செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

பெண்ணின் ஏக்கம்!! (கவிதை)




கட்டி கரும்பே என்றாயே
    கடித்தே கன்னம் சிவந்ததுவே!
கொட்டிக் கிழங்கே என்றாயே
    கொடுத்த இதழை விட்டாயா?
எட்டிப் போக நினைத்தாலும்
    எட்டிப் பிடித்து விட்டாயே!
தட்டிப் போக எண்ணவில்லை
    தவியாய் தவித்தேன் உன்னிடத்தில்!

ஆசை வார்த்தை பேசியென்னை
    அணைத்த உடம்பு துவண்டுவிட
மீசை முள்ளாய்க் குத்திவிட
    முகமும் எல்லாம் சிவந்ததுவே!
ஓசை எழுந்த கால்கொலுசை
    உதறித் தள்ளி விட்டாயே!
காசைப் போட்டு வாங்கினேனே
    கடனை உடனே தந்துவிடு!

தீயாய் உடம்பு கொதித்தாலும்
    திட்டம் போட்டே நெருங்கிடுவாய்!
நோயால் மேனி வலித்தாலும்
    நோக்கம் தீர அணைத்திடுவாய்!
சேயாய் இன்றும் இருக்கின்றேன்
    செத்த நேரம் ஓய்வெடுக்க
தாயின் வீடு போகின்றேன்!
    தனிமை எனக்கு வேண்டுமடா!!

அருணா செல்வம்
இப்பொழுது கவிமனத்தில் “போகப் போகத் தெரியும்“ –
தொடர் பாகம் -22 தட்டுங்கள். 

33 கருத்துகள்:

  1. பினிஷிங் டச் அற்புதம்!

    உணர்வுகளின் வெளிப்பாடு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களனி் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  2. கவனித்தீர்களா?. உங்கள் வலையின் followers எண்ணிக்கை 50 தொட்டுவிட்டது :)

    இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னப்பிறகு தான் கவனித்தேன்.துவக்கத்தில் இதற்காகவே வலையை அடிக்கடித் திறந்து பார்ப்பேன். யாரும் அவ்வளவாக வர மாட்டார்கள். ஆனால் திடிரென்று பத்து பதினைந்துபேர் சேர்ந்தது தான் எப்படி என்று தெரியவில்லை.

      அவர்கள் அனைவருக்கும் நேற்றைய பதிவில் நன்றி சொல்ல மறந்துவிட்டேன். வேலைக்குக் கிளம்பும் நேரம்...!!!

      உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  3. இளமைக் காலத்தில் இது தவிர்க்க முடியாத ஒன்று.
    இந்த ஓயவும் தேவை தான் அருமைக் கவிதை.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.(with smiling face)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவைக்கவி அவர்கனுக்கு
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு

  4. வணக்கம்!

    நரம்புக்குள் சூடேற்றும் நற்கவிதை! நெஞ்ச
    வரம்புக்குள் ஆடும் வளா்ந்து

    கவிஞா் கி. பாரதிதாசன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் அவர்களுக்கு
      தங்களின் வருகைக்கும் அழகிய குறள் வெண்பாவால்
      வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. நன்றி கோவி சார்.

      (ஆனால் கடைசிவரை உங்கள் பதிவுகளை
      நாங்கள் படிக்கவே கூடாது என்று நினைத்திருக்கிறீர்களா...?)

      நீக்கு
  6. அருமையான கவிதை... வாழ்த்துக்கள்... தொடருங்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தனபாலன் ஐயா

      தங்களின் தொடர் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

      (படத்தில் ரமணி ஐயாவுடன் கலக்குறீங்க... வலை படத்தில் உள்ளதைவிட இந்த படத்தில் இளம் கிராமத்து ஹீரோ ஸ்டெயிலில் சூப்பராக இருக்கிறீர்கள் ஐயா. அண்ணியைச் சுற்றிப் போட சொல்லுங்கள்.)

      நீக்கு
  7. அழகான கற்பனை அழகான வரிகள்..

    பதிலளிநீக்கு
  8. பெண்ணின் மன நிலையை சொல்லிச் சென்ற விதம்
    மிக மிக அருமை.குறிப்பாக கவிதையின் இறுதி வரிகள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமணி ஐயா அவர்களுக்கு
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      (உங்களை முதன்முதலில் புகைப்படத்தில் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. மாமியையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கலாம்.)

      நீக்கு
  9. ஏன் பாஸ் அவ்வளவு ஆசைக்காரறா நீங்க !அம்மா வீட்டுக்கு போக வைச்சுடீங்களே

    பதிலளிநீக்கு
  10. பெண்ணின் எண்ணத்தைப் பெண்ணாய் பேசியிருக்கிறீர்கள். இது ஏக்கமல்ல, வேதனை! தன் மனமறிந்து இணையும் கணவனையே மனைவி விரும்புவாள். அதை அழகாய் உணர்த்தும் வரிகள். பாராட்டுகள் அருணா செல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதமஞ்சரி அக்கா...
      ஒரு பெண்ணின் மனத்தை நீங்களும் அழகாக உணர்த்தி எழுதியதற்கும் வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி அக்கா.

      நீக்கு
  11. மிக அற்புதம்... ஒரு பெண்ணின் பார்வையில் தனக்கான தவிப்பை வெளிப்படுத்துவதோடு, அதே நேரம் தன்னையேச்சுற்றி வரும் தனது கணவனின் அன்புத்தொல்லைகளையும் செல்லமாய் ரசித்து கடிந்து கொள்வது போன்ற கவிதை நடை.... அருமையான கரு... அருமையான எழுத்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாய்ரோஸ் அவர்களுக்கு...

      உங்களின் அழகான கருத்துரையுடன் சேர்ந்த வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  12. வித்தியாசமான கருத்துள்ள கவிதை! அனைத்து ஆண்களும் படிக்க வேண்டியது! பெண்கள் என்றால் இயந்திரங்கள் அல்ல என்ற உணர்வு எமக்குள் வர வேண்டும்! திருமணமான ஒரு பெண் தாய்வீடு போக வேண்டும் என விரும்புவதற்கு இப்படியும் காரணம் இருக்கும் என்று இப்போதுதான் புரிகிறது!

    வாழ்த்துக்கள் சகோ! அருமையான ஆக்கம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மணி ஐயா.
      உங்களின் புரிதலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  13. மனதைப் புரிந்துகொண்ட கவிதை அருணா...!

    பதிலளிநீக்கு
  14. சிறந்த படைப்பு ! பெண்களின் மன நிலை
    உடல் நிலை என்னவென்று கூட எண்ணிப் பாராமல் தன்
    தாகத்தைத் தீர்க்க எண்ணும் ஆண்கள் அறிய வேண்டிய
    உண்மை இது .மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு