1.
கணவன் – “இப்படி நாம அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை அக்கம்
பக்கத்திலே இருப்பவங்கள் பார்த்தா சிரிப்பாங்க... தெரியுமா?“
மனைவி – “அப்போ நாம போடுற சண்டை அவ்வளவு தமாஷாவா இருக்கு!“
2.
கணவன் – “இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை!“
மனைவி – “அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?“
கணவன் – “உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்.“
3.
மனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு
மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?“
கணவன் – “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி.“
மனைவி – “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“
4.
கணவன் – “என்ன இது மிக்ஸி, கிரைண்டர், புடவைன்னு ஏகப்பட்ட சாமான்களோட வேன்ல
வந்து இறங்கிறே....!“
மனைவி – “நீங்க தானே சொன்னீங்க.... பேங்கில இருக்கிற நம்ம ஜாயிண்ட் அக்கவுண்டை
குளோஸ் பண்ணனும்ன்னு. அதைத் தான் செய்துட்டு வர்றேன்.“
5.
கணவன் – “ஏன் நான் உள்ளாற வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிடுற?“
மனைவி – “டாக்டர் தான், தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கச் சொன்னார்.“
6.
மனைவி – “வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப் போறா.... நீங்க பேசாம
நிக்கிறீங்களே....“
கணவன் – “திரும்பி வரட்டும்.... பதிலுக்கு நானும் உரசிக் காட்டுறேன் பாரு.“
7.
மனைவி – “வர வர எனக்கு இந்த நகை, புடைவைகள் பேரில் இருக்கிற ஆசையே விட்டுப் போயிடுச்சிங்க“
கணவன் – “நிஜமாவா சொல்லற?“
மனைவி – “ஆமாம். எத்தனை நாளைக்குத்தான் இந்தப் பழைய நகைகளையும், பழைய
புடவைகளையும் கட்டிண்டு இருக்கிறது.....“
8.
கணவன் – “இதோபாரு.... நம்ம வீட்டுல சினிமாச் செலவு
ரொம்ப அதிகமாயிட்டு வருது. இதைப் பாதியா குறைக்கணும். சரியா?“
மனைவி – “சரிங்க.... இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப்
போறேன்.“
9.
கணவன் – “வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என்
மனசை உறுத்திக்கிட்டே இருக்குது“
மனைவி – “அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்...?“
கணவன் – “வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம்
செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்“
மனைவி – கர்ர்ர்ர்ர்ர்.....
10.
மனைவி – “நீங்க எனக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித்தர்ற
மாதிரி நேற்று கனவு கண்டேன்“
கணவன் – “இன்னைக்கு அதைக் கட்டிக்கிறதா கனவு
கண்டுவிடு. சரியாய்ப் போயிடும்...“
11.
கணவன் – “அரை மணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ
பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?“
மனைவி – “எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்.“
12.
ஒரு குட்டிக்கதை
புறாவின் வாய் ஜாலம்!
சாலமன்
மிகப்பெரிய அறிவாளி.
அவருக்குப் பறவைகள் மற்றும் மிருகங்கள் பேசும் மொழியும் புரியும்.
ஒருமுறை
அரண்மனையில் உட்கார்ந்து கொண்டு வெளியே பார்த்தார்.
இரு
புறாக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஆண் புறா, பெண் புறாவிடம்
கோபமாக, “என்னை என்னவென்று நினைத்தாய்? நான் மனம் வைத்தால் இந்த மன்னரின்
அரண்மனையையே இடித்து நிர்மூலமாக்கி விடுவேன்“ என்று கூறியது.
இதனைக்
கேட்ட சாலமன் மன்னர், அந்த ஆண் புறாவைத் தன் அருகில் அழைத்தார். அருகில் வந்த
புறாவிடம்,
“என்ன
புறாவே.... இந்த அரண்மனையை இடித்து விடுகிறேன் என்றாயே.... எப்படி உன்னால்
முடியும்?“ என்று கேட்டார்.
அதற்கு அந்த
ஆண்புறா, “மன்னரே.... என்னால் எப்படி முடியும்? ஏதோ என் மனைவியைத் திருப்தி செய்ய
கூறினேன். அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்“ என்று கூறிவிட்டு தன்
மனைவியிடம் சென்றது.
“மன்னர்
கூப்பிட்டாரே.... எதற்குக் கூப்பிட்டார்?“ என்று பெண்புறா கேட்டது.
“நான்
அரண்மனையைத் தகர்த்து விடுவேன் என்று உன்னிடம் சொன்னதை மன்னர் கேட்டு பயந்து
விட்டார். எனவே தான் என்னைக் கூப்பிட்டு அப்படியெல்லாம் செய்தவிடாதே... என்று
என்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்“ என்றதாம் ஆண்புறா.
புறாவுக்குக் கூட மனைவி என்றால் என்ன்ன்னா இளக்காரம்....
ம்ம்ம்.
03.10.2014
பதிலளிநீக்குசிறந்த நகைச்சுவைப் பதிவு
தொடருங்கள்
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.
எல்லாமே அருமை. சில ரொம்ப அருமை.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.
ஹா....ஹா..ஹா...நல்ல கலெக்ஷன்ஸ் தான்:)) ஏனோ பல ஜோக்ஸ் நம்ம தமிழன் சகாவையே நினைவு படுத்துது. எங்க வந்துட்டாரா?
பதிலளிநீக்குவந்துட்டேன் வந்துட்டேன்
நீக்குதோழி...... ஏன் அவரை நினைவு படுத்த வேண்டும்.
நீக்குஎனக்கு பூரிக்கட்டை என்றால் மட்டும் தான் நினைவு வரும்....
சரி அவரே வந்துவிட்டார்......
நன்றி தோழி.
புறாவே இப்படியா
பதிலளிநீக்குஆமாங்க..... ஆண் புறா....
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
ஹா ஹா... எல்லாமே சூப்பர்..
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி வளர்ந்த...... ஸ்கூல் பையன்.
//மனைவி – “வர வர எனக்கு இந்த நகை, புடைவைகள் பேரில் இருக்கிற ஆசையே விட்டுப் போயிடுச்சிங்க“
பதிலளிநீக்குகணவன் – “நிஜமாவா சொல்லற?“
மனைவி – “ஆமாம். எத்தனை நாளைக்குத்தான் இந்தப் பழைய நகைகளையும், பழைய புடவைகளையும் கட்டிண்டு இருக்கிறது....//
உண்மையில் நகை- சுவை
ரசித்தேன் நகைத்தேன்
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி மூங்கில் காற்று.
வணக்கம்
பதிலளிநீக்குஅருமையான நகைச்சுவையும் இறுதியில் சொல்லிய கதையும் சிறப்பு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி ரூபன்.
ஹஹ்ஹஹ்ஹஹ்ஹ...செம ரொம்பவே ரசித்துச் சிரித்தோம்!
பதிலளிநீக்குபுறா மனைவியை இளக்காரமாக நினைக்கவில்லை ...அது தன் வெட்டி ஜம்பத்தைக் (இப்போதைய மொழியில் சொல்வதென்றால் சீன்) காட்டுகின்றதோ சகோதரி!?
ஆமாம். சீன் தான் காட்டியது. இருந்தாலும் என்னமா ஏமாற்றுகிறது பார்த்தீர்களா.....
நீக்குஇதை வேறு அந்த பெண் புறா நம்பனுமாம்..... என்ன கொடுமை சரவணா....
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி துளசிதரன் ஐயா.
அனைத்தும் ரசித்தேன் கதையும் நன்றகவே உள்ளது அங்குமா ஆண் அதிகாரம் வாழ்கிறது ..ம்...ம்..ம்நன்றி ! தொடர வாழ்த்துக்கள்...!
பதிலளிநீக்குஎங்குமே ஆண் அதிகாரம் தாங்க. ஆனால் ஆண்கள் அதை வெளிக்காட்டுவது இல்லை.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.
த ம ஆறு ..
பதிலளிநீக்குமிக்க நன்றி மது சகோ.
நீக்குபுறாக்கதை விழுந்து விழுந்து சிரித்தேன் ..
பதிலளிநீக்குவிழுந்தா தூக்கிவிட உங்களுக்கு பக்கத்தில் மைதிலி இருக்காங்க ஆனால் எனக்கு தூக்கிவிட ஆள் இல்லாததால் நான் குலுங்கி குலுங்கி சிரித்தேன்
நீக்குவிழுந்து விழுந்து சிரித்தேன்...
நீக்குகுலுங்கி குலுங்கி சிரித்தேன்....
இதைப்படித்த நான் வாய் விட்டச் சிரித்தேன்....
ஹாஹாஹா! ரசிக்க வைத்த நகைச்சுவைகள்! நன்றி!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி சுரேஷ்.
மனைவி – “நீங்க எனக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித்தர்ற மாதிரி நேற்று கனவு கண்டேன்“
பதிலளிநீக்குமதுரைத்தமிழன் –(மைண்ட வாய்ஸ் எவங்கிட்ட) நானும்தான் உங்க அப்பா தன் சொத்தை எல்லாம் எனக்கு எழுதி தருகிற மாதிரி கனவு கண்டேன்
உண்மைகள்..... இன்னைக்கு அந்தச் சொத்தெல்லாம் களவு போன மாதிரி கனவு கண்டுவிடுங்கள்.
நீக்குமதுரைத்தமிழன் – “இப்படி நாம அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதை அக்கம் பக்கத்திலே இருப்பவங்கள் பார்த்தா சிரிப்பாங்க... தெரியுமா?“
பதிலளிநீக்குமனைவி – “அப்போ நாம அடுத்தடவை போடும் போது உங்களை சாக அடிச்சுடுறேன்
ஏங்க இந்த கொலைவெறி.....
நீக்குநகைசுவையான பதிவு. ரசித்து படித்து சிரித்தேன்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி விசு ஐயா.
மீண்டும் நன்றி ஐயா.
பதிலளிநீக்குரசித்துச் சிரித்தேன்....
பதிலளிநீக்குஆஹா சூப்பர்..
பதிலளிநீக்குChanceless ma'am! Simply awesome. i laughed like anything. Sorry for commenting in English ma'am. presently no tamil software.
பதிலளிநீக்குஎன் உள்ளமும் சிரித்தது என் உதடுகலும் சிரித்தது
பதிலளிநீக்குஎன் உள்ளமும் சிரித்தது என் உதடுகலும் சிரித்தது
பதிலளிநீக்கு