வெள்ளி, 31 அக்டோபர், 2014

இம்சை தத்துவங்கள்!! – 2



1.பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ அம்மணமா தான் இருக்கும்.

2. அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்....

3. என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது...

4. ஒரு பெண் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் கருப்பாகத்தான் இருக்கும்.

5. பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே ஏன்....?

6. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு கொம்பு முளைக்காது.

7. குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா....

8. என்னதான் அரசியல்வாதிங்க கட்சி தாவினாலும்.... அவங்களுக்கு வால் முளைக்காது....

9. பிளேன் என்னதான் உயர உயர பறந்தாலும்.... பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகணும்.....

10. என்னதான் ஒருத்தருக்குத் தலைகனம் இருந்தாலும்.... அது எத்தனை கிலோனு எடைபோட்டு பார்க்க முடியாது....

11. கோழிக்கு கோடி கணக்குல தீனி வாங்கி போட்டாலும் அது முட்டைதான் போடும்... நூத்துக்கு நூறு எல்லாம் போடாது...

12. வாழ்க்கைக்கும் வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்.... ஒன்னுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்.... ஒன்னுமே இல்லாத வழுக்கை கிளார் அடிக்கும்.

13. என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்.... அதனால் அவிச்ச முட்டை போட முடியாது.

14. ஒரு சிற்பி உளியால கல்லுல அடிச்சா அது கலை. உளியால நாம சிற்பியை அடிச்சா அது கொலை.

15. சும்மா இருக்கிறவன், சும்மா இல்லாம, சும்மா இருக்கிறவங்கள, சும்மா சும்மா கிண்டல் பண்ணா.... சும்மா இருக்கிறவங்க, சும்மா சும்மா கிண்டல் பண்றவன, சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன்.....


இந்தப் பதிவு ஒரு ஜாலிக்காக.....

கடைசியா எனக்கு ஒரு சந்தேகம்ங்க..... பதில் சொல்லுங்க....ப்ளீஸ் 

    அதாவது ரொம்ப நாளா கண்ணி வெடி கண்ணி வெடின்னு சொல்லுறாங்களே.... இன்னுமா அதுக்குக் கல்யாணம் ஆகலை.......???!!!

49 கருத்துகள்:

  1. எல்லாமே பயங்கர ஹா...ஹா... ஹா... ரகம்! சில ரொம்பவே சிரிக்க வைக்கின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் ரசித்தமையை விவரித்தமைக்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  2. இத்தனை ஜோக் லே
    எந்த ஜோக் எந்த ஜோக்கை விட
    ஜோக்கா இருக்கு அப்படின்னு
    ஜோக்கர் கிட்டே ( சீட்டுக்கட்டு லே இருக்கற)
    கேட்டேன்.
    போ தாத்தா, நீ யே பெரிய ஜோக்கர்
    உனக்கு ஒரு ஜோக் தேவையா என்று
    அவன் ஜோக் அடிக்கிறான்.

    சும்மா சொல்லக்கூடாது.
    பெட்ரோல் ஜோக் தத்துவம்
    ஹை பிலாசபி.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாத்தா..... நீங்களும் நன்றாக ஜோக் அடிக்கிறீர்கள்.......

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சுப்பு தாத்தா.

      நீக்கு
  3. பெண்கள் பொதுவா கல்யாணத்துக்கு முன்னாடி கன்னி வெடி . கல்யாணத்துக்கு அப்புறம் கண்ணி வெடி. எப்போ எப்படி வெடிக்கும்னே தெரியாதே ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... கல்யாணத்திற்குப் பிறகும் அது “கண்ணி“ வெடியாகவே இருக்கிறதே.....

      நகைச்சுவையான பதிலுக்கு மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  4. கன்னி வெடிக்குக் கல்யாணமா
    ஆகா அருமை
    தம3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்குக் கல்யாணம் வேண்டாமா....?
      பிறகு ஏன் அதை “கண்ணி“ வெடி என்கிறார்கள்?

      நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு

  5. சிரிப்பு நல்ல மருந்து அந்த மருந்தை சாப்பிட்டு நீங்கள் நன்றாக குணம் அடைந்திருக்கிறீர்கள் என்பது இந்த பதிவின் மூலம் அறிய முடிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிங்கள் சொல்வதும் ஓரளவுக்கு உண்மை தான் “உண்மைகள்“

      சிரிக்கத் தெரியவில்லை என்றால் நாமெல்லாம் மிருகம் இல்லையா....?

      நீக்கு
  6. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பதால்தான் இந்த பதிவை போட்டு இருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் கவலை நம்முடனே இருக்கட்டுமே.... மற்றவர்களாவது (புர்ரிகட்டை அடியின் வலியை மறந்து) சிரிக்கட்டுமே.... என்ற நல்ல எண்ணத்தால் தான்.....

      நீக்கு
  7. பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ சின்ன துணியைத்தான் உடையாக பயன்படுத்த முடியும்

    பதிலளிநீக்கு
  8. என்னதான் பொண்டாட்டி நல்லவளாக இருந்தாலும் அவள் குண்டாக இருந்தால் தலையில் தூக்கி வைச்சு ஆட முடியாது

    பதிலளிநீக்கு
  9. ஆண்கள் ரொம்ப புத்திசாலியாக இருந்தாலும் கல்யாணம் பண்ணிய பின் பொண்டாட்டி சொல்லும் அறிவுரைகளை கேட்டுத்தான் ஆகணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
      கெடுப்பா ரிலானுங் கெடும்.

      என்று குறள் சொல்கிறது இல்லையா.....

      நீக்கு
  10. \\குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா....//

    தத்துவங்கள் எல்லாம் சூப்பர் அருணா.

    கன்னி வெடிக்கு கல்யாணம் ஆகலையே என்ற கவலை எல்லோருக்கும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ..... உங்களுக்கும் அந்த கவலை இருக்கிறதா கும்மாச்சி அண்ணா.....

      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  11. கண்ணிவெடிக்கு கல்யாணம் ஆகாமல் கண்ணியாக இருப்பதற்கு காரணம் தன்னை விரும்பி தொடுபவர்களை விண்ணுலகிற்கு அனுப்புவதால் இந்த மண்ணுலகில் அவளுக்கு கல்யாணம்மே ஆவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரும்பியோ விரும்பமலோ தொட்டதும் அவளும் தானே விண்ணலகம் செல்கிறாள்.

      அவள் இரக்கும் வரையில் “கண்ணி“ யாகவே இருப்பதால் தான் கல்யாணம் ஆகவில்லை.

      அப்பாடா.... கண்ணி வெடிக்குக் கல்யாணம் ஆகாத காரணத்தைக் கண்டு பிடித்தாயிற்று.

      நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  12. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  13. சினிமாப் படக் கதை எழுதுபவர்கள் பார்த்தால் சுட்டு விடுவார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வீட்டு வாண்டுகள் சொன்னதைத் தான் தொகுத்து எழுதினேன் ஐயா.

      அவர்கள் எங்கிருந்து சுட்டார்கள் என்பது எனக்குத் தெரியாது ஐயா.
      வருகைக்கும் மிக்க நன்றி பாலசுப்ரமணியன் ஐயா.

      நீக்கு
  14. ஆகா ஆகா முதலடியே துணிகடைக் காரருக்கு எல்லாம் அசத்தல் சிரித்தேன் வயிறு வலிக்க நன்றி சகோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ.... என்னால் உங்களுக்கு வயிறு வலிச்சுதா.... இதனால் வலித்தால் நன்றாக வலிக்கட்டும்.

      மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  15. ரசித்து மகிழ்ந்து சிரித்தேன்...சூப்பருங்கோ

    நன்றி
    வாழ்க வளர்க
    உமையாள் காயத்ரி.

    பதிலளிநீக்கு
  16. கன்னிக்கு கல்யாணம் ஆகலைன்னா வருத்தப்பட்டா நியாயம் ,கண்ணிக்கு ஏன் ஆகணும் :)
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னமோ.... கன்னி கன்னி... என்கிறார்களே என்ற கவலை தான் பகவான்ஜி.

      நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரி.!

    அனைத்தும் சிறப்பான( மன்னிக்கவும்) சிரிப்பினாலான தத்துவங்கள்.!
    ஒவ்வொன்றையும், ரசித்து அனுபவித்து சிரித்தேன்.!

    படைத்தமைக்கு வாழ்த்துக்கள்.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  18. ரசிக்க வைத்தன...
    கன்னி வெடியா... கண்ணிவெடியா?

    கண்ணிக்கு ஆனா என்ன ஆகலைன்னா என்ன... விடுங்க அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே..... நீங்க சொன்னதால இத்துடன் இதை விட்டுவிடுகிறேன் குமார்.

      நன்றி குமார்.

      நீக்கு
  19. அனைத்துமே ரசித்தேன்.....

    புன்சிரிப்புடன் தொடங்கியிருக்கிறது இன்றைய காலை! நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புன்சிரிப்பா.....

      என்னங்க நீங்க.... காலையிலேயே நல்லா வாய்விட்டு சிரிக்க வேண்டியது தானே....

      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  20. Seriously superb post ma'am. just now seeing your blog. the first one very awesome! be careful. cinema industry will rob it.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி வினோத் சுப்ரமணியன் ஐயா.

      நீக்கு
  21. ஹலோ ஹலோ உங்களுக்கு இன்று கல்யாணமாமமே சாரி நாள்ளாமே சாரி சாரி சாரி உங்களுக்கு பிறந்த நாள் என்று கேள்விபட்டேன். வாழ்த்துக்கள். பேஸ் புக்கிலும் வாழ்த்துக்கள் சொல்லிட்டேன் அதனால மறக்காம 2 சாக்லேட் கொடுங்க


    அப்புறம் ஒன்று சொல்ல மறந்துட்டேன் நாட்டுல பலபேர் உங்க கவிதைகளை காணத்தால் மிக சந்தோஷமாக இருக்கிறார்களாம் அதனனால சிக்கிரம் உங்க கவிதைகளை எடுத்து விடுங்க.. இல்லைன்னா நாட்டுல ஜனத்தொகை கூடிடும்

    அப்ப வரட்டுங்களா?

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழரே..... உங்களக்கு சர்க்கரை வியாதியா....?
      உங்களின் ஷிட் பதிவைப்பார்த்து (பொறாமைப் பட்டு) உங்களுக்கு ஒரு கூடை நிறைய பிரான்ஸ் சாக்லெட் அனுப்பலாம் என்று நினைத்தால்..... வெறும் இரண்டு சாக்லெட்டை கேட்டு விட்டீர்களே.....
      சரி போகட்டும்.
      நாளையே நீங்கள் கெட்ட 2 சாக்லெட்டை உங்களின் மெயில் முகவரிக்கு அனுப்பி விடுகிறேன்.


      அப்புறம் ஒன்று சொல்ல மறந்துட்டேன் நாட்டுல பலபேர் உங்க கவிதைகளை காணத்தால் மிக சந்தோஷமாக இருக்கிறார்களாம் அதனனால சிக்கிரம் உங்க கவிதைகளை எடுத்து விடுங்க.. இல்லைன்னா நாட்டுல ஜனத்தொகை கூடிடும்....

      அட. அப்படியா? இது நல்லதில்லையே..... சரி. சரி. நாளையிலிருந்து நம்ம ஆயுதத்தை எடுத்து விட வேண்டியது தான்.

      வாங்க.

      வாழ்த்துக்கு மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
    2. எல்லாமே சூப்பர்! ரொமப்வே சிரித்தோம்.

      சகோதரி அது கன்னி என்றால் தானே பெண் ....இது கண்ணி இல்லையோ? கண்ணி என்றால் மலர், தொடுக்கப்பட்ட மாலை.....கண்ணி வைத்துப் பிடித்தல்போன்ற பொருள் தானே!?

      நீக்கு
    3. அய்யா வணக்கம். அவுங்கதான் நகைச்சுவை (இம்சை, ஜோக்ஸ், நகைச்சுவை, மொக்கை)என்று போட்டு விட்டார்களே? அப்புறமும் ரொம்ப சீரியஸா கேக்குறீஙக?(கண்ணி வழக்குல கன்னி போதுமா சமாளிப்பு?) ஆமா நான் சரியாதானே கேட்டிருக்கேன் (???????? )

      நீக்கு
  22. எல்லாருக்குள்ளும் ஒரு குறும்புக்குழந்தை இருக்கிறது என்பது உண்மைதான் சகோதரீ. உஙகள் நகைச்சுவையை நான் பெரிதும் ரசித்தேன். இதுபோலும் “ரிலாக்ஸ்“பகுதி ஒவ்வொருவருக்கும் தேவைதான். நகைச்சுவை இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?

    பதிலளிநீக்கு