புதன், 20 ஆகஸ்ட், 2014

“பைசா“ கோவில்!! (COMPO DEI MIRACOLI - இத்தாலி-3)

  
நட்புறவுகளுக்கு வணக்கம்.
    போன பதிவில் “பைசா“ சாய் கோபுரம் வரையில் எழுதியிருந்தேன். இன்று அதன் அருகில் உள்ள கோவிலையும் கல்லறையையும் பார்த்த அனுபவத்தைத் தொடர்கிறேன்.
  நீங்கள் எல்லாம் திட்டுவது மனக்காதில் விழுவதால்.... அதிகமாக வளவளவென்று எழுதாமல் மிகச் சுறுக்கமாக எழுத முயல்கின்றேன்.

    மறுநாள் 05.08.2014 காலை பைசா அருகில் இருந்த ஒரு தோட்டத்திற்குச் சென்றோம். உள்நுழைய ஒருவருக்கு 2.50 யுரோ. அங்கே சென்றால் மிகப்பெரிய பெரிய மரங்கள்... செடி கொடிகளை மட்டும் தான் பார்த்தோம். பூக்கள் எதுவும் இல்லை. நாங்கள் போன நேரம் சீஸன் இல்லையாம். ஒரே ஒரு தாமரை குளம் மட்டும் தான் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. அதை மட்டும் ஒரு கிளிக்.

தாமரைக் குளம்


    திரும்பவும் பைசா கோபுரம் அருகில் வந்து கொம்போசன்டோ மொனிமென்டல், பத்திஸ்டர் இரண்டு இடங்களையும் பார்க்க நுழைந்தால்.... அதிக மக்கள் இருப்பதால் கொம்போசன்டோ மொனிமென்டல் மட்டுமே பார்க்க டிக்கெட் கிடைத்தது.
   அதற்கு முன் நேற்று இருந்த டிக்கட்டுடன் மிராக்கொலி (COMPO DEI MIRACOLI) கோவிலுக்குள் நுழைந்தோம்.


COMPO DEI MIRACOLI - கோவில்- கி.பி 1161

 சுற்றுச் சுவர்

கோவில் மேல் சுவர்.

கோவில் உள்

   கோவிலில் பூசை (மேஸ்) நடப்பதில்லையாம். வெறும் பார்வையாளர்கள் வந்து போகும் இடமாக மட்டுமே உள்ளதாம்.

சாம் ரெனியர் (SAM RANIER

   கோவிலைக் கட்டிய சாம் ரெனியர் (SAM RANIER) அவர்களின் உடலைப் பதப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அந்த உடலைப்பற்றி எழுதிய பலகை முழுவதும் இத்தாலி மொழியிலே இருந்தது. அதனால் அதன் முழு வரலாறும் தெரியவில்லை.


   ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்துக் கைடுகள் பக்கம் காதை நீட்டினால்..... பழைய மாதிரி இல்லைங்க இங்கே இருக்கும் கைடுகள். இப்பொழுதெல்லாம் கைடுகள் பார்வையாளர்களைக் கூட்டமாகச் சூழ வைத்துச் சத்தமாக பேசி விளக்குவது இல்லை. அப்படி விளக்கினால் நம் காதகளிலும் விழுந்து.... ஏதாவது கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இங்கே இவர்கள் அனைவரிடமும் ஒரு சிறிய மசினுடன் கூடிய எட்போன் கொடுத்து விடுகிறார்கள். கைடு தன்னிடம் உள்ள சிறு மைக்கில் இடத்தைப் பற்றி மிகவும் மெதுவாகவே விளக்குகிறார். பார்வையாளர்கள் எங்கே வேண்டமானாலும் இருந்து கொண்டு அவர் சொல்வதைக் கேட்டு அறிந்துக் கொள்கிறார்கள். அதனால் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் இரைச்சல் இல்லாமல் இருக்கிறது.


   ஆனால் நமக்கு எதுவும் காதில் விழாதது கொஞ்சம் கவலை தான்.....(( கவலையடன் கொம்போசன்டோ மொனிமென்டலுக்கு வந்தோம்.
  
கொம்போசன்டோ மொனிமென்டல் (COMPOSANTO MONUMENTALE)

நுழைவு

   இதனுள் நுழைய ஒருவருக்கு 5.00 யுரோ. இது கிருஸ்த்தவ பாதிரிமார்களின் கல்லறை. இது எத்தனை நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. மிக மிக பழமை வாய்ந்தது என்று மட்டும் சொல்லப்படுகிறது. ஆனால் இத்தாலியின் போருக்குப் பிறகு 1944 ல் இதைப் புதுப்பித்து இருக்கிறார்கள். இன்றளவும் வேலை நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

பாதிரிமார்களின் கல்லறை. 

கடைசி கல்லறை

                       பாதிரிமார் எலும்பு

பாரிதிமார்களின் எலும்புகள்

உள் பக்கம்

   போர் முடிந்த பிறகு கிடைத்த பாரிதிமார்களின் எலும்புகளைப் பாது காத்து வைத்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லறைகள் உள்ளன. கல்லறையின் கீழ் எழுதி இருக்கும் ஆண்டுகள் பழைய ரோமன் எழுத்துக்களில் எழுதப்பட்டு உள்ளன.

   நாங்கள் முதல் பாதி நாளைப் பைசாவில் கழித்துவிட்டு ரோமில் இருக்கும் வாட்டிகானுக்குப் பயணமானோம். இங்கிருந்து மூன்று மணிநேர இரயில் பயணம். கிட்டத்தட்ட அறுநூறு மிலோ மீட்டர். ஒருவருக்கு 26 யுரோ. ரோம் நகரம் வந்து ஓட்டலில் சேர இரவு ஒன்பது ஆகிவிட்டது.
   அடுத்தப் பதிவில் ரோம் நகர வட்டிகான் நகரத்தில் உள்ள உலகின் முதல் பெரிய கிருஸ்துவ ஆலயத்தைப் பற்றி எழுதுகிறேன்.
   
அருணா செல்வம்
20.08.2014

   

20 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தைரியமா.....? அதெல்லாம் இல்லைங்க.
      எனக்கு அந்த இடம் கல்லறை என்று தெரியாது. அதனால் தான் போனேன்..... ஒரு நாளைக்கு குறைந்தது ஆயிரம் பேர் வரும் இடமாம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  2. நல்ல அழகான படங்களுடன் விளக்கமான தகவல்கள்! அதுவும் அந்த மேல்தளப் படம் மிக அருமை! நல்ல ஃபோட்டோ !...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என்னங்க அழகு...? “வாட்டிகான் நகரில் கண்ட ஓவியங்களை வெளியிடுகிறேன். அப்போது சொல்லுங்கள்.....

      ஆனால் சில முக்கிய ஓவியங்களை படம் பிடிக்க அனுமதிக்கவில்லை என்பது கவலையான விசயம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  3. அட! இந்தப் பாதிரிமார்களின் கல்லறையை நாங்க பார்க்கலையே:( அட்டகாசமா இருக்கு! படங்கள் அனைத்தும் அருமை!

    யூரோப்பில் இந்த கைடு சமாச்சாரம் ஒரு பெரிய தொல்லைதான். எங்கே போனாலும் உள்ளூர் கைடு மட்டுமே வாயைத்திறந்து விளக்கம் சொல்வார். நம்ம கூட்டத்தில் விஷயம் தெரிஞ்சவர் (நம்ம டூர் கைடு )இருந்தாலும் வாயைத் திறக்கப்டாது:(

    அதிலும் இப்ப நீங்கசொல்ற ஆடியோ மெஷீன் எல்லாம் கிடையாது அந்தக்காலத்தில். கைடு கையில் ஒரு குச்சியின் முனையில் ஒரு படம் மாட்டிக்கிட்டு அதை உயர்த்திப் பிடிச்சு இருப்பாங்க. அந்தப் படம்பார்த்துவச்சுக்கிட்டு அவர்நிற்கும் இடத்துக்குப் பாய்ஞ்சு போனால்தான் அவர்சொல்வது லேசாகவாவது காதில் விழும்!

    அங்கங்கே கைடு சார்ஜுன்னு நிறைய கொடுக்கவேண்டியதாப் போச்சு.

    எங்களுக்கு வாட்டிகனில் tweety bird :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பல இடங்களுக்குச் சென்றுள்ளேன். ஆனால் இது தான் புது மாடலாக இருந்தது.
      நாங்கள் டூர் போன்று சேர்ந்து போகாமல் தனிப்பட்ட முறையில் சென்றதால் எங்களுக்கு என்ற கைடு வசதி கிடையாது. அங்கங்கே கிடைத்தப் புத்தகங்களைக் கொண்டு இந்த சில விசயங்களைச் செமித்தேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி அம்மா.

      நீக்கு
  4. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. தங்களுடன் உடன் பயணித்த ஓர் உணர்வு சகோதரியாரே
    நீங்கள் மிகவும் விரிவாகவே எழுதலாம்
    படங்கள் மிக அருமை
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா.

      நம் வலையுலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் சிறந்த படைப்பாளிகள். அவர்களுக்கு விளக்காமாக நாம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அப்படியே விளக்கமாகச் சொன்னாலும் அவர்களுக்குப் பொறுமையாகப் படிக்க நேரமும் இல்லை. அதனால் தான் எதையும் நான் சுறுக்கமாக எழுதுகிறேன்.
      ஆனால் புரியாத இடங்களைப் பின்னோட்டத்தில் கேட்பவர்களுக்குப் பதில் அளித்து விடலாம் என்று தான்.....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. சுவாரஸ்யமான தகவல்கள், அருமையான ஒப்டங்கள். பதப்படுத்தப்பட்ட உடல் சரியாகத் தெரியவில்லையே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... என்னிடம் சற்று கிட்டே எடுத்த இன்னொறு படம் இருக்கிறது. அதை உங்களுக்காக அடுத்தப் பதிவில் வெளியிடுகிறேன்.
      இதில் என்ன மற்றொரு சுவாரிசியம் என்றால்.... இந்த முறை நான் சென்ற எல்லா இடத்திலும் இப்படிப்பட்ட பதப்படுத்தப்பட்ட உடல்களைத் தான் நிறைய பார்த்தேன்....!!!

      சில இடங்களில் மம்மிகள்.... பார்க்கவே கோரமாக..... அதை நான் படம் பிடிக்கவே இல்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  7. இப்போதெல்லாம் நிறைய சுற்றுலா தளங்களில் ஆடியோ கைடு கிடைக்க ஆரம்பித்து விட்டது - ஹிந்தி [அ] ஆங்கில மொழியில் அந்த இடத்தின் அருமை பெருமைகளை சேமித்து வைத்திருப்பார்கள் - ஆங்காங்கே ஒரு எண் இருக்கும். அந்த எண்ணை உங்களுக்குத் தரும் ஆடியோ கைடு [ஒரு சிறிய கைப்பேசி போன்ற instrument மற்றும் head phone] instrument-ல் அழுத்த அவ்விடம் பற்றிய எல்லா விவரங்களும் உங்கள் காதில் ஒலிக்கும்.....

    அதற்கான கட்டணம் கொஞ்சம் அதிகம் என்றாலும் நிம்மதியாக கேட்கலாம்!

    உங்கள் கட்டுரை மூலம் நாங்களும் இவ்விடங்களைப் பார்த்த உணர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.... இப்படி ஒரு வசதி இருக்கிறதா....? என்க்குத் தெரியாது.

      நான் பொதுவாக முக்கிய இடங்களுக்குச் சென்றால் அவ்விடத்தின் வரலாற்றுப் புத்தகத்தை வாங்கி படித்தக்கொண்டே பார்த்து விடுவேன்.
      இந்த முறை, ஒவ்வொரு ஊரிலும் பெரிய பெரிய புத்தகங்கள். அதை வாங்கிவிட்டாலும் விமானத்தில் விட மாட்டார்கள். அதனால் அங்கே இருந்த கடைகளிலேயே படித்து குறிப்பு எடுத்துக் கொண்டேன். நான் நேரம் எடுத்தப் படித்ததை யாரும் தடுக்காதது பெரிய விசயமாகத் தெரிந்தது.

      அடுத்த முறை நீங்கள் சொன்ன முறையில் விசாரித்துச் செய்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வழிகாட்டலுக்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  8. பகிர்வை ரசித்தேன் தோழி !
    எனது உடல் நலன் இப்போது மெல்ல மெல்லத் தேறி வருகின்றது தோழி விரைவில் நடந்து திரிய முடியும் என்றே எண்ணுகின்றேன் மிக்க நன்றி தோழி அன்போடு நலன் விசாரித்தமைக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தேறிய உடல் நிலையைக் குறித்து மகிழ்கிறேன். சீக்கிரத்தில் ஓடி விளையாடுவீர்கள்....

      நன்றி தோழி.

      நீக்கு
  9. அருமையான பயணப் பகிர்வு! படங்கள் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  10. படங்கள் பெரிதுபடுத்திப் பார்க்கும்போது அழகு.... கல்லறைக்குள் எப்படித்தான் தைரியாமாகப் போய் வந்தீர்களோ...

    ஒவ்வொரு இடத்துக்கும் நுழைவுக் கட்டணமாக வசூலிப்பது தான் கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லறைக்குள் போவதற்குத் தைரியம் வேண்டுமா....?
      பயம் இல்லாமல் இருந்தாலே போதும்.
      தவிர நானே பெரிய பேய்.....!!

      உண்மை தான் ஸ்சூல் பையன். சில இடங்களை இதனால் பார்க்காமலேயே விட்டுவிடலாம் என்று நினைத்தாலும்.... இங்கே இதையெல்லாம் பார்ப்பதற்காகவே வந்துவிட்டு பார்க்காமல் போவதா.... என்றே செலவு செய்து பார்த்தேன். இத்தோடு இத்தாலிக்கு எப்போது போகப்போகிறோம்.... என்ற எண்ணம் தான்....

      நன்றி ஸ்சூல் பையன்.

      நீக்கு