ஒத்தையடிப்
பாதையிலே
ஒத்தையிலே
நடக்கையிலே
அத்தைமகன்
முன்வந்தான்
ஆசையிலே
வழிமறித்தே
முத்தமொன்று
கொடுத்துவிட்டு
முன்னேறி
போவென்றான்!
“கத்திஊரைக்
கூப்பிடுவேன்“
கனப்பொழுதில்
சொன்னாலும்
ஏக்கத்தில்
அவன்பார்வை
ஏதெதுவோ
செய்ததனால்
தாக்கத்தில்
வழிவிட்டும்,
தயங்கியேதான்
நின்றுவிட்டாள்!
நோக்கத்தைப்
புரிந்துகொண்டும்
நூதனமாய்த்
தனைப்பார்க்க
“ஏக்கமொன்றும்
எனக்கில்லை“
என்றுசொல்லித்
தள்ளிவந்தாள்!
அஞ்சிகொண்டு
நில்லாமல்
அலட்சியமாய்
வந்தாலும்
மஞ்சத்தில்
அனல்பறக்க
மங்கையவள்
உறங்காமல்
கொஞ்சுமொழி
கண்பேச
குறும்பாகச்
சிரித்தவனை
நெஞ்சுநிறை
சுமர்ந்துகொண்டு
நெடுநேரம்
விழித்திருந்தாள்!
தொட்டணைக்க
உரிமையுள்ள
தோதான
அத்தைமகன்!
சட்டென்றே
ஒருமுத்தம்
தந்துவிட்டு
வந்திருந்தால்
கட்டான
காளையவன்
கனவினிலே
வந்திருப்பான்!
பட்டென்றே
ஏன்வந்தோம்?
பண்பின்றி
ஏக்கமுற்றாள்!
அருணா செல்வம்.
22.04.2013
அருமையான கவிதை தோழி! ரொம்பவே ரசித்துப் படித்தேன். நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅத்தைமகன் கேட்டது முத்தமாகதானிருக்க
சொத்தையே கேட்டதுன்னு சுந்தரி ஏன்மறுத்தாள்...:)
த.ம.1
வணக்கம் தோழி.
நீக்குநல்ல கேள்வி கேட்டீர்கள்.
உடன் பதில் இதோ...
முத்தம் ஒன்றைக் கேட்டவுடன்
முந்தி உடனே கொடுத்துவிட்டால்
சொத்தை விடவும் குறைச்சளென்றே
சும்மா அதனை நினைத்திடுவான்!
அத்தை மகனாய் இருந்தாலும்
அவனாய் வந்து தரவேண்டும்!
சித்தம் தெளிந்த சுந்தரியோ
சிறப்பை அறிந்தே தான்மறுத்தாள்!!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.
ஆகா.. அருமை. உங்களிடமா...
நீக்குபாட்டாலே அடிக்கும் பாவையெல்லோ உம்மிடம்
ஏடெடுத்தும் பார்க்காத என்வார்த்தை வென்றிடுமோ...:)
தோழி ச்சும்மா பாட்டுக்குப் பாட்டெடுத்து விட்டுப்பார்த்தேன். தவறாக கருதவேண்டாம். உங்கள் ரசிகைநான்.
சந்தனக்கட்டை நீங்கள்...உரசிப்பார்த்தால்தான் வாசம் வெளியே இன்னும்வரும்...:)
ரசிக்க வைக்கும் (குறும்புகள்) வரிகள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி...
வணக்கம் தனபாலன் அண்ணா.
நீக்குஇந்தப் பாட்டில் எங்கே குறும்பு இருக்கிறது?
அத்தை மகன் கேட்டதைக் கொடுத்திருந்தால்
நன்றாக துாங்கி இருக்கலாம்...
என்ற ஏக்கத்தில் இருக்கிறாள்.... பாவம் அவள்.
அவளுக்காக நான் வருந்தி எழுதிய பாடல் இது.
இதைப் போய் குறும்பு வரிகள் என்கிறீர்களே....
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.
காட்சிகளை கண் முன்பு கொண்டு வந்தது தோழி தங்கள் வரிகள் ஏக்கம்...
பதிலளிநீக்குகாசு கொடுக்காமல் கண்முன்பு
நீக்குகாட்சிகளைக் கண்டு கொண்டீர்களா...?
நல்ல ஆளுப்பா நீங்கள்!!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சசிகலா.
அத்தை மகனுக்கு
பதிலளிநீக்குஅப்போதே கொடுத்திருந்தால்
தப்பில்லையே
அதை ஏங்க கேக்குறீங்க...?
நீக்கு“பெண் புத்தி பின் புத்தி“ என்பதற்கு
இந்த மாதிரி இடங்கள் தான் சான்று.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.
அம்மான் வீட்டுப் பெண்ணானாலும் சும்மா சும்மா கிடைக்குமா?
பதிலளிநீக்குஅரிசி பருப்பு சீரு செனத்தி அள்ளிக்கொடுக்க வேண்டாமா? என்று கவியரசரே கேட்கிறாரே... அதனால்தான் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு வந்துவிட்டாள் போலும். இப்போது புலம்பித் தவிக்கிறாள் பாவம்.
பெண்ணவள் தவிப்பை அழகிய கவிதையாக்கி ரசிக்கவைத்தமைக்குப் பாராட்டுகள் அருணாசெல்வம்.
பெண் மனத்தை ஒரு பெண்ணால் தான்
நீக்குபுரிந்து கொள்ள முடியும் என்பதை
அழகாக பின்னோட்டத்தில் புரிய வைத்தமைக்கு
மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.
பாராட்டிற்கும் மிக்க நன்றி.
கேட்டவுடனே கொடுத்திருந்தால் அதில் சுவாரசியம் குறைந்து விடுமே.....
பதிலளிநீக்குநல்ல கவிதை....
ஆமாம்... நீங்கள் சொல்வதும் உண்மை தான்.
நீக்குபாட்டு பட்டென்று முடிந்துவிடும்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.
ரசித்தேன் ரசித்தேன் கனவிலும் கொடுக்கவில்லை பாவம்
பதிலளிநீக்குபாவம்... அவளுக்குத் துாக்கமே வரவில்லை.
நீக்குபின் எப்படி கனவு வரும்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி புவிழி.
கேட்டவுடன் கொடுத்திருந்தால்
பதிலளிநீக்குகனவிலே வந்திருப்பான்..........ஏக்கம் சொட்டும் கவிதை அருமை சகோதரி.
பாவம்... பெண்கள் இந்த விசயத்தில் பேதைகள் தான்.
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.
மனதை வருடும் வரிகள், முத்தம் கொடுக்காமல் விட்டதுதான் அவளுக்கும், இக்கவிதைக்கும் மதிப்பு கூடுகிறதோ என்னவோ?
பதிலளிநீக்குமுத்தம் கொடுத்தாலும் இன்பம் தான், கொடுக்காமல் விட்டுசென்ற வெட்கமும் இன்பம்தான்
உங்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்
நீக்குஎன்.எஸ்.கே அவர்களே.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.
பெண்கள் ஆண்களுக்கு முத்தம் கொடுத்தால்...ஓகே!
பதிலளிநீக்குஆண் கொடுத்தால். கேளுங்கள் என் கதையை...
________________
சட்டென்றே ஒரு முத்தம் கொடுத்தேன்!
பட்டென்று ஒரு அறை கொடுத்தாள்!
ஒரு கன்னத்தில் அறை கொடுத்ததால்
ஏசுவின் நினைவாக மறு கன்னைத்திலும்
அறை வாங்கினேன் செய் கூலியாக!
அடிக்க அடிக்க அம்மியும் நகரும்
அறைய அறைய அன்பும் வளரும்
வளரும் அன்பு அறையில் முடியும்..!
ஓஹோ....
நீக்குஅடிவாங்கி அடிவாங்கி
வளர்ந்த அன்பு தானா... உங்கள் காதல்...!!
நம்பள்கி... இப்படி அடிவாங்கி
வளர்த்த காதலை என் மின்வலையில் வந்து
பகிரங்கமாகப் பகிர்ந்த உங்களின் தைரியத்தைப் பாராட்டுகிறேன்.
(எனக்குத் தெரியும். அக்காவின் கை பூபோன்றது என்று.
பாவம் அவர்களுக்குத் தான் வலித்திருக்கும்)
நன்றி நம்பள்கி.
உங்களுக்கென்ன அருணா! அடி வாங்குன எனக்கு இல்ல தெரியும், என் காதலியின் கை பூவா இல்லை...என்று!
நீக்குஅதே கவிதை மறுபடியும் இங்கே! கடைசி இரண்டு வரிகளை மற்றொரு முறை படியுங்களேன்..டீச்சர்..!
சட்டென்றே ஒரு முத்தம் கொடுத்தேன்!
பட்டென்று ஒரு அறை கொடுத்தாள்!
ஒரு கன்னத்தில் அறை கொடுத்ததால்
ஏசுவின் நினைவாக மறு கன்னைத்திலும்
அறை வாங்கினேன் செய் கூலியாக!
அடிக்க அடிக்க அம்மியும் நகரும்
அறைய அறைய அன்பும் வளரும்
வளரும் அன்பு அறையில் முடியும்..!
திரும்பவும் அதே பாடல்...!!
நீக்குநானாக இருந்திருந்தால் இப்படி எழுதி இருப்பேன்.
அறைய அறைய அன்பும் வளரும்
வளரும் அன்பு அறையில் தொடரும்...!!
மீதி....
தொடரும் அன்பால் வாழ்வு மணக்கும்
மணக்கும் வாழ்வால் வளரும் காதல்!
நன்றி நம்பள்கி.
(தொடருங்கள்... உங்கள் மனைவி மீது உள்ள காதலை.
கொஞ்சம் குறைந்தாலும் என்னிடம் சொல்லுங்கள்.
நான் அவர்களிடம் சொல்லி திரும்ப திரும்ப அறையச் சொல்கிறேன்.)
அத்தை மகனிடம் முத்தம் கேட்பது
பதிலளிநீக்குஅந்தக் காலம் - முத்தம் கொடுத்து
ஆண் மகனை அத்தை மகனாக்கிக்
கொள்வது இந்தக் காலம்...!
எந்தக் காலத்திலும் இது தான் நடைமுறை நம்பள்கி.
நீக்குவருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.
இப்ப சரியா?
நீக்கு________________________
சொந்த அத்தை மகனிடம் முத்தம்
கேட்பது அந்தக் காலம் - முத்தம்
கொடுத்து 'அந்நிய' ஆண் மகனை
அத்தை மகனாக்குவது இந்தக் காலம்...!