வியாழன், 17 ஜூலை, 2014

வாட்டுதே உன் நினைப்பு!!


 கொல்லைப் புறத்து மரங்களிலே
      கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்க,
முல்லைக் கொடியில் மல்லிகைப்பூ
      முத்துப் பல்லை ஒத்திருக்க,
கள்ளைக் குடித்த வண்டினங்கள்
      காற்றில் இராகம் இசைத்திருக்க
சொல்லைத் தேனில் கலந்தவளே
      சொக்கிப் போனேன் இவைகண்டு!!

காற்றில் வந்த நறுமணத்தில்
      காதல் கலந்து வந்ததடி!
சேற்றில் பூத்த தாமரைப்பூ
      சிவந்த இதழைக் காட்டுதடி!
ஏற்றம் இறைக்கும் ஓசையிலே
      இதயம் ஏக்கம் கொள்ளுதடி!
சீற்றம் ஏன்டீ என்மேலே
      சின்னக் கிளியே செங்கனியே!!

வீட்டில் பாயில் படுத்தாலும்
      விடியக் கண்கள் மூடவில்லை!
காட்டிக் கொடுக்கும் கண்ணிரண்டும்
      காதல் தவிப்பைத் தாயிடத்தில்!
கூட்டிக் கேட்டால் என்சொல்வேன்
      கொடுத்த ஏக்கத் தவிப்பைநான்!
வாட்டி வதைக்கும் வடிவழகே
      வாடி எந்தன் பக்கத்தில்!!

அருணா செல்வம்

22 கருத்துகள்:

  1. வணக்கம்
    அழகிய கவியில் கற்பனை வளம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  3. இதயம் ஏக்கம் கொள்ளும் வரிகள் அருமை சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  4. காதல் ஏக்கத்தை வெளிப்படுத்து நல்ல கவிதை. வாழ்த்துகள் அருணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  5. இளமை கவிதை எழுதிட கண்டேன்-என்
    முதுமை முகத்தில் முறுவல் கொண்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதுமை முகத்தில் முறுவல் வந்தால்
      பொதுமை தமிழின் புகழ்!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  6. அருமை!.. அழகு!...

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  7. நாட்டுபுற கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  8. கன்னித் தமிழின் சொல்லெடுத்து
    கற்பனை வானில் சிறகடித்து
    காதல் காவியம் படைக்கின்றாய்
    கவிதைப் பெண்ணே நீவாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எண்ணம் நிறைந்த கற்பனைகள்
      எழுத்தில் கொஞ்சம் துர்விவிட்டேன்!
      வண்ணம் வடிவம் பெற்றதனால் - உம்
      வாழ்த்தைப் பெற்றேன் தமிழாலே!!

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நம்பி ஐயா.

      நீக்கு
  9. இளமைக்கவிதை இயம்பியவிதம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ராஜ் ஐயா.

      நீக்கு
  10. அழகான காதல் கவிதை தவிப்பினைத் தவிக்க தவிக்கச் சொல்லிடும் கவிதை! அருமை சதோதரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  11. புலமை புதுப் புனலாய்
    ஓடி வர கண்டேன்!
    தீர்ந்தது கவிப் பஞ்சம்.
    புதுவை வேலு (குழல் இன்னிசை) kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி யாதவன் நம்பி ஐயா.

      நீக்கு