தீபாவளி அதுவுமா காலையிலிருந்து கொஞ்ச நேரம்
கூட ஓய்வில்லாமல் உழைத்தது உடம்புக்கு அலுப்பாக இருந்தது மாலாவிற்கு. படுத்துத்
தூங்கி எழுந்தால் தான் இந்த அலுப்பு போகும். எப்பொழுது படுக்கலாம் என்று
காத்திருந்தவளை அவளின் மகள் நித்தியா விடவில்லை.
நரகாசுரன் கதையை முழுவதுமாகச் சொல்லிவிட்டப்
பிறகும் “அம்மா இன்னும் ஒரு கதை சொல்லும்மா...“ என்று கெஞ்சினாள் குழந்தை.
“இன்னைக்கு இவ்வளவு தான் கதை. பேசாமல் தூங்கு“
என்று சொல்லிவிட்டு போர்வையை ஒழுங்கு படுத்திவிட்டு மாடியிலிருந்து கீழிறங்கும்
பொழுதே நித்தியா “அம்மா...“ என்று அழைத்தாள்.
மாலாவிற்கு கோபம் தலைக்கேறியது. என்ன செய்ய
முடியும்? கொஞ்சம் கொபமாகக் கத்தினாலும் நித்தியா அழத்தொடங்கி விடுவாள்.
படுக்கையில் கதை சொல்லி தூங்கவைத்துப் பழகிவிட்டது எவ்வளவு தவறு என்று தன்னையே
நொந்து கொண்டாள்.
“அம்மா... எனக்குத் தூக்கம் வரலை... இன்னொரு
கதை சொல்லும்மா... ப்ளீஸ்ம்மா...“ அவள் கெஞ்சியதால் திரும்பவும் ஒரு
குட்டிக்கதையைச் சொல்லிவிட்டப் பிறகும் நித்தியா கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டே
இருந்தது எரிச்சலுட்டியது. “நித்தியா...தூங்கும்மா... நானும் தூங்கனும். எனக்கும்
டையாடா இருக்கிறது“ என்று சொல்லி மகளின் நெற்றியில் முத்தமிட அவள், “சரிம்மா...
ஆனால் எனக்கு ஒரு டம்ளர் தண்ணீ கொடு“ என்றாள். தண்ணீரைக் கொடுத்துவிட்டு
கீழிறங்கிய பொழுது “அம்மா... “ என்றழைத்தாள் நித்தியா..
திரும்பவும் மேலேறி வந்த மாலா.. “இன்னும்
என்னடி வேண்டும்...?“ பொறுமையிழந்து கேட்டாள். மகள் “வந்தும்மா... சும்மா தான்...“
சிரித்தாள். மற்ற நேரமென்றால் தானும் அவளைக் கொஞ்சி சிரிப்பாள். இன்று
முடியவில்லை...
கோபத்தை அடக்கிக் கொண்டு “நித்தியா பேசாம
தூங்கு. இதுக்கு மேல என்னால ஒன்னுமே செய்ய முடியாது. இனிமே உனக்கு எதாவது வேண்டும்ன்னா
“அம்மா“ன்னு கூப்பிடாத. அப்படி கூப்பிட்ட எனக்கு கெட்ட கோபம் வரும். “அப்பா“ன்னு
அப்பாவைக் கூப்பிடு... என்ன புரியுதா...?“ மாலா கோபமாகச் சொல்லவும் குழந்தை
பயந்துவிட்டாள். “சரிம்மா..” என்று தலையை ஆட்டினாள்.
அப்பாடா... என்று நிம்மதியாக படுத்த இரண்டு
நொடியில் “அப்பா...” என்று
அழைத்தாள் நித்தியா. மாலா கண்களை மூடிக்கொண்டாள். வேறு வழியில்லாமல் அப்பாதான்
போனர்.
போனவர் சிறிது நேரத்திலேயே வந்து மாலாவிடம்
சொன்னார். “நித்தியாவிற்கு அம்மா வேண்டுமாம்... எங்கிட்ட சொல்லி அம்மாவை அனுப்பச்
சொன்னாள்.“ சொல்லிவிட்டு படுத்துக் கொண்டார்.
மாலா வேறு வழியில்லாமல் பெருமூச்சியுடன் தன்
மகளிடம் சென்றாள்.
அருணா செல்வம்.
உலகில் எந்தப் பொருளுக்கும்
பதிலளிநீக்குஈடு இணை இருக்கும்
அம்மாவுக்கு மட்டும் அம்மா மட்டுமே
மனம் கவர்ந்த கதை
தொடர வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி இரமணி ஐயா.
தாயின் அரவணைப்பு இதம்
பதிலளிநீக்குதேடும் தளிரிது ...
அந்த வெப்பம் கிடைத்தால் தான்
பாதுகாப்பாக உணரும்....
அழகான கதை நண்பரே.
உண்மைதாங்க
நீக்குநாம் வளர்ந்த பிறகும் மனம் தேடுகிறதே...
தாயிற்கு ஈடாக எதைச்சொல்ல...?
நன்றி நண்பரே.
கதை மிகவும் அருமையாக இருந்தது சில நிமிடங்கள்
பதிலளிநீக்குஎன் தாயையும் நினைத்துக் கண்கள் கலங்கி விட்டது சகோதரி :(
மிக்க நன்றி சிறப்பான பகிர்வுக்கு .
வளர்ந்தாலும் நம் தாயிற்கு நாம் குழந்தைகள் தான்.
நீக்குநன்றி தோழி.
haaa haaa....
பதிலளிநீக்குnalla kathai....
நன்றி நண்பரே.
நீக்கு(நல்லா சிரிக்கிறீர்கள்!!)
அம்மாவிற்கு ஈடு இணை ஏது...? மிகவும் நல்ல கதை...
பதிலளிநீக்குநன்றி...
tm4
அவள் இணையில்லா சொர்க்கம்..
நீக்குநன்றி தனபாலன் ஐயா.
குழந்தை குசும்பு! சின்னகுழந்தைகள் இப்படித்தான் சில சமயம் அடம் பண்ணும்! (என்னோட சொந்த அனுபவம்)
பதிலளிநீக்குஅதை ஏன் சொல்லுறீங்க...
நீக்குநான் பண்ணியக் குசும்புகளை என் அம்மா சொல்ல சொல்ல
எழுதுகிறேன்.
நன்றி சுரேஷ் ஐயா.
என் அம்மாவின் ஞாபகம் அதிகமானது.
பதிலளிநீக்குபிரிந்திருக்கும் பொழுது எனக்கும்
நீக்குஞாபகம் அதிகமாகத் தான் தெரிகிறது சசிகலா.
நன்றி.
கதை அருமையாக இருந்தது...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி ரெவெரி சார்.
தீபாவளி அம்மா ஸ்பெசல் கலக்கல்
பதிலளிநீக்குமிக்க நன்றி ஹாரி.
நீக்குஅம்மாவின் இடத்தை யாரும் நிறைவுசெய்யமுடியாது என்பதை அழகாகச் சொன்னீர்கள்..
பதிலளிநீக்குஇருந்தாலும்..
என் மனதில் தோன்றிய கேள்வி.
பெண்குழந்தைகளுக்கு அப்பாதானே அதிகமா பிடிக்கும்
ஆண் குழந்தைகளுக்கு அம்மாதானே அதிகமா பிடிக்கும்
முனைவர் ஐயா... நீங்கள் அறியாதது ஒன்றும் என்னிடம் இல்லை.
நீக்குஆனாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் குழந்தைகளுக்கு முதலில் தாயைத்தான் பிடிக்கும்.
ஆனால்..
தந்தைக்குத் தான் முதலில் பெண் குழந்தையைப் பிடிக்கும். ஒரு தந்தை தன் குழந்தையிடம் தன் தாயைக் காண்கிறார். அதனால் பெண் குழந்தைகள் அதிக ஈடுபாடுடன் தந்தையிடம் ஒட்டிக்கொள்கிறார்கள்.
அம்மா என்று சொல்லும்போதே மனம் நெகிழ்கிறதே....அந்த வார்த்தைக்கு உள்ல சக்தி எங்கும் எதிலுமில்லை !
பதிலளிநீக்குஎன் இனிய தோழி ஹேமா...
நீக்குநிங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.
நன்றி.
great thinking,i like it very much,I miss my muummy now, i have very sad feelings
பதிலளிநீக்குI like it very much,great thining, i miss my mam, so, i have sad feelings
பதிலளிநீக்குசகோதரி... உங்களின் கவலை மிகப்பெரியது.
நீக்குகவலைப்படாதீர்கள். உங்கள் தாய் மற்றவர்கள் ரூபத்தில் உங்கள் அருகிலேயே இருக்கிறாள் என்று நினைத்து
மற்றவர்களிடம் அன்பைச் செலுத்தினாலே அந்த இழப்பை ஓரளவிற்கு ஈடு செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.
நன்றி சகோதரி.
அம்மாவுக்கு இணையேது.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
nalla kathai.Thain ththuvam namakku theriyavillai.
பதிலளிநீக்கு