ஒரு பாடலில் உள்ள
ஒரு பொருளுக்கு உவமை கூறி,
பின்பு, அந்த உவமைக்கு அந்த
பொருளையே திரும்பவும் கூறி வருதல் “இதரவிதர உவமை“ ஆகும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒன்றுக்கொன்று உவமையாக வருதலே
ஆகும். இதைத்
“தடுமாறு உவமை“ என்று தொல்காப்பியம்
கூறுகிறது.
உ. ம்
கூர்விழி போல்வாலோ! கொன்றிடும் வால்போன்று
கூர்விழியோ! என்னவள் கூந்தல்போல்
– கார்முகிலோ!
கார்முகில்போல்
கூந்தலோ!
கண்ணிருந்தும் என்சொல்வேன்?
தேர்ந்தெடுத்துச்
சொன்னால் சிறப்பு!
பாடலில்
கூர்விழியைப் போல் வால் என்று உவமை கூறியபின் அவ்வாலுக்கே விழியை உவமை கூறப்பட்டு
வந்துள்ளதால் இது
“இதரவிதர உவமை“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
16.12.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக