செவ்வாய், 13 ஜூன், 2023

நெடில் அகவல் ஏந்திசை வண்ணம்

 

 

பாடி யாடி ஓய்ந்தும் மகிழ்வேனே!
.
தான தான தாந்த தான தான தாந்த
தான தான தாந்த தனதானா!    (ஒரு கலைக்கு)
.
தேவி வாயி லூர்ந்து தேவ கீதஞ் சேர்ந்த
    தேனி லூறுந் தீஞ்சு வையின்பாகோ!
  தேகம் வாட நேர்ந்த தீமை யான வீம்பு
    தேயும் போதும் நீந்தும் மதிபோலோ!
 
ஆவி யோடு சேர்ந்த ஆசை மோக மேந்தி
    ஆடி யாடி நீந்தும் மனமேனோ?
  ஆவ லாக லேங்கி ஆகம் நாடி ஓய்ந்த
    ஆய மேது தேர்ந்து மறிவேனோ!
 
பாவி யாக வீழ்ந்தும் வேதை யாக வாழ்ந்தும்
    பாசந் தேடி வேண்டி யழுதாலே
  பாலை மாறும் தேர்ந்த பாலுந் தேனும் மீந்தும்
    பால மாகும் பாங்கை யருள்வாயே!
 
பாவி லோதும் பாங்கு வாழும் போது சேர்ந்தும்
    பாச மோடு நீண்டு மருள்வாயே !
  பாதை மாலை யேந்தும் பூவின் வாசந் தீண்டும்

    பாடி யாடி ஓய்ந்தும் மகிழ்வேனே!
.
பாவலர் அருணா செல்வம்
13.06.2023
 
ஆகம் – உடல்,
ஆயம் - இன்பம்
வேதை - துன்பம் 

2 கருத்துகள்:

  1. கவிதை படித்து மகிழ்ந்தேன்.
    அகவலா, அவகலா?[தலைப்பில் ‘அவகல்’ என்றுள்ளது].

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா. தலைப்பு அகவல் தான். நான் சரியாக கவனிக்கவில்லை.
    தவற்றைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு