உலகின் முதல் பெரிய கிருஸ்துவ
ஆலயம் இத்தாலி நாட்டில் ரோம் நகரத்தில் உள்ளே உள்ள சிறு நாடான “வாட்டிகான்“ல்
உள்ளது.
இந்த “வாட்டிகான்“ என்பது தனி
நாடாகத்தான் குறிப்பிடப் படுகிறது. இந்த நாட்டின் சுற்றளவு 44 கிலோ மீட்டர் தான்.
கிட்டத்தட்ட 8000 பேர் வசிக்கிறார்கள். இந்த நகரத்தைச் சுற்றி மிகப்பெறிய சுற்றுச்
சுவர் உள்ளது.
சுற்றுச் சுவர்
இந்த நகரத்தில் தான் உலகின்
மிகப்பெரிய கிருஸ்துவ ஆலயமான “சேன் பியர்“ ஆலயம் உள்ளது. இந்த “சேன் பியர் ஆலயத்தை
ஆலயம் என்று குறிப்பிடாமல் கிருஸ்துவர்களின் முக்கிய புனிதத் தளம் என்றே குறிப்பிடுகிறார்கள்.
பிளேஸ் சேன் பியர்
நாங்கள் 06.08.2014 அன்று காலை
ஆலயத்திற்குச் சென்றோம். நாங்கள் ஆலய வளாகத்தில் நுழைந்ததும் பார்த்த போது கோவில்
அருகிலேயே உள்ளது போன்று தான் தெரிந்தது. ஆனால் சற்று உற்றுப் பார்த்தால் தான்
அதன் அருகில் இருந்த மக்கள் எவ்வளவு சிறியதாகத் தெரிகிறார்கள் என்பதை உணர முடிந்தது.
அவ்வளவு உயரம்!
வரிசையாக நிற்கும் மக்கள்
இது வெறும் பளிங்குக் கற்களால்
செய்யப்பட்ட மிகப் பெரிய ஆலயம். ஆலயத்திற்கு முன் பாகம் “பிளேஸ் சேன் பியர்“ என்ற
இடம் உள்ளது. இந்த இடத்தின் நீளம் 198 மீட்டர். அகலம் 148 மீட்டர். அந்த இடத்தில்
தான் முக்கிய நாட்களில் நடைபெறும் பூசைகள் நடைபெறுமாம். இவ்வளவு பெரிய இடத்தின்
முன்பாகத்தில் மட்டும் மக்கள் அமர்ந்து பூசையில் கலந்து கொள்ளும் விதமாக உள்ளது.
மற்ற இடத்தில் மக்கள் நின்று கொண்டே கலந்து கொண்டாலும் இடம் போதாத அளவில்
தான் உள்ளதாம்(!) இங்கே 150 000 பேர்கள் தாராளமாக நின்று பலிபூசைகளில்
கலந்து கொள்கிறார்கள்.
நாங்கள் ஒன்பதரை மணியளவில்
சென்றாலும் கோவிலுக்குள் செல்லும் வரிசையில் நின்று 11.30 மணிக்குத் தான்
கோவிலுக்குள் நுழைந்தோம். வரிசையில் நின்று கொண்டே இருக்கவில்லை. நடந்துக்கொண்டே
இருந்தாலும் இரண்டு மணிநேரம் பிடித்தது.
உயரமான தூண்கள்
கோவிலுக்குள் குறைந்தது 50000
பேர்களுக்கு மேல் தாராளமாக கொள்ளும் என்பதால் வரிசை நிற்காமல் சென்றதில் கொஞ்சம்
திருப்தி தான். இந்த ஆலயம் 154 மட்டர் அகலம் கொண்டுள்ளது. உயரம் 219 மீட்டர்.
அனைத்தும் சேர்த்து 2.30 எக்டேர் பரப்பளவு.
இந்தக் கோவில் முதலாம் போப் “யார்
செயின்ட் பீட்டர்“ என்பவரின் கல்லறையின் மேல் கட்டப்பட்டுள்ளது. கி.பி 1506 ல்
துவங்கி 1626 ல் முடிக்கப்பெற்றதாம்.
மேல்கைகள் தெரியமலிருக்க துணியைச் சுற்றிய பெண்கள்.
அன்று மிகவும் அதிக வெயில் (30
டிகிரி) பொதுவாக ஆண்கள் தொண்ணூறு சதம் பேர் அரைக் கால்சட்டையை முட்டிவரையில்
அணிந்திருந்தார்கள். பெண்களில் 50 சதம் பேர் மிகவும் சிறிய கால்சட்டை அல்லது
குட்டை கவுன், கையில்லாத சட்டையும் தான் அணிந்திருந்தார்கள். இதில் என்ன பிரட்சனை
என்றால்..... இப்படி கால்சட்டையும் குட்டை கவுனும் கையில்லா பனியனையும் அணிந்த பெண்களைக்
கோவிலுக்கு உள்ளே போக அனுமதிக்க வில்லை.
ஆலயத்தின் அருகில்
ஆனால் அவ்விடத்திலேயே பாக்கிஸ்தான்
காரர்கள் சின்ன சின்ன துண்டு துணிகளை ஐந்து யுரோவிற்கு விற்கிறார்கள். வேறு
வழியில்லாத பெண்கள் இந்தத் துணியை வாங்கி இடுப்பில் வேட்டி போலவும் கை பகுதி
மூடும் வகையில் கழுத்தைச் சுற்றியும் கட்டிக் கொள்கிறார்கள்.
கோவிலுக்குள் எந்த இடத்திலும்
மெழுகுவத்திகள் கிடையாது.
இங்கே மெழுகு ஏற்றும் இடங்களில்
அந்த மெழுகு வத்திகள் பிளாஸ்ட்டிக்கில் செய்யப்பட்டு விற்பனைக்கு வைத்துள்ளார்கள்.
விருப்பப்பட்டவர்கள் அங்கிருக்கும் உண்டியலில் பணத்தைப் போட்டுவிட்டு அந்த மெழுகை
எடுத்து மெழுகு வைக்கும் ஸ்டேண்டில் செறுகினால் மேல் உள்ள திரியில் லைட் எறிகிறது.
ஒரு சிலர் அந்த மெழுகை ஏற்றினார்கள்.
தவிர கோவிலைப்பற்றிச் சொல்ல
வேண்டும் என்றால்..... சொல்லிக்கொண்டே போகலாம். மிகப் பெரிய பெரிய சிலைகள்.
பழங்கால ஓவியங்கள். தரையும் பளபளப்பாக.... கோவிலின் மேல் சுவற்றுப்படங்கள்.....
அனைத்துமே கண்கொள்ளா காட்சிகள். வாயால் சொல்ல முடியாது என்பதால் படங்களை
வெளியிட்டு விடுகிறேன்.
மேல் புறச் சிலைகள்
நுழைவிடம்
புனித நீர்
ஆலயத்தின் உட்புறம்
மேல் கூரைப்பகுதி
உள்ளிருந்த சிலைகள்
கருவறை
கோவிலுக்குள் வேறு வேறு பாகத்தில் வேறு வேறு மொழிகளில் பூசைகள் நடக்கிறது. அந்த நேரத்தையும் இடத்தையும் ஏற்கனவே குறிப்பிட்டு விடுவதால் அந்த மொழி மக்கள் சரியாக பூசையில் கலந்து கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 500 பேர்கள் ஒரு பூசையில்கலந்துகொள்கிறார்கள்.
தவிர கோவிலின் ஹண்டர் கிரௌன்டில் (தமிழில் தெரியவில்லை) போப் ஆண்டவர்களின் கல்லறைகள் நூற்றுக்கும் மேற்பட்டது இருக்கிறது. புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்று சொல்லி விட்டார்கள்.
கல்லறையின் நுழைவாயில்
போப் ஆண்டவரின் பதப்படுத்தப் பட்ட உடல்
மிகவும் துர்ரத்தில் இருந்ததால் சூம் செய்தாலும் இவ்வளவு
தான் எடுக்க முடிந்தது.
இப்படி பூசையில் கலந்துக்கொள்ளாமல்
தனிப்பட்ட முறையில் கடவுளை வணங்க வேண்டும் என்றால் அதற்கென்றும் தனித்தனி இடங்கள் உள்ளன.
அவ்விடத்தில் ஆயிரம் பேர்கள் இருந்தாலும் யாருமே இல்லாத இடம் போல் அமைதியாக
இருக்கிறது.
நாங்கள் கிட்டத்தட்ட இரண்டரை
மணிநேரம் கோவிலின் உள்ளேயே சுற்றிவிட்டு இரண்டு மணிக்கு வெளியில் வந்தோம்.
அன்று மதியம் வாட்டிகானில் உள்ள
உலகப் புகழ் பெற்ற பழங்கால மியுசியத்தைப் பற்றி எழுதுகிறேன்.
அருணா செல்வம்
25.08.2014
கொம்போசன்டோ மொனிமென்டலில் பாதிரியாரின் பதப்படுத்தப் பட்ட உடல். (போன பதிவில் ஸ்ரீராம் ஐயா அவர்கள் கேட்டு எழுதியிருந்தார். அவருக்காக வெளியிட்டுள்ளேன்.)
நட்புறவுகளே.....
எல்லா பெரிய படைப்பாளிகளைப் போல
நாமும் பயணக்கட்டுரை எழுதலாம் என்று எழுதத் துவங்கினால்..... பிறகுத் தான் தெரிந்தது
அதில் உள்ள கஷ்டங்கள். முதலில் அந்த அந்த இடங்களைப் பற்றி நன்கு அறிந்திருக்க
வேண்டும். இந்தக் கட்டுரையில் நான் தெரிந்துக் கொண்டதை மட்டுமே உங்களுடன் பகிர்கின்றேன்.
இதில் மாற்றுக் கருத்துக்களும் இருக்கலாம். தெரிந்தவர்கள் தெரிவித்தால் நானும்
அறிந்துக்கொள்வேன்.
தவிர நான் பிடித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில்
நல்ல படங்களைத் தேடிப்பிடித்து வெளியிடும் கஷ்டம்...... சில நேரம் சலிப்பை
வரவழிக்கிறது.
ஒரு குட்டிக்கதையை எழுதினோமா
வெளியிட்டோமா என்றில்லாமல்...... ஏன்தான் இதைத் துவங்கினேனோ என்ற சோர்வு வரக்
காரணத்தைத் தேடுகிறேன்.
அன்புடன்
அருணா செல்வம்.
உலகப் புகழ்பெற்ற கோயிலுக்குச் சென்று வந்த பயணம் பற்றி எளிமையாகவே சொன்னதற்கு நன்றி..பயண்க் கட்டுரைகளில் நாம் சொல்ல வேண்டிய விஷயங்களை நாம் எடுத்த புகைப் படங்களே சொல்லி விடும். இடங்களின் சரியான வரலாறு மட்டும் சொன்னால் போதும். அந்த வகையில் உங்கள் பயணக் கட்டுரைகள் நன்றாகவே உள்ளன.
பதிலளிநீக்குத.ம.1
தங்களின் வார்த்தைகள் எனக்கு ஊக்குவிப்பு கொடுக்கிறது ஐயா.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி ஐயா.
சோர்வடைய வேண்டாம் சகோதரியாரே
பதிலளிநீக்குதங்களின் படங்களும் எழுத்தும் ,
நாங்களும் பயணித்த ஓர் அனுபவத்தைத் தருகின்றது
தொடருங்கள்
ஆனாலும் ஒரு வியப்பு ,உலகில் மிகப் பெரிய தேலாலயத்தில்
எங்குமே மெழுகுபத்தி ஏற்றக்கூடாது என்பதுதான் அவ்வியப்பு
பழையன கழிதல் போலும்
நன்றி சகோதரியாரே
பழையன கழிதல் என்பதை விட பழமைகளைப் பாதுகாத்தல் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
நீக்குஅவ்விடத்தில் ஒரு சிலரைத் தவிர யாரும் கடவுளை தியானிக்கவில்லை. எல்லோருமே அங்கிருந்த ஓவியங்களையும் சிலைகளையும் மேற்கூரையில் கலை நயத்தையும் ரசித்தபடி இருந்தார்கள்.
காணிக்கை என்று எந்தவிதத்திலும் கொடுக்கவில்லை. உண்டியல் கூட அந்த பிளாஜ்டிக் மெழுகுவத்திகள் உள்ள இடத்தில் மட்டுமே இருந்தது.
தங்களின் ஊக்குவிப்பான வார்த்தைகளைக் கண்டு மகிழ்கிறேன் ஐயா.
மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
தம 3
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா.
நீக்குசோர்வே வேண்டாம். சென்று வந்த இடங்கள் பற்றி இன்னும் எழுதுங்கள். அருமையான படங்கள். சில படங்கள் எனக்கு என் கணினியில் திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. கோவிலின் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கிறது. இது போன்ற இடங்களை என் கனால் நான் காண்பேனோ இல்லையோ, உங்களுக்கு அந்த அதிருஷ்டம் வாய்த்ததோடு எங்களுக்கும் பார்க்கப் பகிர்ந்திருக்கிறீர்கள். அருமை. எனக்காக அந்தப் படத்தை வெளியிட்டதற்கும் நன்றி! :)))
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம் ஐயா.
நீக்குநான் மெமரிக் கேமராவிலும் டப்லெடிலும் மாறி மாறி எடுத்ததால் சில படங்கள் லோட் ஆக நேரம் எடுக்கிறது என்று நினைக்கிறேன். நான் பதிவிடும் போதும் அப்படித் தான் செய்தது.
கண்ணியில் அதிக நேரம் எடுத்தாலும் நான் இட்ட படங்களை ரசித்துக் கண்டிருக்கிறீர்கள்.
மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.
சூப்பர்! விவரணம். தாங்கள் பார்த்ததை, அறிந்ததை எழுதுங்கள் எங்களுக்கும் இது ஒரு நல்ல அனுபவமாகத்தான் தெரிகின்றது. பல விஷயங்கள் தெரிந்து கொள்கின்றோம்..
பதிலளிநீக்குபரவாயில்லை அங்கும் கூட கோயிலுக்குள் செல்ல சில எட்டிக்ச் உள்ளதே...நல்ல விஷயமாகத் தெரிகின்றது!
அதேபோல் மெழுகுவர்த்தி ஏற்றக் கூடாது என்பதும் ஆச்சரியமாகவும் நல்ல விஷய்மாகப் பட்டது!
அவசியம் தொடர்கிறேன் ஐயா.
நீக்குநாம் வெளிநாட்டில் எப்படியும் போகலாம வரலாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் உடை விசயத்தில் இந்த கட்டுப்பாட்டை நானும் தான் ஆச்சர்யமாகப் பார்த்தேன்..
இந்த மெழுகு விசயம் எனக்கும் ஆச்சர்யமூட்டியது.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி துளசிதரன் ஐயா.
படங்கள் அழகு!
பதிலளிநீக்குஉண்மைதாங்க. நானும் மிகவும் ரசித்தேன்.
நீக்குமீண்டும் நன்றி ஐயா.
வணக்கம் தோழி !
பதிலளிநீக்குநேரமின்மையால் வாக்களித்து விட்டுச் செல்கின்றேன் மீண்டும் வந்து
தங்களின் ஆக்கத்தைக் கண்டு மகிழ்வேன் .வாழ்த்துக்கள் தோழி .
நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள்.
நீக்குஇருந்தாலும் நேரத்துடன் வந்து வக்களித்தமைக்கு
மிக்க நன்றி தோழி.
படங்களும் கட்டுரையும் அருமை....பயணக்கட்டுரை எழுதுவதில் கஷ்டம் இருந்தாலும் அதிலும் நீங்கள் பாஸ் பண்ணிவிட்டீர்கள்
பதிலளிநீக்குபாஸ் பண்ணிவிட்டேனா....
நீக்குஅப்பாடா..... “பட்டம்“ கொடுப்பீர்கள் தானே.....
ஆமாம் சர்ச்சுக்கு போனீங்க அங்க இந்த மதுரை தமிழனுக்காக பிரார்த்தனை பண்ணினீங்களா?
பதிலளிநீக்குசர்ச்சுக்கு போவதற்கு முன் அமெரிக்க மாமியின் கைகளுக்கு அதிக வலு தரும்படி ஆண்டவனைப் பிராத்திக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால்......
நீக்கு