வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

அடிமைகள்!! (நகைச்சுவை)


   
                           

      கிரேக்க அறிஞர் பிளாட்டோவிடம் செல்வந்தர் ஒருவர் வந்தார்.
    “பெருந்தகையீர், என் மகனுக்குத் தாங்கள் கல்வி கற்றுத் தர வேண்டும். அதற்கு எவ்வளவு சம்பளம் கேட்கிறீர்கள்?“ என்று கேட்டார் செல்வந்தர்.
    “500 வெள்ளிக்காசுகள் தாந்துவிடுங்கள்“ என்றார் பிளாட்டோ.
    “என்ன... 500 வெள்ளிக் காசுகளா...?“ என்று அதிர்ந்து போய்க் கேட்டார் செல்வந்தர்.
    “ஆமாம்“ என்றார் பிளாட்டோ.
    “இது மிக மிக அதிகம். அதை விடக் குறைந்த பணத்தில் நான் ஓர் அடிமையையே விலைக்கு வாங்கி விடுவேன்“ என்றார் செல்வந்தர்.
    அதைக் கேட்டுப் புன்னகைத்த பிளாட்டோ, “நீங்கள் சொல்வது சரிதான். இதைவிடக் குறைந்த பணத்திற்கு நீங்கள் ஓர் அடிமையையே வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், அதன் பிறகு பாருங்கள், உங்கள் வீட்டில் உங்கள் மகனையும் சேர்த்து இரண்டு அடிமைகள் இருப்பார்கள்“ என்றார் பிளாட்டோ.
   அதைக் கேட்ட செல்வந்தர் உறைந்து போனார்.

-படித்ததைப் பகிர்ந்தேன்-
அருணா செல்வம்.

15 கருத்துகள்:

  1. வணக்கம்
    நகைச்சுவை மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. சரியான பதிலடி ! சிந்திக்க வைக்கும் சிறப்பான நகைச்சுவை
    வாழ்த்துக்கள் தோழி .

    பதிலளிநீக்கு
  3. பொருள் புதைந்த நகைச்சுவை!
    மிகவும் ரசித்தேன். சிரிப்புடன் சிந்தனைக்கும் விருந்து.

    வாழ்த்துக்கள் தோழி!

    நலமா தோழி!... ஊரில் உறவுகளும் நண்பர்களும் நலம் தானே...

    பதிலளிநீக்கு
  4. பெரிய அறிஞரின் வார்த்தைகள் அல்லவா...
    பொருள் பொதிந்து கிடக்கிறது..
    சிந்தையைத் தூண்டும் அருமையான நகைச்சுவை..

    பதிலளிநீக்கு
  5. உண்மையை நகை சுவையுடன் சொல்லி இருக்கீறீர்கள்!!!!

    பதிலளிநீக்கு
  6. சிந்திக்க வேண்டிய விசயம்

    பதிலளிநீக்கு
  7. அருமையான இதுவரை அறியாத கதை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. சிந்திக்கவைத்த சி(ரி)றப்பான பகிர்வு. நன்றி அருணாசெல்வம்.

    பதிலளிநீக்கு
  9. சேவைக்கேற்ற பணம் தரவேண்டும் என்பது பலருக்குப் புரிவதில்லை

    பதிலளிநீக்கு
  10. சிந்திக்கும்படியாகவும் உள்ளது..

    பதிலளிநீக்கு
  11. ஆஹா! பிளாட்டோ போன்ற அறிஞர்களின் சமயோசித புத்தியை என்னவென்பது. சிறப்பான பகிர்வு

    பதிலளிநீக்கு
  12. அறிவின் அருமை
    அறியாப் பணத்தில்
    அமிழும் மூடனின்
    அகக்கண் திறக்க
    ஆயிரம் பிளேட்டோ
    அவதரித்தாலும்
    அறிவுசார் நிலைக்கு
    அவன் வருவானோ...?

    நல்ல பதில்
    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு