பூக்கள்
மணம்பரப்ப ! ஈக்கள் மதுவருந்த !
தேக்கம்
தெளிந்திருக்க ! தேய்நிலவு – நோக்கமின்றி
மேலிருக்க ! மேனிதொட்ட மேற்றிசைக்
காற்றினிலே
சூலிருக்க ! சொர்க்கம் தர !
குயிலெல்லாம்
பாட ! மயிலெல்லாம் ஆட !
பயிர்கள்
தலைசாய ! பாச – உயிர்கள்
இணைத்தேட ! காற்றும் இதமாக ! காமன்
கணைதொடுக்க ! காதல் வர !
கண்ணோடு
கண்பார்க்க ! கையோடு கைசேர்க்க !
விண்ணோடு
மேகம் விளையாட ! – மண்ணுலகில்
என்னோடு
நீயாட ! உன்னோடு நானாட !
பொன்னான
அந்தப் பொழுது !
(குளக வெண்பா)
கவிஞர் அருணா
செல்வம்
12.07.2014
அற்புதமான புகைப்பட ஓவியம்
பதிலளிநீக்குதந்த கவிதை அதனினும் அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும்
நல்வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி இரமணி ஐயா.
என்ன ஒரு அற்புதக் கவிதை !!
பதிலளிநீக்குஇந்த 75 ஐ 25 க்கு இழுத்துச் சென்று விட்டதே !!
உங்கள் அனுமதி கிடைத்தால் பாடுகிறேன்.
ஜோன்புரி ராகத்தில்.
சுப்பு தாத்தா
வணக்கம் சுப்பு தாத்தா.
நீக்குஎன் கவிதையைப் பாட அனுமதி வேண்டுமா..... என்ன தாத்தா நீங்கள்..... என் கவிதையை யாராவது பாட மாட்டார்களா... என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறேன்.
ஜோன்புரி ராகம்..... ம்ம்ம்..... எனக்கு இதெல்லாம் தெரியாது தாத்தா.
பாடுங்கள் .
நன்றி தாத்தா.
குளக வெண்பா என்பது பிரஞ்சு நாட்டில் நீங்கள் பெற்ற பட்டமோ???
பதிலளிநீக்குஹா ஹா ஹா....
நீக்குதமிழரே..... நான் துவக்கத்தில் சிறுகதை நாவல்கள் தான் எழுதிக்கொண்டு இருந்தேன். அதைப்படித்த என் ஆசிரியர் ‘எழுதிதரசி‘ என்ற பட்டத்தை வழங்கினார்.
அதன் பிறகு மேடைப்பேச்சிற்காக ‘நற்றமிழ்ப் பேச்சாளர்‘ என்ற விருது, என் கவிதைகளுக்காக ‘கவிதைப்பெண்‘ என்ற பட்டம், மரபு பாடலுக்காக இப்போது ‘பாவலர்‘ பட்டம் கொடுத்துள்ளார். இவையெல்லாம் மேடையில் அறிவித்துக் கொடுக்கப்பட்டவைகள். மேடையில் அறிவிக்காமலேயே பல பட்டங்கள் பலபேர் கொடுத்துள்ளார்கள்.
குளக வெண்பா என்பது....
ஒரு பாடலை எந்த ஒரு இடத்திலும் முடிக்காமல் தொடர்ந்து பாடிக்கொண்டே போய் கடைசியில் முடிக்க வேண்டும். அதிலும் அந்தப்பாடல் வெண்பா இலக்கணத்தில் இருக்க வேண்டும்.
இது தான் குளக வெண்பாவிற்கு உரிய இலக்கணம்.
சரக்கு கொடுக்கும் மயக்கத்தைவிட உங்கள் கவிதை தரும் போதை மிக அதிகமாக இருக்கிறது, அதனால் இனிமுதல் வார்னிங்க் கொடுக்கவேண்டும்
பதிலளிநீக்குபாட்டிலுக்குள் இருக்கும் சரக்கு அந்த நேரத்திற்கு மட்டும் இனிமை தரும். ஆனால்...
நீக்குகவிதைக்குள் இருக்கும் சரக்கு நினைக்கும் போதெல்லாம் இனிமை தரும்.
நன்றி உண்மைகள்.
வெண்பா அருமை சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி
தம+1
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
சிறப்பான படம். பொருத்தமான கவிதை..... பாராட்டுகள்....
பதிலளிநீக்குமனம் - மணம்?
மணம் தான். தவறாக அடித்துவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நாகராஜ்ஜி.
நீக்குகவிதையில் தமிழின் அழகு ஜொலிக்கின்றது சகோ வாழ்த்துகள்
பதிலளிநீக்குதமிழ் மணம் 5
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி கில்லர் ஜி.
ஆகா.. குளக வெண்பாவா?.. மிக அருமை தோழி!
பதிலளிநீக்குகுளக வெண்பாவில் குழம்பிவிடப் போகிறேன் நான் நிச்சயம்!..:)
வாழ்த்துக்கள்!
பொன்னான பொழுதுதான்!
பதிலளிநீக்குவெண்பா அருமை!
மனதில் நிற்கிறது
பதிலளிநீக்குவணக்கம்!
அந்தப் பொழுதின் அமுதச் சுவைபாடித்
தந்த குளகம் தழைத்தோங்க! - சந்தமுடன்
பாடும் கவிஞன்யான் பாராட்ட! எந்நாளும்
நாடும் புகழில் நனைந்து!
அருணா கவிஞர் அழகுடன் வாழக்
கருணா கரனார் அருள! - திருநா..மேல்
வண்ணத் தமிழ்மொழியாள் வந்து நடம்புரிய
மண்ணும் மணக்கும் மலர்ந்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
அருமை அக்கா..
பதிலளிநீக்குசகோதரி தங்களின் இந்தப் பதிவின் மூலம் புதிய இலக்கணத்துடனான ஒரு கவிதையைப் பற்றி அறிய முடிந்தது. குளக வெண்பா.
பதிலளிநீக்குஅழகான சொக்க வைத்த வெண்பா வரிகள்....அருமை...ரசித்தோம்