புதன், 8 அக்டோபர், 2014

நாவுக்கரசியே!!




நற்றமிழ் நாயகியே! நாவுக்[கு] அரசியே!உன்
பொற்பாதம் பற்றிப் புகழ்கின்றேன்! கற்றவரும்
உற்றவரும் மற்றவரும் போற்றுகின்ற சொற்களைநான்
குற்றமின்றிப் பேசக் கொடு!
  

அருணா செல்வம்.

02.10.2014

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. சொற்சுவையும் பொருட்சுவையும்
    ஒருங்கிணைந்து இருக்கும்
    இப்பாடல் இலக்கிய உலகில்
    என்றென்றும்
    இனிதே நிற்கும்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் வாழ்த்து பலிக்க வேண்டும் என்றே வேண்டுகிறேன் தாத்தா.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுப்பு தாத்தா.

      நீக்கு
  3. நாவுக்கரசியை வேண்டிய நல்லதொரு வெண்பா!
    மிக அருமை! வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  4. ’யாகாவாராயினும் நா காக்க ‘ நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே நினைவில் தான் ஐயா நானும் எழுதினேன்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பாலசுப்ரமணியன் ஐயா.

      நீக்கு
  5. ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னமைக்கு ஒரு பாமாலை. வெண்பா பாடுவதில் நீங்கள் ஒரு புலி என நினைக்கிறேன்.
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெண்பா பாடுவதில் புலி..... நன்றி ஐயா. மிக்க நன்றி.

      ஆனால் என் ஆசிரியர் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் தந்தையார் கவிஞர் சனார்த்தனன் அவர்கள் “வெண்பா புலி“ என்ற பட்டத்தைப் பெற்றவர்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  6. அருமை! அருமை! சகோதரி! என்ன ஒரு அழகிய பா!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  7. நாவுக்கரசி வாழும் நா இதென்று
    அறிந்தேன் நான் அருணா.

    கலைமகள் அருட்பா சுவைப்பா....

    நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  8. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
    மிக்க நன்றி சுரேஷ்.

    பதிலளிநீக்கு