திங்கள், 26 அக்டோபர், 2015

சித்திரச் சிரிப்பு !



சித்திரம்  போலவள்  சிரிக்க – கண்
                     பறிக்க – மனம்
                     அரிக்க – உயர்
சிந்தையிலே அதைத் தரிக்க – நல்ல
சிறப்பாகவும் செழிப்பாகவும்
   செருக்காகவும் விருப்பாகவும்
சீரெடுத்தப் பாடி மகிழ்வேன் ! – அவள்
பேரெடுத்துப் பாடி நெகிழ்வேன் !

நித்தமும் முன்வந்து பார்க்க – கரம்
                    கோர்க்க – உயிர்
                    ஈர்க்க – மனம்
நிம்மதியாய் அதை  ஏற்க – என்
நினைவலைகளும் கனவலைகளும்
    கடலலையென நடம்புரிந்திடும்
நெஞ்சமெல்லாம் மழை பொழியும் ! – அந்த
வஞ்சியாலே கவி வழியும் !

(காவடிச் சிந்து)
கவிஞர் அருணா செல்வம்.

7 கருத்துகள்:

  1. கவி மழையில் நனைந்து மகிழ்ந்தேன்
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மனம்
    நிம்மதியாய் அதை ஏற்க .////


    இதானே முக்கியம் அருணா?!

    பதிலளிநீக்கு
  3. கவிதை மிகவும் நன்று சகோ.
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  4. அருமை.
    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அருமையான காவடிச் சிந்து...மிகவும் ரசித்தோம் வரிகளை

    பதிலளிநீக்கு