காரண விலக்கு!
(அணி இலக்கணம்)
.
பாடலில் வந்திருக்கும் ஒரு
நிகழ்வில் ஏற்படும் காரணத்தால், அந்நிகழ்வை அல்லது அதற்குறிய செயலை
விலக்குவது “காரண விலக்கு“ ஆகும்.
.
உ. ம்
இடியோடு மின்னல் இணைந்த மழையால்
கடிய நடைவழியைக் கண்டாள்! – ஒடிந்தமரக்
கம்பு வழிக்கிடந்த காரணத்தால் தாய்வீட்டில்
தெம்புடன் தங்கினாள் தேர்ந்து!
.
பொருள் – தாய்வீட்டிற்கு
வந்த பெண் தலைவன் வீடு செல்ல வேண்டி இடியுடன் மின்னல் இணைந்து மழைப் பொழியும் நேரத்தில்
தான் விரைந்து போகும் பாதையைப் பார்த்தாள். அங்கே காற்றினால் ஒடிந்த மரக்கிளையானது
அவள் போகும் வழித்தடத்தில் கிடந்ததால் அதைத் தாண்டி செல்ல முடியாது என்ற
காரணத்தால் தாய்வீட்டிலேயே தங்கினாள்.
…..தான் செல்லும் பாதையில் மரக்கிளை ஒடிந்து விழுந்திருந்த காரணத்தால் தான் வீடு செல்ல முடியவில்லை என்று ஒரு காரணத்தைக் குறிப்பிட்டுத் தன்
கணவன் வீட்டிற்கு செல்வதை விலக்கி விட்டதால்
இது “காரண விலக்கு“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
24.04.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக