நானே வேண்டாம் என்றாலும்
நயமாய்
என்னுள் புகுந்துவிட்டாய்!
வீணே வந்த உன்வரவால்
வேலை
செய்யத் தோன்றாமல்
தேனாய் இருந்த வாய்கசக்க
தேகம்
சூட்டில் கொதித்திருக்க
கூனாய்ச் சுருள மனம்விரும்பி
கொடுத்த
வாக்கை செயத்தடுத்தாய்!
நோயே என்னுள் ஏன்வந்தாய்?
நொந்து போவேன்
எனநினைத்தா?
பாயே படுக்க அழைத்தாலும்
பணியைச்
செய்யத் தடுத்தாலும்
தீயே! உன்னை மதிக்கமாட்டேன்!
திரும்பி
உடனே போய்விடு!
நீயாய்ப் போகா விட்டாலும்
நானே உன்னை
அழித்திடுவேன்!
14.10.2014
அருமை சகோதரியாரே
பதிலளிநீக்குநோயால் என்ன செய்ய முடியும்
தம 1
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா.
நீக்குசும்மா கவிதைக்காகவா... உடல்நிலை உங்களுக்கே சரியில்லையா...
பதிலளிநீக்குஆயின், சீக்கிரம் குணமடைய பிரார்த்தனைகள்.
உண்மையிலேயே உடல் நிலை சரியில்லை. ஆனால் எல்லோருக்கும் வருவது தான். தலைவலி, காய்ச்சய், ஜலதோஷம்.....
நீக்குநீங்கள் உடனடியாக நலம் விசாரித்தது மனதுக்கு மிகவும் மகிழ்வைக் கொடுத்தது.
நானும் இந்த வலையுலகத்தில் நல்ல நட்புகளைச் சேர்த்திருக்கிறேன் என்ற திருப்தியும்.
அருணா விரைவில் நலம் பெறுவீர்கள்.
பதிலளிநீக்குகவிதை நன்றாக உள்ளது.
நன்றி கும்மாச்சி அண்ணா.
நீக்குசீக்கிரம் அழித்துவிட்டு
பதிலளிநீக்குவந்து
கவிதைகளை தாருங்கள்
முயற்சிக்கிறேன்.
நீக்குநம்ம உடல் காலி பெருங்காய டப்பா மாதிரின்னு சொல்லுவாங்க. உண்மை தான் போல.
நன்றி மது ஐயா.
இடும்பைக்கே இடும்பை படுத்தலோ கவிஞரே...?!!!
பதிலளிநீக்குஅறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அருமை!
பயந்து கொண்டே இருப்பதை விட ஒரு முறை துணிந்து
நீக்குமோதி பார்த்துவிடுவது நல்லது தானே கவிஞரே.
வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஐயா.
கவிதை அழகு! ஆனால் தங்கள் உடல் நிலை குறித்த கவிதை என்றால் ....வருத்தம். உங்கள் உடல் நிலை சீக்கிரம் குணமடைய எங்கள் பிரார்த்தனை. சீக்கிரம் குணம் அடைந்தால்தான் நீங்கள் இன்னும் எழுதுவீர்கள் எங்களுக்கும் கவிதைகள் கிடைக்கும்....சுயநலம்தான்...!!??
பதிலளிநீக்குபொது நலத்தைச் சுயநலமாகக் காண்பதும் உயர்ந்தது தானே ஐயா...
நீக்குமிக்க நன்றி துளசிதரன் ஐயா.
உன்னை அழித்துவிடுவேன் என்ற தலைப்பை பார்த்ததும் உள்ளே வர சற்று பயமாக இருந்தது. ஒரு வேளை இது என்னை மிரட்ட போட்ட பதிவோ என்று எண்ணிபயந்து போனேன். இருந்தாலும் என் மனைவியை பக்கத்தில் உட்கார வைத்துவிட்டு கவிதையை படித்தேன் அருமையாக இருந்தது இதை படிக்கவா பயந்தாய் என்று என் தலையில் பூரிக்கட்டையால் அடித்து சென்றாள், ஹும்
பதிலளிநீக்குஉன்னை அழித்துவிடுவேன் என்ற தலைப்பை பார்த்ததும் உள்ளே வர சற்று பயமாக இருந்தது....
நீக்குஅந்த பயம் இருக்கட்டும்.
ஒரு வேளை இது என்னை மிரட்ட போட்ட பதிவோ என்று எண்ணிபயந்து போனேன்.....
மிரட்டுவதற்க்கெல்லாம் பதிவு போட மாட்டேன். டைரெக்டா செயல் தான்...
இருந்தாலும் என் மனைவியை பக்கத்தில் உட்கார வைத்துவிட்டு கவிதையை படித்தேன்....
படித்ததால் விட்டுவிடுகிறேன்.
அருமையாக இருந்தது....
இதைமட்டும் சொல்லி இல்லையென்றால்.... விட்டிருக்க மாட்டேன்.
இதை படிக்கவா பயந்தாய் என்று என் தலையில் பூரிக்கட்டையால் அடித்து சென்றாள், ஹும்....
பாவம் மாமிக்கு கைதான் வலித்திருக்கும். என்னால் அவர்களுக்கு தான் கஷ்டம்....(
என்ன உண்மையில் உடம்பு சரியில்லையா அல்லது உங்கள் காதல் கணவர் வேலை விஷயமாக டூர் சென்றதால் அதாவது பிரிவின் காரணமாக அல்லது ஏக்கத்தின் காரணமாக நோய்வாய்பட்டீர்களா?
பதிலளிநீக்குஎன் காதல் கணவர் டூர் போனாலும் என்னையும் அழைத்துக்கொண்டே தான் போவார்...
நீக்குஉடம்பு சரியில்லைன்னா பேசாம ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே நீங்கள் ரெஸ்ட எடுத்தால் நாங்களும் உங்கள் கவிதைகளை படிப்பதில் இருந்து ரெஸ்ட் எடுத்த மாதிரி இருக்குமே.. என்னடா இவங்க எப்படி நிம்மதியாக இருப்பது என்று நினைத்து எழுதிய மாதிரி இருக்கு....ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்
பதிலளிநீக்குஉங்களை அவ்வளவு நிம்மதியாக இருக்க விட மாட்டேங்கோ.
நீக்குவணக்கம் !
பதிலளிநீக்குஎன் அருமைத் தோழியே விரைவில் தங்களின் உடல் குணமடையப்
பிரார்த்திக்கின்றேன் !சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் .இறைவன்
அருளால் எல்லாம் நல்லபடி யே நடக்கும் .
தங்களின் வருகைக்கும் அவசிய அக்கரைக்கும்
நீக்குஎன் மனமார்ந்த நன்றி தோழி.
வணக்கம் தோழி!
பதிலளிநீக்குதேயாது நன்நலம் தேர்ந்துடன் காத்திடுக!
ஓயா தலைதல் ஒறுத்து!
நலனைக் கவனியுங்கள்!
கம்பன் விழாவும் நெருங்குகிறதே!
அருமையான விருத்தம்! வாழ்த்துக்கள்!
வணக்கம் தோழி.
நீக்குகம்பன் விழா சிறப்புடன் நடந்தது.
உடல்நிலை சரியில்லை தான். என்றாலும் நம் விழா இல்லையா? சோர்வாக இருந்தாலும் கலந்து கொண்டேன்.
தங்களின் அன்பான விசாரிப்புக்கும்
மிக்க நன்றி தோழி.
கவிதை தன்னம்பிக்கை தந்தது..
பதிலளிநீக்குவிரைவில் உடல் நலம் பெற எனது பிரார்த்தனைகள்.
மிக்க நன்றி நாகராஜ் ஜி.
நீக்குஉடல் நல சீர்குலைவு ஏற்படும் போது பயப்படாமல் எதிர் கொள்ள வேண்டும் என்று அன்னை சொன்னது போல் (அரவிந்தர் அன்னை)
பதிலளிநீக்குநோயை எதிர்த்து கவிதை பாடி விட்டீர்கள் அருமை.
நீங்கள் சொன்னது சரிதான் அம்மா.
நீக்குகூடவே தன்னம்பிக்கையும் காரணம் தான் அம்மா.
இருந்தாலும் ஓய்வு தேவைப்படுகிறது.
நன்றி அம்மா.
நோயிலும் வந்ததே கவிதை!
பதிலளிநீக்குஎன்னங்கையா செய்வது?
நீக்குஎன் உள்ளத்தின் கருத்தைச்சொல்ல முயன்றேன். அதுவும் கவிதையாகி விடுகிறது.
நன்றி புலவர் ஐயா.
மனிதனின் மனோ வலிமைக்கு எல்லை கிடையாது !
பதிலளிநீக்கு" உண்டு என்றால் அது உண்டு... இல்லையென்றால் அது இல்லை ! "
என்ற வரிகளின்படி கற்பனைகளின் மூலமே ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தது மனம் !
அந்த மனோ வலிமையை மிக அழகான கவிதையாக கொடுத்துள்ளீர்கள். விரும்பி வாசித்தேன் !
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
எனது புதிய பதிவு : தேங்காய்க்குள்ள பாம் !
http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post_15.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி
வணக்கம் சாமானியன் ஐயா.
நீக்கு“கற்பனைகளின் மூலமே ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தது மனம்“ என்று எழுதி இருக்கிறீர்கள்.
ஏதோ என்னை யோசிக்கத் துர்ண்டுகிறது.
தங்களின் பதிவை அவசியம் படிக்கிறேன்.
நன்றி ஐயா.
கருத்து சொல்ல வரவில்லை
பதிலளிநீக்குகற்கண்டு தரும் சுவைமிகு வாழ்த்து
சொல்லவே யாம் வந்தோம் யாதவன் நம்பியாக!
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
புதுவை வேலு
மிக்க நன்றி வேலு ஐயா.
நீக்குஉங்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
என்ன மேடம் உடல் நலம் சரியாகிவிட்டதா? நலமாக பிரார்த்தனைகள்...இந்த பிரார்த்தனைகள் உங்களுக்காக அல்ல எனக்காத்தான் அதாவது நீங்க்ள் குணமாகி வந்தால்தான் பதிவு போட முடியும் பதிவிட்டால்தான் நான் கலாய்க்க முடியும் கலாய்த்தால்தானே நான் பூரிக்கட்டையால் வாங்கும் அடியின் வலி மறையும் ஹும் அதனால்தான் சொல்லுறேன் சீக்கிரம் வாங்க
பதிலளிநீக்குஅடடா..... என் பதிவு நீங்கள் வாங்கும் அடியையும் மறக்கடிக்கச் செய்கிறதா.....? இது எவ்வளவு பெரிய வரம் தெரியுமா எனக்கு...... நன்றி நன்றி.
நீக்குதங்களின் அழைப்பிற்கு மிக்க நன்றி “உண்மைகள்“
உடல் நலம் சற்று தேறி வருகிறது. இன்னும் கொஞ்சம் ஓய்வு தேவை. கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.
நன்றி “உண்மைகள்“
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநான் லேட்டாகத் தாங்க தீபாவளி வாழ்த்து சொல்கிறேன்.
நீக்குநன்றி தமிழரே.
உடல் நலம் பெறவும் தீபாவளியை முன்னிட்டும் தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!
பதிலளிநீக்குஉங்களுக்கும் என் வாழ்த்துக்கள் தோழி.
நீக்குமிக்க நன்றி.