கல்வி !!
(குறள் வெண்பா)
1.
வானுயரம் நாமுயர
வேண்டுமென்றால் கல்வியே
தானுயர வைக்கும்
தழைத்து!
2.
கல்லாதார் என்பாரே
காசுபணம் கொண்டிருந்தும்
இல்லாதார் என்றே
இயம்பு.
3.
கடன்பட்டுக்
கல்வியைக் கற்றாலும் என்றும்
உடன்தொட்டே ஓங்கும்
உயர்வு!
4.
பரந்து விரிந்த
உலகில் படிப்பே
பறக்கவைக்கும்
பண்பின் சிறகு!
5.
குற்றமற்ற
கல்விக்குக் கோடி இணையாமோ?
மற்றவை போகும்
மடிந்து!
6.
கூர்கொண்ட
கல்விதந்தால் நேர்கொண்ட வாழ்வமைந்து
பேர்சொல்லும் பிள்ளை
பிறகு!
7.
காசுபணம்
பெற்றிருந்தும் போற்றாது! கற்றவரை
பேசுலகம் போற்றும்
புரிந்து.
8.
கல்லாய்ச்
சிறுமுள்ளாய்ப் புல்லாய் இருந்திடலாம்
கல்லாமல் வாழ்தலே
தாழ்வு!
9.
கல்வியைக் கற்ற
கவிஞனின் சொற்களே
நல்வினையைக் காட்டும்
நயந்து!
10.
எத்திசை போனாலும்
ஏற்றமுடன் பார்த்துயர்த்தும்
சக்தியினைக் கல்வி தரும்!
அருணா செல்வம்.
அத்தனையும் அருமை அருணா! முத்தனைய பத்தும் முத்தமிழின் சொத்தே!
பதிலளிநீக்குகல்வியின் சிறப்பை அழகாகச் சொல்லி விட்டீர்கள்.நன்று
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி குட்டன் ஐயா.
அனைத்தும் அழகு....
பதிலளிநீக்குதொடருங்கள்..
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி கவிதை வீதி சௌந்தர்.
எல்லாக் குறட்பாக்களும் கல்வியின் சிறப்பை அழகாகக் கூறுகின்றன. பாராட்டுக்கள்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி மூங்கில் காற்று.
ஆகா... கல்வியின் சிறப்பு... பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி...
விரும்பிப் படித்தேன் பல முறை...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தனபாலன் அண்ணா.
அத்தனையும் அருமையான குறள் வெண்பாக்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தோழி!
கல்வி குறித்து எழுதிய குறள் வெண்பாக்கள் அருமை தோழி !!!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
பதிலளிநீக்குவணக்கம்!
கல்வியைக் எண்ணிக் கனிந்த கவிதையில்
சொல்வியந்து மின்னும் சுடா்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி கவிஞர்.
கல்வியே கண்ணென மின்ன
பதிலளிநீக்குமின்னும் பத்துக் குறள் வெண்பாவால்
பாட்டிலே காட்டினீர் நல்வழி!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஜீவலிங்கம் ஐயா.
பத்தாதோ பத்தென்று பத்தொன்றும் சேர்த்தளித்தீர்
பதிலளிநீக்குவித்தாகும் கற்றல் வியந்து.
அன்பான பாராட்டுகள் அருணாசெல்வம்.
வியந்தளித்த நற்கவியில் வித்தை அறியேன்
நீக்குநயந்தளித்தேன் நன்றி நவின்று.
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.
கல்வியின் சிறப்பை மிக அழகாக குறள் வெண்பாவில் வடித்துள்ளீர்கள், வாழ்த்துகள் அருணா.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.
கல்விக்கு மற்றும் ஒரு சிறப்பு தொடருங்கள் தோழி அருமை
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி பூவிழி.
கல்வியின் பெருமை அருமை !
பதிலளிநீக்குதொடர வாழ்த்துகள்...
கல்வியின் பெருமை அருமை !
பதிலளிநீக்குதொடர வாழ்த்துகள்...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி நிஜாம் ஐயா.
பகிர்ந்தளித்த குறள் வெண்பாவில்..
பதிலளிநீக்குமுத்துக்குளித்தேன் சகோதரி...
மிக அருமை..
வாழ்த்துக்கள்..
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி மகி அண்ணா.