திங்கள், 7 ஜூலை, 2014

வாழாவெட்டி!! (நிமிடக்கதை)


    “நல்லா இருக்கிறீங்களா....?“
    தன்னைக் கண்டும் காணாதது போல் இருந்த அமுதனின் காதில் விழும் அளவிற்குச் சத்தமாகக் கேட்டாள் கமலம்.
    அவன் காதில் விழாதவன் போலவே சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தான்.
   “ஏன்க்கா... இவரு வாழாவெட்டியா அம்மா வீட்டில் இருக்கிறாளே பூரணி. அவ புருஷன் தானே..“ கௌதமி கிசுகிசுப்பாகக் கேட்டாள்.
   “ஆ....மா. அவ புருஷன் தான். ஆனால் அவ வாழா வெட்டி மாதிரியா இருக்கிறா...?“ கமலம் சற்று ஏளனமாகச் சொல்லவும்..
   “ஐயோ... அக்கா. இவ்வளவு சத்தமா பேசாதே. அந்தாள் காதுல விழப்போவுது.“ கமலத்தை அடக்கினாள் கெளதமி.
   “அந்தாள் செவிடுன்னு நினைக்கிறேன். அவ்வளவு சத்தமா கேட்டதுக்கே பதில் சொல்லலை. இதுவா கேக்கப் போவுது. ஆமா... நீ பூரணியவா வாழாவெட்டின்னு சொன்ன? அவ அம்மா வீட்டுக்கு வந்த இந்த அஞ்சாறு மாசத்துல என்னமா மாறிட்டா. கல்யாணம் பண்ணி ஆறு வருஷமா புள்ள இல்லைன்னு பொண்டாட்டிய டாக்டர் கிட்ட கூட்டிக்கினு போவாம, போய் டெஸ்டெல்லாம் செஞ்சி ரிசல்ட் வாங்கி வந்தால் தான் உன் கூட வாழுவேன்னு அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டான். பாவம் அவ அம்மா. விதவை. நாலு வீட்டுல வேலைசெஞ்சி மீதி இருக்கிற ரெண்டு புள்ளைங்கள வளக்கிறா. பூரணி வந்ததும் திரும்பவும் அழைச்சிக்கினு போயி இவன்கிட்ட கெஞ்சி பார்த்தா. இவன் புடி கொடுக்கல. வேற வழியில்லாம தன் வீட்டிலேயே வச்சிக்கினா.“
   “பாவம்க்கா பூரணி. கடைசி வரைக்கும் வாழா வெட்டியா மலடி என்ற பேரோட தாய் வீட்டுல தான் இருக்கனுமா....?“ கவலையாகக் கேட்டாள் கௌதமி.
   “அதுதான் இல்ல. அவளும் அம்மாவீட்டுல எவ்வளவு நாளு தான் பாரமா இருக்கிறதுன்னு இப்போ வேலைக்குப் போறா. அவ வேலைக்குப் போவதால இப்போ அந்த வீட்டுல கஷ்டம் இல்லாம இருக்குது. மொதல்ல விட இப்போ கூட கொஞ்சம் அழகா தெரியிறா. இவனை விவகாரத்துப் பண்ணிட்டு இன்னொருவனைக் கல்யாணம் செஞ்சிக்கோன்னு எல்லோரும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. பூரணி இனிமேல நல்லா தான் இருப்பா. போற போக்க பார்த்தால் இவன் தான் பொண்டாட்டி இல்லாம வாழாவெட்டியா இருப்பான் போலிருக்குது“ என்றாள் கமலம் அவன் காதுபட சத்தமாக.

   அவன் யோசனையுடன் சென்றதைக் கவனித்த இருவரின் மனமும் திருப்தி அடைந்தது.

அருணா செல்வம்

07.07.2014

43 கருத்துகள்:

  1. ஆமாம் அவன் யோசனையுடந்தான் சென்றான் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளும் நோக்கோட ...பாவம் அவன் மனைவி இந்த பெண்களின் பேச்சால் எதிர்காலத்தில் அவன் மீண்டும் வந்து சேர்ந்துவிடுவான் என்ற நம்பிக்கையும் போயிருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவளின் மனத்தைப் புரிந்து கொள்ளாதவனுடன் வாழ்வதை விட அந்தப் பெண் வாழா வெட்டியாகவே வாழலாம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. இப்படி ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தால்.... சிலருக்கு(ம.த)
      முளை வேறுமாதிரியும் சிந்திக்கும் போல.....)))

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  5. நல்ல சிறுகதை. நல்ல ட்ரீட்மென்ட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  6. சேர்த்து வைப்பதற்காக இவர்கள் போட்ட நாடகம் நன்று !அமுதன் மனக் கணக்கு என்னவோ ?
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்களின் மனத்தை ஆண்களால் தான் புரிந்து கொள்ள
      முடியுமாம்..... அதனால் அவனின் மனக்கணக்கை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள் பகவான் ஜி.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  7. கருத்தும் கதையும்
    முடித்த விதமும் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  8. கதை நகர்வும் முடிவும் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  9. வணக்கம்
    கதையின் நகர்வு நன்று நல்ல கருத்துள்ள கதை பகிர்வுக்கு நன்றி
    த.ம8வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  10. அருமை
    சிலருக்கு அதிர்ச்சி வைத்தியம் தேவைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. கை வசம் இன்னும் நிறைய கற்பனைகள் இருக்கிறது.
      எழுத தான் நேரம் கிடைப்பதில்லை அண்ணா.

      தங்களின் வருகைக்கும் கேள்விகளுக்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  12. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கும்மாச்சி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கும்மாச்சி

    வலைச்சர தள இணைப்பு : கும்மாச்சி தொடுக்கும் மலர்ச்சரம்--முல்லை, மல்லி, ஜாதி, ரோஜா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்மாச்சி அண்ணா தொடுத்த மலர்ச்சரத்தில் நானும் ஒரு மலர் என்றதும் ஓடி போய் பார்த்துவிட்டு வந்து விட்டேன்.

      தகவலுக்கு நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  13. பெண்கள் படும் துயரனைத்தும் கண்கள் காவிட விழைந்த நற்
    காவியம் அருமை ! வாழ்த்துக்கள் தோழி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நட்பே.

      நீக்கு
  15. அவன் காதுல போட்டாச்சுல.......அவனும் யோசிக்கிறான்ல...பெண்கள் வம்பு பேசுகின்றார்கள் என்று குற்றமாகச் சொல்லப்பட்டாலும் இது நன்மைதானே செய்கின்றது! அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களாவது புரிஞ்சிக்கிட்டீங்களே.....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  16. அருமையான கதை, முடிவு அருமை. யோசனை எத்தகைய முடிவைத் தருமோ என்று வாசகரை எண்ணத் தூண்டும் கதை. யோசித்து சேர்வான் என்று நான் நினைக்கிறேன், வேறொரு கல்யாணம் செய்வான் என்று மதுரைத் தமிழன் சகோ சொல்கிறார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் மனம்.

      அவரவர் விருப்பப்படி முடிவுக்கு வர வேண்டியது தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கிரேஸ் அவர்களே.

      நீக்கு
  17. நல்ல கருத்துள்ள கதை முடித்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மாதேவி தோழி.

      நீக்கு
  18. இப்படி பேசினாலாவது அவனுக்கு உரைக்கும் என்று நினைத்திருக்கலாம் அந்த பெண்கள்! அருமையான கதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி நினைத்தத் தாங்க எழுதினேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  19. என்னுடைய விமர்சனம் கதையில் வரும் கேரக்டர்கள் பற்றிதான். யாரும் பர்சனலாக எடுத்துக்க வேண்டாம்.

    இந்தக் கதையைப் படிச்சுட்டு கமலமும் கெளதமியும் ஊரில் உள்ளவன் குடும்பப்பிரச்சினையில் தலையிட்டு பெருசா சாதிக்கிறாங்கனு ஒரு சிலர் நினைக்கலாம்! ஆனால்..யாருங்க இவங்க அடுத்தவங்க குடும்பப்பிரச்சினையில் தலையிட? நாலு சுவருக்குள்ளே கணவ்ன மனைவிக்குள் என்ன பிரச்சினைனு இவங்களுக்கு எப்படி தெரியும்???

    அவன் பாட்டுக்குக்கு பகவானை வணங்கிட்டுப் போயி தொலைந்து இருப்பான். பூரணி, சனியன் தொலைஞ்சான் நல்லதாப்போச்சுனு அவ பாட்டுக்கு பெற்றோர்களுக்கு பண உதவியுடன் அவர்களை பொறுப்பாக கவனித்து நிம்மதியாக இருந்து இருப்பாள்.

    இந்த மூதேவிகள் ரெண்டும் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க வேண்டியதுதானே? இதுக வீட்டிலே ஆயிரம் பிரச்சினை இருக்கும். அதையெல்லாம் விட்டுப்புட்டு ஊரிலே உள்ளவன் தாம்பத்யப் பிரச்சினைக்கெல்லாம் பஞ்சாயத்து வச்சுக்கிட்டு.. இப்படித்தான் நம்ம மக்கள் காலங்காலமா வாழ்றாங்க!

    இதுக இப்படி சாவியைப் போட்டு என்னத்தை சாதிச்சிருங்கள்ணு பார்க்கலாம்.

    * ஒண்ணு, மனம் திருந்தி அவளை அவன் அழச்சிட்டுப் போனாலும் உபத்திரவம்தான். நாலு நாள்ல வேதாளம் மறுபடியும் மரத்தில் ஏறிடும்..

    * ரெண்டு.. அவ நிம்மதியா இருக்கா, சந்தோசமாக வாழட்டும்னு அவன் அவளை டைவோர்ஸ் பண்ணிவிட்டால், அவன் ஜெண்டில்மேன்னு தான் ஆகும்.

    No matter how you think, this kind of "nosy morons" (Gauthami and Kamala) can only make things worse. People those who involved in the relationship should talk and find a right way when such mistakes happen- marrying a wrong guy. They should go for divorce after this separation if Poorani is really happy after leaving that guy!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வருண் ஐயா.

      இது நிமிடக்கதை. இப்படி தான் சுறுக்கிச் சொல்ல வேண்டி உள்ளது.
      தவிர. ஒரு பெண்ணை அலட்சியப்படுத்தினால் அவள் எப்படி அவனை அசிங்கப் படுத்தவாள் என்பதையும் சேர்த்துத் தான் எழுதினேன்.
      தொடக்கத்திலேயே அவள் இவள் கேள்விக்கு “நல்லாயிருக்கேன்“ என்று சொல்லிவிட்டு நகர்ந்திருந்தால் இந்தப் பிரட்சனையே வந்திருக்காது.

      வருண் ஐயா..... அவள் யோசனையுடன் சென்றான் என்று எழுதி முடித்தது.... அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் முடித்துக்கொள்ள தான்.
      இந்த சின்ன கதையையும் ஆராய்ந்து பார்த்து அருமையானப் பின்னோட்டம் இட்டதற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  20. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
    மிக்க நன்றி ஐயா.

    கும்மாச்சி அண்ணாவிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. " இப்போ வேலைக்குப் போறா... "

    அவன் யோசிக்க தொடங்கியது, அவளின் வருமானத்துக்காக இருந்து... அவள் மீன்டும் நரகத்தில் சிக்கினால்... ?!

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு