்தன்று பல்வரிசை! முத்தமிடும் என்னவளோ
சொத்தில் உயர்வென்று
சொல்லு!
பொருள் – மழைதரும் கார்மேகம் இல்லை. கருங்கூந்தல்
தான். வாழ்வைச் செம்மையாக்க நடக்கும் நேர்வழிப்பாதை இல்லை,
அது அவளின் வகிடு, கோர்வையாக
கோர்த்திருக்கும் முத்து மாலை அல்ல, அது அவளின் பல்வரிசை.
என்னை முத்தமிடும் என்னவளின் சொத்தானது மற்றதற்கு ஓப்பாகாது…
என்று முதலில் உவமையைக் கூறி பின்பு அதை மறுத்து உண்மை பொருளையே கூறியதால்
இது “உண்மை உவமை“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
26.12.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக