இறந்தகால
விலக்கு!
(அணி இலக்கணம் - முன்ன
விலக்கணி)
.
பாடலில் இறந்த
காலத்தில் நடந்தாகக் கூறிடும் ஒரு நிகழ்ச்சியை விலக்குவது “இறந்தவினை விலக்கு“ எனப்படும்.
.
உ.
ம்
உன்னைப் பிரிந்ததால்
ஊண்உறக்கம் இல்லையென்றாய்
என்னுயிர் போனதே
என்றழுதாய்! – பின்என்முன்
பேசுவது தேவதையோ
பெண்ணோ அணங்கழகோ
வீசுதமிழ்ச்
சொல்லால் விளம்பு!
பொருள் –
முன்னர் என்னைப் பிரிந்ததால் ஊண் உறக்கம் இல்லை என்றாய். என்னுயிர் போனதே என்று அழுதாய். நான் வந்த பின்பு
என் எதிரில் வந்து நிற்கிறாய். அப்படியானால் என்முன் பேசுவது
தெய்வமா ? பெண்ணா ?
மோகினியா ?
வீசும் தமிழ்சொற்களால் விளக்கிச் சொல்.
பாடலில் இறந்த காலத்தில் தன் காதலி சொன்னது
பொய் என்று விலக்குவதால் இது “இந்த கால விலக்கு“
ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
24.04.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக