வெள்ளி, 18 ஜூலை, 2014

இதயத்தைப் பிச்சை இடு!



உறக்கம் கலைய
உணர்வு வந்தது.
உடம்பு உள்ளது
உயிரும் உள்ளது.

மூச்சி என்பது
எங்கே தொலைந்தது?
இதயம் என்பதும்
எங்கே போனது?

ஓ... அதை நீ
என்றோ ஒருநாள்
எடுத்துச் சென்றாயே...
இன்றும் என்னிடம்
தர வில்லையே...!!

தெரிந்தே அதனைக்
கொண்டு சென்றாயோ...
உனக்கே தெரியாமல்
உடன்கொண்டு சென்றாயோ...?

பத்திரம் போல்
பத்திரமாக வைத்தாயா?
பார்சல் பேப்பெரென்று
தூக்கி எறிந்தாயா?

பார்க்க நினைத்துப்
பார்த்து மகிழ்வாயா?
பார்க்காதிருந்து
தவிக்க வைப்பாயா?

நினைத்த போது
நெகிழ்ந்து மகிழ்வாயா?
நினைக்காதிருந்து
அதனை மறந்தாயா?

எனக்குத் தெரியாமல்
என் இதயத்தைத்
திருடி விட்டு
என்னையே முடம்
என்பது சரியா?

இதயம் இழந்த
முடம் தான் நான்.
என் இதயத்தை
உன்னிடத்தில்
பிச்சைக் கேட்கிறேன்.

கொடுத்தால் தான்
உயிர் வாழ்வேன்.
கொடுத்து விடு
உன் இதயத்தை!!



அருணா செல்வம்.

21 கருத்துகள்:

  1. மூச்சி அல்லது மூச்சு?

    நல்லவேளை, கொடுத்து விடு என் இதயத்தைத் திருப்பி என்று கேட்காமல் இருந்தாளே நாயகி! (ஒருவேளை நாயகனோ!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூச்சு தான்.

      தவறாக எழுதிவிட்டேன்.

      நல்லவேளை, கொடுத்து விடு என் இதயத்தைத் திருப்பி என்று கேட்காமல் இருந்தாளே நாயகி! (ஒருவேளை நாயகனோ!)

      கேட்டிருந்தால்.... பாவம் பிழைச்சி போகட்டும் என்று கொடுத்திட வேண்டியது தான்....)))

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  2. சிறந்த உணர்வுக் கவிதை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  3. இவ்வளவு ஏமாளியாகவா இருப்பது...? ஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னங்க செய்யிறது.....
      ஏமாறும் போது தானே காதல் வந்துவிடுகிறது.....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  4. காதலை வித்தியாசமாக கேட்பது போல் ம் ...ம் .. நன்று நன்று வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இனியா அம்மா.

      நீக்கு
  5. எனக்குத் தெரியாமல்
    என் இதயத்தைத்
    திருடி விட்டு
    என்னையே முடம்
    என்பது சரியா?

    அருமையான கவிதை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஹிஷாலீ சகோ.

      நீக்கு
  6. திருடு போன இதயம் திரும்பி கிடைத்திடுமா என்ன? நல்லதொரு ஏக்க கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருடு போன அதே இதயம் வேண்டாமாம்......

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  7. சகோதரி இப்படி பிச்சு உதறுகின்றீர்களே! கவிதைல...காதலை...அருமையான வரிகள் அதுவும் கடைசி வரிகள் அசத்தல்! மிகவும் மிகவும் ரசித்தோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. நன்றாக ரசித்திருக்கிறீர்கள்.....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  9. "இட்டார் பெரியோர் இடாதோர் இழி குலத்தோர்"
    இதயத்தை பிச்சையிட்டவர்:பெரியோர்
    இதயத்தை பிச்சையிடாதவர்: இழிகுலத்தோர் அப்படியா?
    காதலில் மாற்றுத் திறனாளி ஆவதற்கும் வாய்ப்பு
    உண்டா?
    இதயத்தை பிச்சையிடுவார் என நம்புகிறேன்!

    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதயம் இருக்கிறவர் பிச்சை இடுவார்....

      இதயம் இல்லாதவர் யாரிடமாவது பிச்சைப் பெறுவார்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி யாதவன் நம்பி ஐயா.

      நீக்கு
  10. அப்படியா....? இதோ வருகிறேன்.
    நன்றி தோழி.

    பதிலளிநீக்கு