தனன தத்தன தனதானா (ஒரு கலைக்கு)
விதி கொடுத்திடும்
அடி!
.
விதிகொ
டுத்திடு மடிவ லிக்கிற
வினைந டத்திடு மியல்தானே!
விலைய ளிக்கிற செயல்மு டிக்கிற
விசைய முக்கிட வருவாயே!
நிதிஎ தற்கென உயர்ம னத்தினை
நிறைப டுத்தியு மருள்வாயே!
நினைவ தைக்கிற பசிய டக்கிய
நிலைய ளித்திடு பெருமானே !
சதிய டிக்கிற வினைய கற்றிடு
சபைய மர்த்திட உயர்வேனே!
சவலை யுற்றது கவலை பட்டது
சரவ ணப்புக ழிகழ்வாலே!
மதிய ளிக்கிற புதிய கற்பனை
மனத ளிக்கிற நிழல்தானே!
மனம யக்கிய துயர்வி ளக்கிய
மனைய றத்தினை உணர்வேனோ!
.
பாவலர் அருணா செல்வம்
16.06.2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக