(கலிவிருத்தம் 1)
(குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்)
.
உலகம் பாடிடும் ஓமெனும் நாதமும்
புலரும் காலையின் பூவதன் வாசமும்
உனது நல்லருள் உற்றிடும் நன்மையில்
எனது பண்ணிலும் இன்பினை நல்கவே!
.
(கலிவிருத்தம்
2)
(விளம் + விளம் + குறிலீற்றுமா + கூவிளம்)
.
கற்றவர் கூடிடும் காலம் மின்னிடும்!
பற்றினை விட்டவர் பாதை பண்பிடம்!
பெற்றவர் கூறிடும் பெருமை ஏற்றிடும்!
உற்றிடும் அன்பினில் உயிரைச் சேர்த்திடு!
.
(கலிவிருத்தம்
3)
(குறிலீற்றுமா
+ கூவிளம் + கூவிளம் + கூவிளம்)
.
மானின்
துள்ளலாய் மாதவள் ஓடவும்
மீனின்
மேனியாய் மெல்லிடை ஆடவும்
தேனின் இன்புடன் செவ்விதழ் பேசவும்
வானின்
தூரலாய் வஞ்சியோ பாடினாள்!
.
பாவலர்
அருணா செல்வம்
04.07.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக