6.08.2014 அன்று காலையில் உலகின்
முதல் பெரிய கிருஸ்துவ ஆலயத்தைப் பார்த்து விட்டு வெளிவந்ததும் கைடுகள் நம்மைச்
சூழ்ந்து கொண்டார்கள்.
ரோம் நகரத்தின் முக்கிய பழங்கால
ஓவியங்கள் சிலைகள் உள்ள நினைவு இடத்தைப் பார்க்கச் சொன்னார்கள். அதைப்பற்றி
விசாரித்தோம். வாட்டிகானின் முக்கியமான “சிஸ்டீன்த் கோபுரம்“ உள்ள இடம் தான் அந்த
கண்காட்சியகம் என்றார்கள்.
உள்ளே போக ஒருவருக்கு 16 யுரோ.
ஆனால் இரண்டரை மணிநேரம் வரிசையில் நிற்க வேண்டும் என்றார்கள். வரிசையில் நிற்காமல்
உள்ளே செல்ல வேண்டும் என்றால் 33 யுரோ. இந்த டிக்கெட்டைக் கைடுகளே தருவார்களாம்.
33 யுரோ அதிகம் என்று நாங்கள் வரிசையில் நடக்கத் துவங்கினோம்.
அப்பொழுது ஒரு கைடு, “மேடம்.....
உள்ளே ஆயிரம் அறைகள் உள்ளன. காலையிலேயே வந்திருந்தாலும் பரவாயில்லை. மணி இப்பவே
மதியம் இரண்டாகி விட்டது. இங்கிருந்து உள்ளே போகவே குறைந்தது நாலரை ஐந்தாகிவிடும்.
பிறகு நேரம் போதாது. நான் வேண்டுமானால் ஒரு டிக்கெட் 30 யுரோவிற்குத் தருகிறேன்“
என்றார்.
1000 அறை கட்டிடத்தின் உட்புறம்
எனக்கு என்னவோ ஒரு மியுசியத்தைப்
பார்க்க ஒருத்தருக்கு 16 யுரோ என்பதே அதிகமாகத் தெரிந்தது. அதிலும் 30 யுரோ மிக
அதிகம். “வேண்டாம்“ என்று சொல்லிவிட்டு வரிசையில் நடந்தோம்.
அந்தக் கைடு சொன்னது போலவே ஐந்து
மணிக்குத் தான் மியுசியத்தின் உள்ளே நுழைய முடிந்தது.
உள்ளே சென்று பார்த்த போது
அங்கிருந்த ஆயிரம் அறைகளில் மிகப் பழங்கால ஓவியங்கள். கி.பி 73 ஆம் ஆண்டிலிருந்து
2010 வரையிலான ஓவியங்கள் காட்சிக்கு ஆண்டவாரியாக பிரித்து வைக்கப்பட்டிருந்தது.
சில அறைகளில் பழங்கால சிலைகள்.
துணியில் வரையப்பட்ட ஓவியங்கள், பழங்கால கைவினைப் பொருட்கள், முக்கியமாக “த்ரி டி“
ஓவியங்கள்.... கண்கொள்ளா காட்சி!!
அதில் உலகப் புகழ் பெற்ற “மைக்கேல்
ஆன்ஸ்“ ஓவியங்களைப் பற்றி சொல்லவே வார்த்தை இல்லை. உண்மையில் பிரமித்துப் போனேன்.
காரணம்..... ஓர் அறைக்குள் நுழைந்த
போது சுற்றிலும் அழகிய பயங்கால சிலைகள். எவ்வளவு நுணுக்கமாகச் செய்திருக்கிறார்கள்
என்ற வியந்து போய் அதிசயமாகப் பார்த்தேன். ஆனால் சற்று உற்று பார்த்த போது தான்
தெரிந்தது அது சிலைகள் இல்லை. ஓவியங்கள் என்று. என்னால் நம்பவே முடியவில்லை.
அவையெல்லாம் சிலைகள் தான் என்ற குழப்பத்தும் அருகில் சென்று தொட்டுப் பார்த்தேன்.
சிலைகளுக்குறிய மேடு பள்ளங்கள் இல்லாத வெறும் சுவற்றின் மேல் கை வைத்த உணர்வால்
தான் இது சிலை அல்ல. சித்திரங்கள் என்ற உண்மை விளங்கியது.
சிலையைப் போன்ற ஓவியம்
நாங்கள் ஒரு இருநூறு அறைகளைத்தான்
பார்த்திருப்போம். அதற்குள் மணி எட்டாகி விட்டது. மேலும் ஒரு மணி நேரம் சுற்றிப்
பார்க்கலாம். ஆனால் காலையிலிருந்து அலைந்த களைப்பால் வெளிவந்து விட்டோம்.
2010 ஓவியங்கள் உள்ள அறைகள்
இன்று ஒரு சில ஓவியங்களை மட்டும்
வெளியிட்டுள்ளேன். சில அறைகளில் ஓவியங்களைப் படம் பிடிக்கக் கூடாது என்று
சொல்லிவிட்டார்கள். அடுத்தப் பதிவில் சிலைகளின் படங்களை வெளியிடுகிறேன்.
அன்புடன்
அருணா செல்வம்.
10.09.2014
அருமையான ஓவியங்கள்..... ஓவியங்களுக்காகவே 1000 ஆயிரங்கள்... பிரமிக்க வைக்கும் செய்தி.
பதிலளிநீக்குமலைத்துப் போய்விட்டேன் சகோதரியாரே
பதிலளிநீக்குஉங்களின் கண்களின் வழியே நானும் பார்த்தேன் அந்த அதிசய ஓவியங்களை
நன்றி சகோதரியாரே
தம +1
பதிலளிநீக்குஅழகிய பதிவு.
பதிலளிநீக்குஇன்று தங்கள் பதிவை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_11.html
அருமையான ஓவியங்கள், நாங்கள் சென்றபொழுது மிகவும் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த மியூசியத்தை பார்க்க முடியவில்லை.
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
ஓவியங்கள் அருமை என்றால்.....சிலை போன்ற ஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றன.....அருமை அருமை! தொடர்கின்றோம்...
பதிலளிநீக்குஅழகான அருமையான படங்கள்...
பதிலளிநீக்கு