.
நம்புகின்ற வழியேது ?
.
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தனதான (ஒரு கலைக்கு)
.
அன்பு மென்ப தின்பந் தந்த
அங்க மென்று முயர்வாகும்!
அன்று மின்றுங் கொஞ்சும் மென்கை
அந்தம் மிஞ்சு மமிர்தாகும்!
இன்ப மொன்றை என்று முந்த
எங்கு முன்ற னுருவாகும்!
இன்றி யெங்கும் துன்ப மொன்ற
எந்தை எங்கென் றுனைநாடும் !
நன்றை யன்றி வஞ்ச நெஞ்சு
நண்ப னன்பை அறியாது !
நம்ப வஞ்சும் நெஞ்சை விஞ்சி
நம்பு கின்ற வழியேது ?
துன்ப மென்று கொண்ட தென்றும்
தொங்கு மிந்த வுயிராகும்!
சொந்த மென்ற இந்த பந்தம்
சுந்தர் கந்த னுருவாகும் !
.
பாவலர் அருணா செல்வம்
03.06.2023
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தனதான (ஒரு கலைக்கு)
.
அன்பு மென்ப தின்பந் தந்த
அங்க மென்று முயர்வாகும்!
அன்று மின்றுங் கொஞ்சும் மென்கை
அந்தம் மிஞ்சு மமிர்தாகும்!
இன்ப மொன்றை என்று முந்த
எங்கு முன்ற னுருவாகும்!
இன்றி யெங்கும் துன்ப மொன்ற
எந்தை எங்கென் றுனைநாடும் !
நன்றை யன்றி வஞ்ச நெஞ்சு
நண்ப னன்பை அறியாது !
நம்ப வஞ்சும் நெஞ்சை விஞ்சி
நம்பு கின்ற வழியேது ?
துன்ப மென்று கொண்ட தென்றும்
தொங்கு மிந்த வுயிராகும்!
சொந்த மென்ற இந்த பந்தம்
சுந்தர் கந்த னுருவாகும் !
.
பாவலர் அருணா செல்வம்
03.06.2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக