இதைச் “சுட்டிக்
கூறா உவமை“ என்கிறது
தொல்காப்பியம்.
பாடலில் உவமை, பொருள்,
உவம உருபு, பொதுத்தன்மை
ஆகிய நான்கும் அல்லது
ஒன்றேனும், இரண்டேனும், மூன்றேனும் விரியாமல்
தொக்கு வருவது “தொகை
உவமை“ ஆகும்.
உ.ம்
குமுத முகமுடன்
கொவ்வை உதட்டால்
அமுத மொழியால்
அழைக்க – அமுதமழை
கொட்டும் நிலையில் கொழித்திடும்
நெஞ்சமதோ
சிட்டாய்ப் பறக்கும் செழித்து!
பொருள் – குமுதமலரைப் போன்ற
முகமும், கொவ்வைக் கனியைப் போன்ற உதடும், அமுதம் போன்ற மொழியால் அவள் என்னை அழைக்க,
அம்மொழி, கடவுள் கொடுத்த மழையால் கொட்டிடும் குளிர்நிலைபோல் என் நெஞ்சமானது சிட்டுப்போல்
செழிப்பாய் பறக்கும்.
பாடலில் குமுதம்
போன்ற முகம், கொவ்வைப்
போன்ற உதடு… என்று
உருபு விரியாமல் வந்துள்ளதால்
இது
“தொகை உவமை“ ஆனது.
பாவலர் அருணா செல்வம்
12.12.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக